புதன், 30 செப்டம்பர், 2015

நேர்மறைவேண்டும்வேண்டும்.

நேர்மறை வேண்டும் வேண்டும்

வா என்று அழைத்திடவோ!
வாய் ஒன்றும் சும்மா இல்லை
சைகையால் தலையையாட்டும்
செல்பேசியோடு ஒன்றியாச்சு!
மதிப்பூட்டிய உணவுகள் செய்து
உண்டுகொண்டே ஓடுவதால்
நார்ச்சத்து நசுங்கிப்போச்சு
நவதாணிய உணவுகள் கூட
நவீனமயம் ஆகிப்போச்சு
கூட்டுக்குடும்பம் கேள்வியாச்சு
முதியோர் இல்லம் பெருகிபோச்சு
சித்தப்பா அத்தையெல்லாம்
சிலதூரம் தள்ளிப்போச்சு
எங்கேயோ யாரோபோல
அறிமுகம் செய்யும் காலம் வந்தாச்சு
நடை உடை மாறிப்போச்சு
நாம் முகம் சுழிக்க வழிஉண்டாச்சு
ராமாயண காலமெல்லாம்
ரதம்போல ஓடிப்போச்சு
விரும்பினால் வாழ்ந்திடுவோம்
இல்லையேல் நண்பர்களாவோம்
நெடுந்தொடர்கள் பார்த்துக்கொண்டு
அச்சச்சோ! அம்மம்மா! என்றே
கணவன் உண்ணும் உணவுக்கு பதில்
மோரை  ஊற்றிடும்
நிலையும் உண்டாச்சு!

வகை(4)முன்னேறிய உலகில்பண்பாட்டின் தேவை(புதுக்கவிதை)

வலைப்பதிவர்திருவிழா2015மற்றும்தமிழ் இணையக்கல்விக்கழகம்
நடத்தும்மின்தமிழ்இலக்கியப்போட்டிகள்2015க்காகவே எழுதப்பட்டது
வேறெங்கும் வெளியிடப்படவில்லைமேலும்போட்டிமுடியும்வரை
வேறெங்கும்வெளியிடமாட்டேன்என்று உறுதிகூறுகிறேன்.

செவ்வாய், 22 செப்டம்பர், 2015

புதுகையில்இருப்பதுதான் என்ன??????????தொடர்ச்சி(2)



பழையஅரண்மனைஎன்பதுநகரின்மையப்பகுதியில்அமைந்துள்ளது அதுதற்பொழுதுவணிகவளாகங்களாகமாற்றப்பட்டுஒருகோவில் (தட்சிணாமூர்த்திகோவில்)மட்டும்தான்நினைவுச்சின்னமாகஉள்ளது வீடுகளும்கடைகளும் உள்ளன.
             
                                 மாவட்ட ஆட்சியரகம் 

                               மாவட்ட ஆட்சியரக வளாகம் 
புதியஅரண்மனைதற்போதுமாவட்டஆட்சியரகமாக செயல்பட்டுவருகிறது.இதில்மாவட்டத்தில்உள்ளமுக்கிய
அலுவலகங்களும் இயங்கி வருகிறதுஇதுசுமார்100ஏக்கர்பரப்பளவு
கொண்டதாகும்.இதுதமிழகத்தில்எங்குமில்லாதஒருசோலைவனமாக காட்சியளிக்கிறது.



                  புதுக்கோட்டை சமஸ்தானத்தை திரு.ராஜாரகுநாத தொண்டைமான் அவர்கள் 1769 முதல் 1789 வரைஆட்சிசெய்தார்.




   புதுக்கோட்டைசமஸ்தானத்தை திரு.ராஜாவிஜயரகுநாத தொண்டைமான்அவர்கள் 1789 முதல் 1807 வரை ஆட்சிசெய்தார்.


                           புதுக்கோட்டைசமஸ்தானத்தை திரு.ராஜாவிஜயரகுநாதராய தொண்டைமான் அவர்கள் 1807 முதல் 1825 வரை ஆட்சி செய்தார்.


                          புதுக்கோட்டை சமதஸ்தானத்தை திரு.ராஜாரகுநாத தொண்டைமான் அவர்கள் 1825 முதல் 1839 வரைஆட்சி செய்தார்.



                               புதுக்கோட்டை சமதஸ்தானத்தை திரு.ராஜாராமச்சந்திர தொண்டைமான்அவர்கள் 1839 முதல் 1886 வரை ஆட்சி செய்தார்.



                        புதுக்கோட்டை சமதஸ்தானத்தை திரு.மார்த்தாண்ட பைரவ தொண்டைமான்அவர்கள்1886முதல்1928வரைஆட்சிசெய்தார்..



                    புதுக்கோட்டை சமதஸ்தானத்தை திரு.ராஜகோபால தொண்டைமான் அவர்கள்  1928 முதல் 3.3.1948 வரைஆட்சி செய்தார்


                குதிரை வீரர்கள்


             


       

       

           

             


           

நகரின்முக்கிய நினைவுச்சின்னங்கள்

     1)  நீதிமன்றம்


    2) த.சு.லு.ச.மேல்நிலைப்பள்ளி(டிஇஎல்சி)


 புவனேஸ்வரி அம்மன் ஆலயம்
சாந்தநாத சுவாமி ஆலயம்
அறியநாச்சியம்மன் ஆலயம்


அரசு மருத்துவமனை

     விருந்தினர்மாளிகை
    முதல் பேரூந்து

     பல்லவன்குளம்

      புதுக்குளம்

     மாட்சிமைதங்கிய மன்னர்கல்லூரி
    நகர்மண்டபம் (டவுன்ஹால் )
  நகராட்சி அலுவலகம்.

காலம் கருதி மேலும் படங்களும் விபரங்களும் பதிய இயலாக் காரணத்தால்
நட்பு உள்ளங்களே நீங்கள் நேரில் கண்டு மகிழ அழைக்கும் பதிவர் குழு
                                     

ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

புதுகையில்இருப்பதுதான் என்ன?????????

உலகத்தமிழர்களுக்கானபிரம்மாண்டபதிவர்திருவிழாவிற்கு
கட்டுரைகள்  கவிதைகள் எழுதிய  எழுதிக்கொண்டிருக்கின்ற நட்புள்ளங்களே !அனைவரையும் வாழ்த்தி வரவேற்றுத் துவங்குகிறேன் ,

           மயிலுக்கு தோகை அழகு!
           குயிலுக்கு குரல் அழகு !
           பதிவர்களுக்கு பதிவுதான் அழகு!
           உடலுக்கு உயிர் அழகு!
            புதுகைக்கு எது அழகு !

நண்பர்களே புதுகையின் அழகு சொல்லி மாளாத ஒன்று கண்டுகளிக்க வேண்டிய ஒன்று ,நான் சுருக்கமாகச் சொல்கிறேன் ,விரிவாகச்
சொன்னால்விழாவே முடிந்துவிடும் ,புதுகை மற்றும் புதுகையைச்
 சுற்றியுள்ள முக்கியமான செய்திகள் ஏராளம் !ஏராளம்!

                                       புதுக்கோட்டை மாவட்ட வரைபடம் 





                    புதுக்கோட்டை எல்லை ஆரம்பம்            



               
                             பிரகதாம்பாள் ஆலயம் 



திருச்சியில் இருந்து வரும்பொழுது புதுகையின் தொடக்கத்திலேயே 
இடதுபுறமாகஇந்தசிவாலயம்உள்ளதுஇதுமன்னர்கள்காலத்தில்
கட்டப்பட்டஆலயமாகும்சுவாமியின்பெயர்கோகர்ணேஸ்வரர்
அம்பாள்பெயர்பிரகதாம்பாள் (அரைக்காசுஅம்மன்)என்றும்கூறுவர்
 .இந்தக்காசுஅம்பாள் சன்னதியில்ஒருசிறுதொகைக்குவிற்கப்படுகிறது
இந்தஆலயத்தின் பின்புறம்உள்ளபிரகதாம்பாள்நகரில்தான்ஞானாலயா 
நூலகம்உள்ளதுஇங்குகன்னிமராநூலகத்தில்இல்லாதபுத்தகங்களும்
உள்ளன. ஆலயத்தின்அருகிலேயேதிருவப்பூர்முத்துமாரிஅம்மன்
ஆலயமும் அருங்காட்சியகமும்  உள்ளது .

அரைக்காசு 

                                               ஞானாலயாநூலகம்      





                 திருவப்பூர் முத்துமாரியம்மன் ஆலயம் 



                                அருங்காட்சியகம் 



இங்குநாம்,இதுவரைபார்க்காததும்பார்க்கவேண்டியதும்...... வந்துபாருங்கள் 
முதுமக்கள்தாழிமுதல்டைனோசர்வரைஉள்ளது  நண்பர்களேதொடரும்..........  எனக்கு அழைப்பு வந்துவிட்டதுநாம்  நாளை பார்ப்போம் நான் வரட்டுமா?.
படங்கள் கூகுளில் இருந்து நன்றி . 

ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

வலைப்பதிவர்திருவிழா

புதுகையில்நடக்கவிருக்கும்வலைப்ப்பதிவர்திருவிழாவிற்குஅன்பும் ஆதரவும்தொடர்ந்துதந்துகொண்டிருக்கும் எங்களின் நட்பு உள்ளங்களே1
உதவிசெய்து எங்களை உற்சாகப்படுத்தும் உடன்பிறப்புக்களே!
அருகில் இருந்து எங்களைஆர்வப்படுத்தும்அன்பு நெஞ்சங்களே!
அனைவருக்கும் விழாக்குழுவின் சார்பில்நன்றிகளும்வாழ்த்துக்களும்!
ஒவ்வொருகூட்டத்திலும் புதுத்தகவலும் தொடர்புகளும் தரும்வகையில்
கலந்தாய்வுகள்,எங்கள் அண்ணா  நா.முத்துநிலவன்அவர்களின்
தலைமையில்  சிறப்பாக நடந்துகொண்டிருக்கிறது கடவுளின் ஆசியுடன் அணுவின் அசைவையும் அவன் ஆற்றல் செயல்படுத்தும்
என்றநம்பிக்கையோடும்நண்பர்களின் அன்போடும் விழாவை மிக
 சிறப்பாகநடத்துவோம் வாருங்கள் .
                       ஆம் நண்பர்களே நீங்கள் கேட்பது எனக்குக் கேட்கிறது

  அப்புடி  என்னதாய்யா செய்யப்போறீங்க .............??????????ன்னுதானே .
உங்களுக்கு பயணம்செய்றது ரெம்பபிடிக்குமா?அப்ப புறப்படுங்க
 புதுகைக்கு .படிக்கிறது பிடிக்குமா?அதுக்கும் வழி செய்றோம் ,
கவிதை யில் புதுக்கவிதை எழுதுவீர்களா ?அப்புறம் மரபுக்கவிதயுமா ?
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் இல்லங்க ஐந்துமாங்காய் அட ஆமாங்க
உங்களின் திறமைக்கு விருந்து(போட்டிகள் )                      
1கணினியில் தமிழ் வளர்சி .

2.சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

3பெண்கள் முன்னேற்றம்

4புதுக்கவிதை

5மரபுக்கவிதை

பரிசுத்தொகை  எவ்வளவு அதுதானே உங்களின் கேள்வி சொல்றே,
மொத்தம் 50,000ஆயிரம் .
வெற்றியாளருக்கு" தமிழ்களஞ்சியம்   இணையம்" வழங்கும்  ஒருஅழகான
வெற்றிக்கே டயம் எப்டி நல்லாருக்கில்ல. ஆங் என்னங்கய்யா...?  உங்கள் நண்பர் நல்லா எழுதுவார் ஆனா ப்ளாக்லஇல்லையா? அட ஒருப்ளாக் ஆரம்பிக்க வேண்டியதுதான்  படைப்பாளர்களே பள்ளிக் குழந்தைகள்போல்
நீங்கள் துள்ளுவது தெரிகிறதுஉங்களின் படைப்பாற்றலுக்கு ஓர் விருந்து
உங்களின் வெற்றிக்குக் கேடயம் பரிசுகளும் பாசங்களும் உங்களுக்காக
வாருங்கள் புதுகைக்கு. அப்புறம் நாம எங்கவிட்டோ .பேசிக்கிட்டு இருக்கப்பிடிக்குமா ?கிட்டத்தட்ட 400முதல் 450பேர்களிடம் பேசலாம் வாங்க ,
சிறப்புரை பிடிக்குமா அட அதுவுஉண்டுள்ள நீங்கசாப்பிட்டுக்கிட்டே
பேசலாம் இல்லபேசிக்கிட்டேசாப்பிடலாம்சாப்பாடுன்னா சத்தான, ஆரோக்யமான , சுவையானசாப்பாடு புரதச்சத்து மாவுச்சத்து ,இரும்புச்சத்து
நல்ல கொழுப்புசத்து ,நார்சத்து,தாதுஉப்புக்கள்சேர்ந்தசெட்டிநாட்டுசாப்பாடு'
இதுமட்டுமா?நூல் வெளியீடு இருக்கு ,குறும்படம் வெளியீடு இருக்குஇன்னும் ஏராளம் இருக்கு புதுகையில் என்ன இருக்கு அடுத்தபதிவில்பார்ப்போம் .
தாங்கள் மேலும் விபரங்கள் அறிய அனுகவே ண்டிய முகவரி.
  blogersmeet2015.blogspot.com
valarumkavithai.blogspot.com.