புதன், 31 டிசம்பர், 2014

உறவுகள் வேண்டும்.


            குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
என்பது எவ்வளவு உண்மை, இக்கால சந்ததியினர்‘
பெருமபாலும் தாத்தா,பாட்டி, சித்தப்பா அத்தை 
போன்ற உறவுகளை மறந்து கொண்டிருக்கின்றனர்.‘
இன்னும் சில காலங்களில் ஏதோ ஓர் இடத்தில்
பார்க்க நேரிடும்போது இவர்தான் உன் சித்தப்பா
அல்லது அவர்தான் உன் சித்தப்பா என்று
கூறும் நிலை தொலைவில் இல்லை.

            உறவுகளோடு வளரும் குழந்தையின் மனநலம்
மற்றும் உடல்நலத்தின் பலம் நமக்கு தெரிந்ததுதான்
இவற்றை மேம்படுத்த நாம் செய்யவேண்டியது 
ஒருசில காரணங்களே  உறவுகளை சொல்லிவளர்ப்பது
மேலும் முக்கியமான நாட்களில் அவர்களிடம் 
ஆசி பெறச் செய்வது விழா நாட்களில் அன்பினை
 பரிமாரிக்கொள்வது போன்ற செயல்களோடு விரிசல்கள் 
இல்லாமல் பார்த்துக்கொள்வது (இது சாதாரணமல்ல ) 
விரிசல்கள் விரிவடையாமல் இருக்கவும் முதலில்
பெண்கள் நினைக்கவேண்டும்.

 எல்லாவற்றிற்கும் பெரியவன் இறைவன்
பணிவு உயர்வுக்கு வழி என்கிறது வேதங்கள் 

 தொலைக்காட்சி முன் அமர்ந்து தேவையற்ற தொடர்களை
 பார்ப்பது அர்த்தமில்லாமல் பேசிக்கொண்டிருப்பது இவற்றை நாம்
தவிர்த்து நல்ல நல்ல செய்திகளை சொல்வதற்கும், 
உறவுகளை நேசிப்பதற்கும் கூட தொடர்கள் நம் தொலைக்காட்சியில்
ஒளிபரப்பப்படுகிறது. ( உறவுகள் தொடர்கதை, என் கணவன் 
என் தோழன் )

 விட்டுக்கொடுப்பது எல்லா நேரங்களிலும் நமக்கு 
வருவதில்லை, ஆனாலும் சில காரணங்களுக்காகவாவது
நாம்  விட்டுக்கொடுத்து செல்லத்தான்வேண்டியுள்ளது.
இது மகத்தான விளைவுகளை நமக்கு தர மறப்பதில்லை.   
நம் உறவுகளை நேசிப்பதை விட்டுவிட்டு,  எங்கேயோ 
யாருக்கோ நாம் செய்யும் உதவி பெயருக்காகவும், ‘
புகழுக்காகவும் இல்லாமல் நம் உறவுக்காக இருப்பது 
மட்டுமின்றி நம் உறவுகளையும் பலப்படுத்தும். 
உறவுகள் நமக்கு என்ன செய்தது என்ற கேள்வியே நமக்குள்
வழக்கமாகி வருகிறது.  உறவுகளுக்காக நாம் என்ன
செய்தோம்.  என்பதுதான் மேல்,   என்பது எனது கண்ணோட்டம்.
என்பதை பகிர்ந்துகொள்வதோடு 

 நடந்த நல்லவற்றை கூட்டிக்கொண்டு 
கசப்பான அனுபவங்களை கழித்துகொண்டு
எதிர்காலத்தினை வகுத்துக்கொண்டு 
2015ல் நமது சாதனைகளை பெருக்கிகொண்டு 
அனைவருக்கும்இனிய புத்தாண்டு 
நல்வாழ்த்துக்கள் 

ஞாயிறு, 21 டிசம்பர், 2014

விஜய் தொலைக்காட்சியில்












இன்று  நீயா நானா நிகழ்ச்சியில் புடவைமோகம் கொண்டவர்கள், புடவைமோகம் தவறானது என்ற தலைப்பில் கோபிநாத், விறுவிறுப்பாக நிகழ்ச்சியினை நடத்திக்கொண்டிருந்தார்.  அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவரும் தெரிவித்த கருத்துக்க்ளில் சிலர் சொன்ன கருத்துக்கள் எதார்த்தமானதாகவும், வியப்பானதாகவும் இருந்தது.  ஒரு புடவை எடுப்பதில் அதனை உடுத்துவதில், ரசனை இருக்கவேண்டும்தான் ஆனால் மோகம் என்பது தவறான ஒன்றாக எனக்குப்படுகிறது.  

               புடவை என்பது நமது  பாரம்பரிய உடை பெண்களுக்கு அழகை தரும் மிக அழகான உடை,  இதையே தற்பொழுது கவர்ச்சி உடையாக அணியும் கலாச்சாரம் மாறிக்கொண்டு வருகிறது.   தொலைக்காட்சிகளிலும் சென்னை போன்ற மாநகரங்களிலும் இவர்கள் உடுத்தியிருப்பது புடவைதானா என்று யோசிக்கும் அளவிற்கு உடுத்தும் விதம் மாறிக்கொண்டிருக்கிறது.  

               புடவையை அலமாரியில் அடுக்கிவைப்பது அதை கலையாமல் கையாளுவது ஒரு கலைதான், ஆனால் வி.தொ.காயில் புடவையில் மோகம் கொண்டவர்கள் கூறிய கருத்துக்கள், 

 •  புது புடவை எடுத்தால் அததைப்பார்த்தவுடனே ஒரு கிளு கிளுப்பு ஏற்படும்.

 •  அலமாரியில் அடுக்கிவைத்த புடவைகள் சரியும்பொழுது சாக்லேட் சவரில் நனைவதுபோல் இருக்கும்-

 •  புதுப்புடவை அல்லது கட்டாத புடவையை பார்த்தவுடனேயே ஏதாவது ஒரு காரணத்தை கொண்டு கடைக்குச்சென்று வருவது.

•    டென்சன் வரும்பொழுது புடவைகளை  கலைத்து பின் மடித்துவைக்கும்பொழுது டென்சன் குறையும்.

•    பட்டுப்புடவையின் வாசனையே ஒரு கிளு கிளுப்பை உருவாக்கும்.

•    சேலை பார்த்துப்பார்த்தே பழசாயிரும்.  

•    அடுக்கிய சேலைகள் சரியும்பொழுது நம்மை ஆசிர்வதிப்பதுபோல் இருக்கும்.

•    அடுக்கிவைத்து கலைக்காமல் எடுப்பது பிடிக்கும் இதற்கு என் கணவர் உனக்கு சான்றிதழ் தரப்போகிறார்கள் என்று கூறுவார்.  

             கோபிநாத் கூறியது.

          ( நான் உங்களுக்கு சர்டிபிகேட் தரம்மா )

         இப்பதான் சார் எனக்கு மனது நிறைவாயிருக்கு

•      நான் கட்டுற புடவை மாதிரி மற்றவங்க கட்டக்கூடாது.  

•      என் புடவை பார்த்து நாலு பேர் கருத்துச்சொல்லனும்.

•      அடுத்தவங்க எடுத்துக்கொடுக்கும் புடவையை வேறு ஒருவரிடம் கொடுத்துவிடுவேன்.  

•    நாத்தனார் மாமியாருக்காக எடுக்கும்போது ஏனோதானோ என எடுப்பேன். 

•    என் புடவையை என் மகளுக்கு கூட கொடுக்கமாட்டேன். 

•    நம்மைப்போல் நம்மைவிட உயர்பதவியில் இருப்பவர்கள் கட்டினால் சந்தோசம்.  ஆனால்  நமக்கு கீழே வேலைசெய்யும் துப்புரவு தொழிலாளி போன்றவர்கள் கட்டினால் மனது தாங்காது.  அடுத்தநாளே அந்தப்புடவையை ஒதுக்கிவிடுவேன்.


ஆள் பாதி ஆடை பாதி என்னும் பழமொழிக்கு ஏற்ப நாம் நாசுக்காக உடுத்திக்கொள்வது உண்டு  ஆனால் இப்படி பெண்கள் மோகம் கொண்டுடிருப்பது எவ்வளவு நேரத்தையும் மற்றவர்களின் மனதையும் புண்படுத்துவதாக உள்ளது.  

            நான் கட்டும் புடவையை நமக்கு கீழ் உள்ளவர்கள் கட்டக்கூடாது என்று கூறுவது எவ்வளவு அநாகரிகமான வார்த்தையோடு அல்லாமல் மனிதநேயமற்ற பேச்சு.  அதற்கு மிக அழகாக கூறினார் கோபிநாத்.  காந்திஜி படிக்கும்போது கோட் சூட் அணிந்து தான் வாழ்ந்தார் ஆனால் அவர் மாறவில்லையா, தனது கடைசி காலம் வரை அணிந்த ஆடை நாம் அறிந்தஒன்று-  இதில் புடவை எடுப்பதை புடவையை அடுக்குவதை தனது பொழுதுபோக்கு என்று கூறியதும் மிகவும் வியப்பாகவும், வருத்தமாகவும் உள்ளது.  

         நாம் நமக்கு பிடித்த சினேகமான நபர்களுக்கு பரிசாகக் கொடுப்பது  புடவைதான். திருமணத்தின்போதும் மற்ற சடங்குகளின்போதும் பயன்படுத்துவதும் மற்ற உடைகளைவிட நமக்கு சபையில் மரியாதையும்,பெற்றுத்தரும்உடை புடவையே.  ஆனால் இதுவே வேலையாக இருப்பது ஆச்சர்யம்தான்.

        
            அதில் ஒரு அம்மா கூறிய விடயம் பொருள்களை விற்றாவது நான்புடவை எடுத்துவிடுவேன் என்பதுபோல் கூறினார்கள்.  அவர்களிடம் இருக்கும் மொத்த புடவைகளின் எண்ணிக்கை 700க்கு மேல் வைத்திருப்பதோடு புடவை எடுப்பதில் இருந்து என்னால் மீண்டு வர இயலவில்லை இது  எனக்கு ஒரு நோய்போல் உள்ளது. இச்செய்தி ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கியது. 

           எந்தவொரு பெண்னும் மற்றவரைப்போல் நாமும்  அதேபொருளை வாங்கவேண்டும் என்று எண்ணினாளோ அது அவள் முன்னேற்றத்திற்கு தடைக்கல்லாகும். நமக்கு தேவையானதை மட்டும் நாம் தேர்ந்தெடுத்து வாங்குவது புத்திசாலித்தனம் என்பது எனது கருத்தாகும்.  தங்களின் கருத்துக்களை பதியுங்கள்-

   
         



சனி, 6 டிசம்பர், 2014


கலையுணர்வு கொண்ட பறவைகளுக்காக ஒரு படைப்பு

            ஞானி

                                                                                                             

தன்னனன்னே  நானனன்னே.....
தனனானே  தானனன்னே...........