கலையுணர்வு கொண்ட பறவைகளுக்காக ஒரு படைப்பு
ஞானி
தன்னனன்னே நானனன்னே.....
தனனானே தானனன்னே...........
Add caption |
தனனானே நானே நன்னானே,.,.....
1) உயரத்திலே வீடுகட்டி
ஒய்யார வாசல்வைத்து
அமைப்பாக அறைகள் வைத்து
குறிப்பாக விளக்கும் கூடவைத்து,,,,,(2)
(தன்ன)
2) அன்னிய பறவைகளை.....
அனுமதிக்கா வாசல் வைத்து‘
சிகரத்திலே வீடுகட்டும்‘
சிங்காரப் பறவை நீதானே.........(2)
(தன்ன)
3) இரு வாசல் இரு அறைகள்
ஒழுங்காகக் கட்டமைத்து‘
தாயன்பை நிலைநாட்டி
தயங்காமல் வாழ்பவள் நீதானே........(2)
(தன்ன)
4)சீராக நார்கிழித்து ......
சிக்கெனவே வடிவமைத்து.
சிறப்பாக வாழ எண்ணி
சிட்டித்தசிட்டன் நீதானே.......(2)
சிட்டன் _ஞானி
நாட்டுப்புறக்கவி தை மகள் அழாகாக பாடக்கேட்டேன் சகோ... வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநல்லகற்பனை சகோ, வாழ்த்துக்களைப்பெற்றுக்கொண்டேன்.
நீக்குஅருமை... தொடர வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குநன்றிசகோ ,தொட்ர்கிறேன்
நீக்குஆஹா!! கார்த்திகைக்கும் குருவிக்கும் சேர்த்து ஒரு பாடலா??? சூப்பர் டீச்சர்!!
பதிலளிநீக்குபரவால்லியே இதுகூடநல்லாத்தா இருக்கு நன்றி டீ,ர்
நீக்குபறவைகளுக்காக ஒரு கிராமியப் பாடல் மெட்டுடன் சுவையாக இருக்கிறது.இந்தப் பாடல் உங்களுக்கு பறவைகளின் மேல் உள்ள நேசத்தைக் காட்டுகிறது.அருமை.வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குபறவைகள் மிச்சிறந்த கட்டடக்கலைஞ்சர்கள் போல்
நீக்குகூடு கட்டி அதில் மின்மினிப் பூச்சியை விளக்காக
வைப்பதெல்லாம் எவ்வளவு வியப்பான விடயம் நன்றி.
பறவை பற்றிய கவிதை மனதில் பதிந்தது.
பதிலளிநீக்குஐயா வணக்கம், நன்றி.
நீக்குஅருமை..கூடுகளும் பாடலும்
பதிலளிநீக்குநன்றிய்யா,
நீக்குஅன்புள்ள சகோதரி,
பதிலளிநீக்குதூக்கனாங் குருவியைப் பற்றி ஓர் அழகான பாடலை அற்புதமாக இயற்றியதற்கு பாராட்டுகள். காட்டில் வாழும் இந்தக் கலைப்பறவையின் கூட்டின் நயத்தை எண்ணி....எண்ணிப் பார்த்தால் வியப்பின் உச்சம்தான்...! அவ்வளவு நேர்த்தியாக கட்டும் பறவைக்கு தாங்கள் பாட்டுக்கட்டியது உயரத்திலே வீடுகட்டி
ஒய்யார வாசல்வைத்து...
அருமை.
பாராட்டும்.... வாழ்த்துகளும்.
நன்றி.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
வணக்கம் சகோ தங்களின் வருகையும் கருத்தும் பராட்டும்
பதிலளிநீக்குகண்டு மகிழ்ந்தேன் உரிய கல்வி கற்றபிறகும் நாம்
கட்டும் வீடு குறைகளோடுதான் ,ஒர் அறிவுகொண்ட பறவையின்
செயல் வியப்பிற்குரியது.,
அருமை சகோதரியாரே
பதிலளிநீக்குநன்றி சகோ,
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குவணக்கம்!
கலையழகாய்க் கட்டுமெழில் கூட்டுக்கு நீங்கள்
மலையழகாய்ப் பாடல் வடித்தீா்! - நிலைத்த
கவியழகாய் நானும் கருத்தீந்தேன்! காண்க
புவியழகாய்ப் பொங்கும் புகழ்!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
ஐயாவணக்கம்,14டிசம்பர் 3.55க்குதங்களால் பதியப்பட்டகருத்து அகற்றப்பட்டுள்ளது
நீக்குஎப்படி என்று எனக்குத் எனக்குக் குழப்பமாக
உள்ளது.
ஐயா தங்களின் கருத்து பா வடிவில் வருவதே
பதிலளிநீக்குஎனக்குச்சிறப்பு.
அழகான பாடல்
பதிலளிநீக்குவலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்.
நன்றி,வருகசகோதரி.
நீக்கு