அய்யா கவிஞர் பாரதிதாசன்அவர்களின் வாழ்த்துக்களுடன்
இந்தக் கவிதையை தொடர்கிறேன்.

அகவை கூடி அசந்த போதும்!
அகங்கை கொண்டே அள்ளி அணைத்தாய்!
அன்பு காட்டி அமுதை அளித்தாய்!
பண்பு ஊட்டிப் பாசம் விளைத்தாய்!
சின்ன குழந்தையில் சீராய் நடக்க
நின் விரல் கொடுத்து நேர்த்தி செய்தாய்!
களிப்பாய் நீயும் காலம் அறிந்தே!
அளித்த கல்விக்கு அகிலம் இணையோ?
உதிரம் வற்ற ஊற்றி வளர்த்தாய்!
கதியாய் என்னை காத்துக்கிடந்தாய்!
அலைந்து திரிந்தே அல்லும் பகலும்
கலைத்தல் இன்றி கடமை செய்தாய்!
எனக்கு நீதான் எழில்மிகு தெய்வம்!
உனக்குப் பாரில் இணையும் உளதோ!
இன்னும் உன்றன் ஏற்றம் பாட
மின்னும் சொற்கள் என்முன் குவியும்!
தெய்வம் தேடித் திரிவோர் தமக்கும்!
உய்யும் வழியை உறைப்பேன் இங்கு.
தாயின் திருவடி கடவுளைக் காட்டும்
காயும் மனத்தின் கடுமை நீக்கும்
குடமுழுக்கு என்று கூவி மொழிவேன்!
சுடரென எண்ணித் தொட்டுத் தொழுவேன்!
தாயே உன்றன் தாள் களை நாளும்
சாயும் பொழுதில் தாங்கும் உன்னருள்
முன்னே மொழிந்த முதுமொழி யாலே!
பின்னே அடைந்தேன் பெயர்கள் பலவே!
நடக்கும் தெய்வம் நம்முன் இருக்க
நடக்காத தெய்வம் நாடல் ஏனோ-?
அன்பின் ஊற்றாய் அன்னை உருவம்
என்றும் போற்றி இசைப்பாய் நெஞ்சே.!
வணக்கம்
பதிலளிநீக்குசகோதரி
தாய் அன்பு போற்றும் பாமாலை பாடினாய்
தாரக மந்திரத்தின் உற்பொருளை நான் அறிந்தேன்
தரணி போற்றும் தாயவளை மகின்மையை
பாடிய விதம் கண்டு மகிழ்ந்தேன்
நான்றாக உள்ளது ஒவ்வொரு வரிகளும் தொடருங்கள் ...பகிர்வுக்கு நன்றி
வாழ்க வளமுடன்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சகோ நான் திருத்தம்செய்து புதுப்பித்தேன் அப்பொழுது
நீக்குஇந்தமாற்றம் நிகழ்ந்துள்ளது கில்லர்ஜி கருத்தும் இவ்வாறுதான் ஆகிவிட்டது (சாரி)சகோ
தாய் அவளுக்கு கவிதை பாடுவது அவளுக்குப்பின்
நீக்குபடத்திற்கு மாலைபோடுவது அமாவாசை விரதம்
இருப்பது இவ்வாறெல்லாம் பிதற்றுவதை நம் சமுதாயத்தில் சிலர் விடவேண்டும் அல்லவா
சகோ? நன்றி.
மிக அருமை சகோதரி..கண்ணில் நீர்கோர்க்க வைத்த அன்னை அன்பின் கவிதைக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குசகோதரியின் முதல்வருகையும் வாழ்த்தும் எனை
நீக்குமகிழ்விக்கிறது அம்மாஇந்தௌறவுக்கு ஈடேதும்
உண்டோ?
பதிலளிநீக்குவணக்கம்!
அன்னையின் அன்பை அளிக்கும் கவிபடித்து
என்னை மறந்தே எழுதுகிறேன்! - பொன்னென
உள்ளமொளிர் மாலதி ஒண்டமிழ்ப் பாக்கலையில்
துள்ளிவிளை யாடுக துய்த்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
ஐயாவணக்கம் எல்லாம் தங்களின் ஆசிர்வாதம்.
நீக்கு//நடக்காத தெய்வம் நாடல் ஏனோ-?//
பதிலளிநீக்குசிறப்பு.... தொடர வாழ்த்துகள்...
தாயை மறந்து தெய்வம் தேடி கோவிலுக்குச்
நீக்குசெல்பவர்களுக்காகதான்சகோ.
அன்பின் ஊற்றாய் அன்னை உருவம்....அருமை.
பதிலளிநீக்குஅந்தான்பிற்கு அள்வேதும் உண்டோசகோ.
நீக்குநான் நேற்று உடன் போட்ட கருத்துரையோடு மாடலை மாற்றி விட்டீர்கள் போலயே... கருத்துரையும் போய் விட்டதோ அதனோடு.
பதிலளிநீக்குஆம் சகோ தங்களின் கருதைவெளியிட்டேன்ஆனால்
நீக்குதளத்தில் இல்லை..இது எப்படிஎன்று
எனக்குத்தெரியவில்லை சகோ திருத்தம் செய்து
புதுப்பித்தேன் அப்பொழுதுஇப்படி ஆவதற்கு
வாய்ப்புள்ளதா............ வருந்துகிறேன்(சாரி) சகோ.
...///நடக்கும் தெய்வம் நம்முன் இருக்க
பதிலளிநீக்குநடக்காத தெய்வம் நாடல் ஏனோ-?////
உண்மை
நன்றி சகோதரியாரே
ஆம் சகோ நன்றி.
நீக்குஅன்னைக்கு அருமையான பாமாலை.
பதிலளிநீக்குஅன்னைக்குப்பிறகுதானே அனைத்தும் அனிதா
நீக்குஅன்பின் முகவரியாம் அன்னைக்கு சாற்றிய
பதிலளிநீக்குஇன்னமுதப் பாட்டும் இசைந்து
அகவல் முயற்சியா தோழி. அருமை அருமை தொடருங்கள்.
ஆமாமிப்பொழுதுதான் தொடங்குகிறேன் நன்றி தோழி
பதிலளிநீக்குஅன்னையின் இன்னல்கள் எல்லாம் அமுதென்று
பதிலளிநீக்குஎண்ணியே இன்புறுவாள் இசைந்து!
அம்மாவின் அன்பில் அருமையான அகவை பா. தாசன் அவர்கள் ஆசியுடன் தொடர வாழ்த்துக்கள் ...!
தாமதத்திற்கு வருந்துகிறேன் தொடர்கிறேன்சகோதரி
நீக்குமரபில் தடம் பதிக்க வாழ்த்துகிறேன்.
பதிலளிநீக்குநன்றி.
தாமதத்திர்க்கு வருந்துகிறேனையா முயற்சிக்றேன்
நீக்கு
பதிலளிநீக்குஐயா வணக்கம்!
இன்று உங்கள் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.
http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post_9.html
மகிழ்ச்சிஐயா.
நீக்குவணக்கம் சகோதரி!
பதிலளிநீக்குஅன்னையின் அன்பை அருமையானதொரு
அகவலாற் பதித்தீர்கள்!
உளந்தொட்டது! வாழ்த்துக்கள்!
ஐயா பாரதிதாசன் அவர்களின் இன்றை வலைச்சர அறிமுகத்துடன் மீண்டும் இங்கே வந்தேன்!
நன்றிதோழி தங்களின் வலைப்பக்கம் வருகிறேன்.
பதிலளிநீக்கு