செவ்வாய், 20 மே, 2014

உயிரின் ”“ஓர்”“ எழுத்து

  தமிழின் சிறப்புகளில் ஓரெழுத்து ஒருமொழியும் ஒன்று இதில்'அ'முதல்'ஔ  'வரை  உள்ள
பனிரெண்டும் உயிர், தமிழுக்கு' உயிர்' இதில்'எ', 'ஒ' என்பதைத்தவிற   மீதம்  உள்ள  பத்து  எழுத்துக்களும் பலபொருள்களை உடைய ஓரெழுத்துக்கள் .   இதில் 'அ' எனும் போது மகிழ்ச்சி அதிகமாகும் ஏன்....? ஏன்தெரியுமா? நம்உறவுகளில் பல


'அ' எனும் எழுத்தில்தான் துவங்கும், அம்மா, அப்பா,அக்கா,அண்ணன்,  அன்னி ,அத்தை  ,அத்தான்,அப்பத்தா, அம்மாச்சி,மேலும் நம் அனைவருக்கும் பிடித்தஅன்பு, அழகு  இப்படிசொல்லிக்கொண்டே போகலாம்சரி நாம்விசயத்திற்கு வருவோம்.


'அ'

அழகு,சுட்டு,
சிவன், திருமால், நான்முகன்.                                                      
                   

எட்டு எனும் எண்ணின்குறி.

அஃறினை பன்மை ஈறு,

'ஆ'

பசு,ஆச்சாமரம், ஆன்மா
வரை,அற்பம், மறுப்பு
நினைவு உடன்பாடு, நிந்தை
துன்பம், வியப்பு,இரக்கம்                
வினை முதலிய பொருள்களைக்குறிக்கும் ஒருசொல்.
வினா விடைச்சொல்.
வினைஎச்ச விகுதி            '

பொருள்

அற்பம்-அணு, இழிவு, இலேசு,சிறுமை, நாய்,பஞ்சு, புகை.

'இ'

அண்மைச்சுட்டு
ஒரு விகுதி.

'ஈ'

அம்பு, அழிவு, இந்திரவில்
பூச்சி, நரி, பாம்பு
பார்வதி, வண்டு, குகை
கொசுகு, தாமரைஇதழ், தேன்வண்டு
தேனீ ,திருமகள் ,நாமகள்                
ஒருமுன்னிலை அசைச்சொல்
ஈஎன்னேவல்

கொசுகு- கொசு, கொடுக்கு.
'உ'

சிவன், நான்முகன், உமையவள் 
ஒரு வினை எச்ச விகுதி
ஒரு சாரியை
ஓர் இடைச்சொல்
ஒரு தொழில் பெயர் விகுதி
ஒரு பண்புப்பெயர்விகுதி
சுட்டெழுத்து.

'ஊ'

உணவு, இறைச்சி, சதை
திங்கள், சிவன், தசை
ஊன்.                                                                  
ஓர் ஒலிக்குறிப்பு.

'எ'

ஏழென்னும் எண்ணின் குறி
வினா எழுத்து

'ஏ'

சிவன், செலுத்துதல், அம்பு
மேல் நோக்குதல், இறுமாப்பு, திருமால்

இகழ்ச்சிப்பொருளில்வரும் ஓர் இடைச்சொல்
இசைநிறைந்து நிற்கும் ஓர்இடைச் சொல்
ஈற்றசைச் சொல்
எண்ணுப் பொருளைத்தரும் ஒர் இடைச் சொல்
எதிர் மறைப் பொருளிலே வரும் ஓர் இடைச்சொல்
எய்யுந் தொழில்
குறிப்புமொழி
விளிக்குறிப்பு

'ஐ'

அழகு, அரசன் இருமல்
கடவுள் , கடுகு, குரு
கோழை, சிலேட்டுமம், கன்னி
சர்க்கரை, சிவன், சவ்வீரம்
பருந்து, தந்தை, பெருநோய்
தண்ணீர் முட்டான் கிழங்கு
தலைவன், தும்பை, துர்க்கை
நுண்மை, வியப்பு, ஐந்து,
ஐயம், கணவன், பாசாணம்

 சிலேட்டுமம்-குளிர்ச்சி 
சவ்வீரம்-ஒரு நாடு  சீனக்கார  மருந்து ,பாசாணம்
காடி , கண் முதலியவற்றின் மூடுதோல் 

அசைநிலை
ஒருசாரியை
ஒரு தொழிற்பெயர்விகுதி
கருவிப்பொருளிலே வரும்ஒரு பெயர்
செயப்படு பொருளிலே வரும் ஒருபெயர்
விகுதி
யானைப்பாகன் அதட்டும் ஓசை
வினைமுற்றுப் பெயரிலே வரும்ஒரு பெயர்
ஓரிடைச்சொல்வியப்பு

'ஒ'
...............
'ஓ'
ஒழிவு ,சென்று தங்குகை
மதகு  நீர்  தாங்கும்  பலகை
உயர்வு ,இழிவு ,கழிவு
இரக்கம் ,மகிழ்ச்சி , விப்பு
நினைவு , அழைத்தல் , வினா .                                                                                   
எதிர்மறை , ஐயம் ,  தெரிநிலை
 பிரிநிலை , அசைநிலை     இவற்றைக்காட்டும்
ஓர்  இடை ச் சொல்   கொண்றை , நான்முகன்
மகிழ்ச்சிக்குறி ப்பு .


'ஔ '                                                 


அறந்தன் எனும் பாம்பு
நிலம் , விளித்தல் , அழைத்தல்
வியப்பு ,தடை  இவற்றைக்காட்டும்
ஓர் உபசருக்கம் ,கடிதல்,  வேன்னேவல்

சருக்கம்-நூற்ப்பிரிவு

     தமிழின் உயிர்  பனிரெண்டு!
    
    அதன்  பொருள்  கண்டு !

    அசந்து  போனேன்  விழிநின்று !!
                                                                    

41 கருத்துகள்:

  1. அசந்து விட்டோம் - நாங்களும்...!

    தொடர வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோ! அசரவைப்பது நம் மொழிக்கு பழகிப்போனஒன்றல்லவா? நன்றி

    பதிலளிநீக்கு
  3. ஆஹா அருமை.தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  4. ஓரெழுத்து விளக்கம் நல்லா இருக்கு. வலைப்பயிற்சிக்குப் பிறகு வண்ணமே மாறிவிட்டமாதிரி இருக்கு? அசத்துங்க..

    பதிலளிநீக்கு

  5. வணக்கம்!

    மணித்தமிழ் மாண்புகளை மாலதி சொன்னார்!
    அணித்தமிழை மெல்ல அளந்து! - தனித்தமிழ்
    போற்றும் புலவன்யான் சாற்றும் புகழ்ப்பூக்கள்!
    ஏற்று மகி்ழ்க இனித்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
  6. இனிய தோழி மாலதிக்கு

    சில எழுத்துப்பிழைகளைத. திருத்தம் செய்துகொள்ளவும்

    பனிரெண்டு - பன்னிரண்டு
    துவக்கும் - தொடக்கம்
    இப்படி சொல்லி - இப்படிச் சொல்லி
    விசயம் - விடயம்
    அ-றினை - அ-றிணை

    நீங்கள் எழுதும்போது உங்கள் கண்ணுக்குப் பிழை தொியாமல் போகும்

    படிக்கின்றவா்களுக்கு உடனே தொியும்! எனக்கும் அப்படித்தான்

    இதை வெளியிட வேண்டாம்

    அன்புடன்
    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
  7. அருமையான தொகுப்பு
    வாழ்த்துக்கள்
    தொடர்க.http://www.malartharu.org/2014/02/eppadiyum-sollalm-era-edwin.html.

    பதிலளிநீக்கு
  8. பலபொருள் குறித்த ஓரெழுாத்தோரு மொழியின் விளக்கங்கள் அருமை.
    தொல்காப்பிய உரியியல் நூற்பாக்களைக் கண்ணுறின் தமிழின் பழைய மரபிற் பட்டுத் தொடரும் ஓரெழுத்தொருமொழி குறித்தறிந்து / அறிவித்து மேலும் செம்மையுறலாம். நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாமதத்திற்குபின்வருமனைவரும்மன்னிக்கனும்
      ஐயாவணக்கம்தங்களின்வருகைக்குமிக்கமகிழ்சி
      மேலும்செம்மையுறமுயற்சிக்கிறேன்.

      நீக்கு
  9. அட்டகாசமா தொகுப்பு டீச்சர்:) பயனுள்ள பதிவு. பக்கமும் அட்டகாசமாய் மாறிஇருக்கிறது. வலைப்பயிற்சி அசத்தலாய் இருந்தது இல்லையா. என்னால் தான் கலந்து கொள்ளமுடியவில்லை.:((

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சகோதரி
    உயிரின் ஓரெழுத்து தமிழின் சிறப்பினைத் தங்கள் எழுத்துகளில் வெளியிட்டமைக்கு எனது நன்றிகளும் வாழ்த்துகளும் சகோதரி. கணினிப் பயிற்சியில் அன்பாக பேசினீர்கள். தங்கள் அன்புக்கும் நட்புக்கும் வலைப்பூவுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். குறிப்பாக மைதிலி சகோதரிக்கு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோ, வலைத்தளத்தில் நான்தான் காணாமல் போனேன், நீங்களுமா...........................?

      நீக்கு
  11. என்ன ஆச்சு சகோதரீ? உடல்நலத்திற்கு ஒன்றுமில்லையே பிள்ளைகள் கல்லூரி இ்ன்னும் முடிவாக வில்லை என்றே நினைக்கிறேன். விரைவில் அவற்றை நல்லபடியாக முடித்து மீண்டும் பதிவுலகம் திரும்ப வரவேற்கிறேன். -அன்புடன், நா.மு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணா வணக்கம்,அனைவரும் நலமே தத்திபுத்தி தட்டச்சில் கற்றுக்கொண்டிருக்கிறேன். விரைவில் பதிவுகள் பதிவு செய்வேன்.

      நீக்கு
  12. ஒவ்வொரு எழுத்துக்கும் இருக்கும் சிறப்பினை படிக்கும்போது உணரமுடிகிறது. இதுவே நம் தாய்மொழியின் பெருமை. வாழ்த்துக்கள்.
    www.ponnibuddha.blogspot.in
    www.drbjambulingam.blogspot.in

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா வருக வணக்கம், நன்றி. தங்களின் வருகையால் நான் மிக்க மகிச்சியடைகிறேன்.

      நீக்கு
  13. பதில்கள்
    1. அய்யா வருக வணக்கம், நன்றி தங்களின் வருகையால் நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

      நீக்கு
  14. வணக்கம் அம்மா. தங்கள் இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன். பார்க்கவும். நன்றி

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் சகோதரி!

    உயிரெழுத்து ஓரெழுத்தில் ஊறும் உணர்வு!
    பயிலெழுத்துத் தந்தீர் பகுத்து!

    அருமையான பதிவுகள்! அழகிய எழுத்தாற்றல்!
    தொடருகிறேன்... வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வருக, தங்களின் வருகையால் மிக்க மகிழ்ச்சி நன்றி சகோதரி.

      நீக்கு
  16. வணக்கம்

    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்


    அறிமுகப்படுத்தியவர்-மகிழ்நிறை மைத்திலி கஸ்தூரிரெங்கன்


    பார்வையிட முகவரி-வலைச்சரம்


    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: பேனாமுனைப்போராளி:
    என்பக்கம் கவிதையாக

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ, தங்களின் வருகையால் மிக்க மகிழ்ச்சி நன்றி,

      நீக்கு
  17. வணக்கம்
    இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
    http://blogintamil.blogspot.com/2014/09/ladies-special.html?showComment=1409788509683#c5894648943052542591

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  18. எழுத்துக்கள் பேசும் வார்த்தைகள் வியக்க வைக்கின்றன...

    பதிலளிநீக்கு

  19. உங்களுக்கு உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இதயகனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  20. தங்கள் தோழியார் கொடுத்த தகவலிக் படி வந்தேன், அருமையாக பகுத்து கொடுத்துள்ளீர், நான்ஏனோ,,,,,,,,,,,,, அருமை. நன்றி.

    பதிலளிநீக்கு
  21. தங்களின் முதல் வருகை வருங்கள் எந்த்ழியருள் யார்கொடுத்த தகவல்..........? என்ன இப்புடிசொல்லிப்புட்டீங்க
    ஒருஅகவலுக்கே நாக்குதள்ளுதே.நன்றி தோழி.

    பதிலளிநீக்கு