புதன், 30 செப்டம்பர், 2015

துளைத்துத் துளைத்துத் தூளாக்குங்கள்.



     பெண்கள் அடுப்படி முதல் ஆட்சி செய்யும் அளவு வரை உயர்ந்தாலும் அவர்களை காட்சிப்பொருளாக்கும் கயவர்களும், புழுவைப்போல் பார்க்கும் பொறுப்பில்லாத ஆண்களும் நல்லவர்களாக நடமாடுகிறார்கள்.   பெண்கள் பேசும் வார்த்தைகளை இரண்டு அர்த்தங்கள் கொண்டு பார்க்கும் பதர்களோடும் நாம் உலவிக் கொண்டு தான் இருக்கிறோம்.  ஆண்களுக்குப் பெண்கள் எதிரியல்லவே, நல்ல சகோதரர்கள். கடமையுணர்வு கொண்ட தந்தை. பெண்மையை மதிக்கக்கூடிய கணவன், நல்ல நட்பு வட்டங்கள், மேலும் உடன்பிறவா அருமை சகோதரர்கள் இவர்களும் ஆண்கள்தானே?, ’ ’’மகளைப்பெற்ற தந்தைக்கு மட்டுமே தெரியும் முத்தம் காமத்தில் சேராதது என்று’’ திரைப்படப்பாடல் ஆசிரியர் நா.முத்துக்குமார் அவர்களின் இந்த வரிகளைக் கேட்கும் போதெல்லாம் எனக்குள் ஒரு கேள்விக்குறி இதில் சேராதவரும் உளரே என்று.



            ஒரு பெண் மிகவும் ஏழ்மைப்பட்டவள்.  அது ஒன்று தான் அவள்  செய்த தவறு. தற்பொழுது அவளுக்கு அகவை முப்பத்து ஒன்று ஆகும். குழந்தைகள் ஆறு, முதல் பையன் நான்காம் வகுப்பும். இரண்டாவது பெண் மூன்றும் வகுப்பும் படிக்கின்றாள். அவளுக்கு தொடர்ந்து சிறுநீர் வெளியாகிறது. மருத்துவப் பரிசோதனையின் பொழுது இவள் மனதளவில் பாதிக்கப் பட்டிருப்பதாக மருத்துவர் கூறுகிறார்.


 அடுத்து முதல் வகுப்பில் ஒரு பையன் அடுத்தடுத்து இரு பெண்கள் கையில் ஒரு ஆண்குழந்தை அது என்ன குழந்தை பெறும் இயந்திரமா? ஒரு குழந்தை பெற்றெடுக்க ஒரு பெண் படும்பாடு, அவள் செய்யும் தியாகங்கள் அவள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் தான் எத்தனை? எத்தனை? அவளின் பலம் எந்த அளவிற்குக் குறையும் அவள் எடுத்துக்கொள்ளும் மருந்துகள் தான் எத்தனை?
எத்தனை? அவள் தவிர்த்த உணவுகள் தான் எத்தனை? அனைத்து வேதனைகளுக்கும் எடுக்க வேண்டிய கவனம் எவ்வளவு முக்கியம்? இத்தனை வேதனைகளையும் இவளுக்கு இலகு தான். தன் கணவன் வீட்டில் இருந்து கொண்டு சுகம் பெற..குழந்தை பெற்ற ஐந்தே தினங்களில் அவள் பிழைப்புக்குப்போக வேண்டும். நீ பிச்சை எடுத்தாவது எனக்கும் எனது குழந்தைகளுக்கும் சாப்பாடு போடு என்று கூறி வீட்டில் அமர்ந்திருக்கும் கணவன். ஆனால் அவளுக்கோ உடல் உறுப்புக்கள் பிரிந்து பின் இணைத்தது போல்  உணர்வு. நடக்கவும் வேலை செய்யவும் குறைந்தது பதினாறு தினங்களாவது வேண்டும். அதனால் தான் முன்னோர்கள் பதினாறாம் நாள் குழந்தைக்கு புண்ணியதானம் செய்தார்கள். அதன் பிறகு தான் வீட்டிற்குள் வரவேண்டும். வந்தால் வீட்டில் வேலை செய்ய வேண்டுமே அந்த பதினாறு நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்பதால் தான்.  பிள்ளை பெறுவதற்கே பிறவி எடுத்த அந்த ஆண்களை என்ன செய்வது? சுட்டு விடலாமா? அல்லது தீப்பிழம்பில் தீய்த்துத் தான் விடலாமா? தீய்ந்து போகட்டும் தீயவர்கள் மட்டும் என்று சாபம் தான் விடலாமா? வலி கொடுத்தவனுக்கு வலி கொடு. இதில் மிகக் கொடுமையானது. என்ன தெரியுமா? அவர்கள் குழந்தைகள்  படும் பாடும்
அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளும் சொல்ல இயலாதது யாருமற்ற குழந்தைகளிடம் இருந்து மாறுபட்ட தெரிகிறார்கள். ஒரு பெண் பாதிக்கப்படும் பொழுது, அவள் சார்ந்தோர் மற்றும் சமுதாயமும் பாதிக்கப்படுகிறது. அவள் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டால் மேலும் ஆறுநாட்கள் ஓய்வு வேண்டும் என நினைத்து அந்த நாட்களில் குழந்தைக்கு உணவு  வேண்டும் அந்த குழந்தை பெருக்கிக்கு, குடும்பக் கட்டுப்பாடு செய்யச் சொல்ல அவளுக்கு பயம். அவன் நிலை மறக்கடித்து, அவனை மருத்துவமனை அழைத்து  சென்றால் தான் உண்டு.  
                   

 தாய்மை அடைவது அவரவர் செய்த புண்ணியம். இது எனக்கு செவிவழிச் செய்தி, இந்தத்தாய்  படும் வேதனை யார்  செய்த புண்ணியம். கால்கள் அசந்து கண்கள் சுருங்கி, வயிறு பசித்து, கையில் குழந்தை, குழந்தைக்குப் பால் வேணும் நடந்தே தான் ஆகவேண்டும். அகவை ஒன்பது முதல் ஒன்றரை வயது வரை உள்ள தன் குழந்தைகளுக்கு உணவு வேணும். தன் குழந்தை பெருக்கிக் கணவனுக்கு அனைத்தும் வேணும். இத்தனையும் வேணும் அவளுக்கு பிரசவமாகி ஐந்தே நாட்களில். இவள் செய்வது சாதனையா? அல்லது? அவள் தேடிய வேதனையா? மனது வலிக்கிறதா? நண்பர்களே, நேரில் பார்த்துக் கொண்டிருக்கும் நான் படும் வேதனையைச் சொல்லவோ வார்த்தைகள் கிடைக்கவில்லை.


 பணிக்குச் செல்லும் பெண்களை மட்டும் விட்டு வைத்ததா இந்த சமூகம். அவர்கள் பெறும் ஊதியம் எவ்வளவு என்று எழுத்தாக மட்டும் தான் அவள் பார்க்க முடியும். ஊதியப் பதிவேட்டின் உதவியால். ''ஆள்பாதி ஆடை பாதியாக'' அடுக்குமாடி வீடும் அழகான மகிழ்வுந்தும் நம் பார்வை படும்படி இருந்தாலும் அவளது மகிழ்வானது சாம்பல் பூத்த நெருப்பாகத்தான் இருக்கிறது.  தனது மாத ஊதியம் அரைக்கோடியே ஆனாலும் கணவனின் அனுமதியோடு தான் அவளின் தேவை நிறைவேறும் பணம் கறக்கும் அட்டையைப் பயன்படுத்திப் பழக்கப்படாதவள் அவள். தனக்கு மனைவியாக, பொன் முட்டை இடும் வாத்தாக, பிள்ளைகளுக்கு நல்ல தாயாக, மாமியாருக்கு மருமகளாக,  இழுத்து இழுத்து ஆங்காங்கே இடை தெரியாமல் ஆடையுடுத்தி குனிந்ததலை நிமிராமல் பணிக்குச் செல்ல வேண்டும். நம்ப முடியவில்லையா? ஆனால் நடந்து கொண்டிருக்கும் உண்மை


.பெண்களை அடிமைப்படுத்தியவர்களும் மாய்ந்து 
போகவில்லை விந்தை மனிதர்களும்
புதுப்பிக்கப் பட்டுள்ளனர்.   முண்டாசுக்கவியே!
நீர் இங்கு இல்லாமல் போனீர் 
தப்பித்துக் கொண்டனர் இந்தப் படுபாவிகள்.
 

தன் பெண்ணையே பாழ்படுத்த நினைத்த கயவனொருவன் அவன் உடம்பில் இருப்பது எலும்பும் தோலும் தான். நடப்பதற்கே திடமில்லாதவன். இந்த சுயநலம்  மிக்கவர்களால் பாதிக்கப் படுபவர்களும் உண்டு. மிகவும் ஏழ்மையில் உள்ள ஒரு குடும்பம் மொத்தம் ஒன்பது குழந்தைகள். அதில் ஏழாவதாகப் பிறந்த அவள் பெயர் இளஞ்சியம். பத்து வயது மட்டுமே நிரம்பிய அவளின் நிலை, இன்று எப்படி உள்ளது எனத் தெரியுமா அவள் பாலியல் செயல்களுக்கு தூண்டப்பட்டு அவளின் சுதந்திரம் பறிக்கப்பட்டது. இது தொடர்ந்து நடக்க அவளது குடும்பச் சூழலும் ஓருகாரணமாயிற்று. நாற்புறமும் வேலி அதன் மேல் ஓர் கூரை அதற்குள் நான்கு குடும்பம் நடக்க வேண்டும். இவள் கண்ட காட்சிகள் இவளை மேலும் தூண்ட அந்த பாழ்படுத்திப் புழுவை இவள் அழைக்க நேர்ந்தது. இது தவறென அறியாத அந்த பேதையை கண்டு இன்று ஆண் பிள்ளைகளைப் பெற்ற தாய்மார்களெல்லாம்  அஞ்சுகின்றனர். அவளைக் கண்டு தன் பிள்ளைகளை காத்துக் கொள்ளும்  நிலையில் இருக்கின்றனர். இதைக்கண்டு எப்படி பொறுப்பது? இதை நினைத்து ஆயிரம் கூர் ஆணிகளால் இதயத்தில் பாய்ச்சி இழுப்பது போல் இதயம் வலிக்கிறது. இந்த.........மனிதர்களை, மதியில்லாதவர்களை மரணத்தில் மாய்க்க வேண்டும் எனத் துடிக்கிறது மனம். .


இளஞ்சியத்தின் பெற்றோரிடம் நாம் என்ன பேசினாலும் புரியாத நிலை. கையில் காசு இருந்தால் சிறுமூளை செயல் இழந்து விடும். பிறகு குழந்தைகள் பற்றி யாருக்குக் கவலை. இந்த குழந்தைகளை ஏன் பெறவேண்டும்? .
பருவமடையாத பசும்பேதையவள். இப்படிப்பட்டவர்களை என்ன செய்வது? இவர்களுக்கு என்ன பெயர் வைப்பது? மனதை ரணமாக்கும் கயவர்களை நசுக்கலாமா? துளைத்து மண்ணோடு மண்ணாக்களாமா? இந்த (31வயதுத்தாய் மற்றும்இளஞ்சியம்) இரண்டு நிகழ்வுகள் 50 வீடுகளுக்குள் நடந்தது .50க்கு 2 என்றால்
மொத்த எண்ணிக்கையில் (50;2 என்றால்) சிலிர்கிறது உடல் ..  

        குடும்பமென்பது ஒரு பெரிய வலைஅமைப்பு. சமூகத்தின் முதல்படி. ஒரு
குடும்பத்தில் ஒருபெண் சுதந்திரமாக அல்ல, ஒரு பெண்னாகக்கூட இல்லாமல்
கொத்தடிமைகளாக ஆக்கப்படுவது ஏன்? ஏன்? ஏன்? முதல் படியே சரி இல்லை
என்றால் முழுவதும் எப்படி சரியாக இருக்கும் .
                       
                            'ஒருபானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் '' 


என்பார்களே அதைப்போல ஒவ்வொரு குடும்பமும் முன்னேறினால் அந்த சமுதாயம் முன்னேறும், நாடும் முன்னேறும். ஒரு ஆண் அல்லது அந்தப் பெற்றோர் சமுதாயத்தின் அங்கம் இவர்கள் திருந்துவது எப்போது சமுதாயம் முன்னேறுவது தான் எப்போது ?.
                       
   இப்படிப்பட்டவர்களைப் பார்க்கும்பொழுது எனக்கு கற்புக்கரசி
கண்ணகியின் நினைவு தான் வருகிறது. நினைவால் தொன்றியது.
                     
                          ஓ...... பாறையே!
                          உருண்டை  பாறையே !
                          நல்லவரை விட்டுவிடு!
                          சமமாக எண்ணும் !
                          சகோதரர்களை விட்டுவிடு!
                          நல்ல தந்தையரை விட்டுவிடு  
                          நாசக்காரர்களை மட்டும் 1
                          நசுக்கிப்போட்டு விடு !
                          துரோகிகளை மட்டும் !
                          தூள் தூள் ஆக்கிவிடு !
என்று கத்த வேண்டும் போல் உள்ளது. 
         

  வகை(3 )   பெண்கள் முன்னேற்றம் குறித்தகட்டுரை
                    
                        வலைப்பதிவர்திருவிழா2015
                                         மற்றும்
                      தமிழ் இணையக்கல்விக்கழகம்
                                       நடத்தும்
       மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்2015க்காகவே
எழுதப்பட்டதுஇக்கட்டுரைஇதற்குமுன்எங்கும் வெளியிடப்படவில்லைஎன்றும்இப்போட்டிக்கான
முடிவுவெளியாகும்வரைவேறெங்கும் வெளியிடமாட்டேன்என்றும்உறுதிகூறுகிறேன்.
    

7 கருத்துகள்:

  1. தங்கள் படைப்பு நமது விழாத்தளத்தின் “போட்டிக்கு வந்த படைப்புகள்” பிரிவில் இணைக்கப்பட்டுள்ளது.
    பார்க்க - http://bloggersmeet2015.blogspot.com/p/contest-articles.html
    இன்று இரவுக்குள் பிற தலைப்புகளிலும் எழுதி அனுப்பலாம். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. அருமையான பகிர்வு சிறந்த கட்டூரை! வாழ்த்துக்கள்! நன்றி

    பதிலளிநீக்கு
  3. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
    உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
    "தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
    இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
    எல்லாம் கைகூடி வந்து
    என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
    தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோ வலைப்பக்கம் வந்தே பலநாட்கள் ஆகிவிட்டது,தாமதத்திர்க்கு வருந்துகிறேன் தங்களின் வாழ்த்துக்களுக்குநன்றி,நன்றி.

      நீக்கு
  4. இத்தீபாவளி நன்நாள் - தங்களுக்கு
    நன்மை தரும் பொன்நாளாக அமைய
    வாழ்த்துகள்!

    யாழ்பாவாணன்
    http://www.ypvnpubs.com/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோ வலைப்பக்கம் வந்தேபலநாட்கள் ஆகிவிட்டது தாமதத்திர்க்கு வருந்துகிறேன் நன்றி,நன்றி.

      நீக்கு