புதன், 28 ஜனவரி, 2015

கொடுப்பதற்கு ஓர் மனம் வேண்டும்-2


          எங்கள் பள்ளி 4ம் வகுப்பு மாணவி இளஞ்சியம்  தாயைபற்றிய மனதை உருக்கும் பாடல்

தாய்மை எனும் தன்னிகரில்லா உறவைப்பற்றிய வலியைக்கொடுக்கும் பாடல்   இட்டுக்கட்டி பாடுவதில் இளஞ்சியம் கெட்டிக்காரி
மாணவியாக இருப்பதைவிட ஆசிரியராக இருக்க ஆசை அவளுக்கு அதிகம்
நான்கு மாணவர்களை மட்டுமே நிகழ்ச்சிக்கு தயார்செய்திருந்தோம்.  ஆனால் மதிய உணவு இடைவேளையில் நானும் ஒரு பாட்டுப்பாடுகிறேன் என்று என்னிடம் கேட்டாள்.  நான் எப்போதும போல் எங்கே பாடு என்றேன்.   பாடிக்கொண்டு இருக்கும்பொழுது இயக்கப்பொறுப்பாளர்கள் புதுக்கோட்டையில் ஈஸ்வரன் மாளிகை திறப்பு விழா அழைப்பிதழோடு  மூவர் வந்தனர்.  அவர்களும் அந்தப்பாடலை கேட்டுவிட்டு வட்டார செயலாளர் தமிழ்நாடுதொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணிதிரு .முருகேசன்  தன் சட்டைப்பையில் இருந்து ரூ. 100./ ஐ எடுத்து இளஞ்சியத்திடம் கொடுத்து வாழ்த்தினார்.  திரு.வீரசர்வேஸ்வரன் வட்டாரத்தலைவர்  தனது பையில் இருந்து சாக்லேட்டைஎடுத்துக்கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.  நானும் உதவி ஆசிரியரும் கண் கலங்க அமர்ந்திருந்தோம்.  ஐக்கிய நல கூட்டமைப்பின் சார்பில் பணமுடிப்பு வழங்கப்பட்டது.    அதில் வரும் வரிகளில் ஒருசில வற்றை நான் இங்கேகுறிப்பிடுகிறேன்.

 உன் உடலு சதையை பிச்சுக்கொடுத்தவளே,
 உலகத்திலே...........எனக்கு ஆறுதலா
உன்னைப்போல வேறயாருமில்ல
தன்னிலே சூரியன,,,நானும் பார்க்கிறேன்
தரையில் நடக்கும் தெய்வத்தோடநானும் வாழுறேன்
முக்குனியே மூச்சு முட்ட  கத்துனியே காதுகிலிய
பெத்தெடுத்த தாயே உன்னை எப்பிடித்தான் நா மறப்பேன்
கல்லுமண்ண தின்னுடுவேன்னு கவனமா பார்த்துக்கிட்ட
கஞ்சியதா நீ குடிச்சி  சோத்தையெல்லா எனக்குதந்த
கோழிகூட தங்குஞ்சிய வளர்ந்ததும் கொத்தி விரட்டும்.
தோளுக்கு மேல் வளந்தாலும் தாய்ப்பாட்டு தாலாட்டும்‘
 அம்மா........................என்ன நீ மடியில சுமந்தவ
உன்ன நா மனசில் சுமப்பவ .

வாழ்த்துரை வழங்குதல் 




                                            

நினைவுப்பரிசு வழங்குதல் 


ஆடைகள் வழங்குதல் 

                      வாழ்த்துரை வழங்கி நன்றி கூருதல் 



தங்களின் பொன்னான நேரத்தை எம்பள்ளிக்காக தந்து நல்ல பல பயனுள்ள கருத்துக்களைத் தந்து எம்மாணவர்களுக்கு  வாழத்துக்களை வழங்கிய
அத்துனை நல்லஉள்ளங்களையும்  வணங்கி மகிழ்கிறோம்
 நன்றி.......நன்றி.....நன்றி.


நினைவுப்பரிசு கொடுக்கும் பொழுது நுரிலின் உள்ளே நன்றியோடு
 எழுதிய வரிகள்

சகோதரர் திருஇக்பால் அவர்களுக்காக 

தேனியின் மறு உருவே 
தேர்ந்தெடுத்த நன்முத்தே
ஈகை குணமே
இறைவனின் வரமே
கோடையில் வீசிய 
குளிர்ந்த காற்றே
வறண்ட நிலங்களின்
வற்றாத நதியே
பிஞ்சு உள்ளங்களை 
பிடித்த கரமே‘
கொடைஉள்ளமே
நின் தலைமுறைகள் 
தலைக்கட்டும்  தடையின்றி
நிறைவேறட்டும் தங்களின்
 குறிக்கோள் குறையின்றி
பல்லாண்டு பல்லாண்டு
பல கோடி நுறாண்டு
நோயின்றி நீர் வாழ
வாழ்த்துகின்றோம்
 நாங்களெல்லாம்

நான் மேலே குறிக்கோள்என்று கூறியதற்கு காரணம்  நான் சகோதரர் திரு.இக்பால் அவர்களிடம் பேசும்போது, இதுபோன்று மாணவர்களுக்கும் ஈகை குணம்வளரவேண்டும் என்பதுதான் அவரது குறிக்கோள் என்பதை நான் அறிந்துகொண்டேன்.

சென்ற தீப ஒளி திருநாளுக்கு  ஆடைகள் வழங்கியதற்காக நான் எழுதிய வாழ்த்து மடல்

கோடிகள் உள்ளவர்கள்
கோடான கோடி உண்டு.
கொடையுள்ளம் கொண்டவர்கள் 
குறிப்பிடும் ஒரு சிலரே
மாணவச்செல்வங்களோ
மகிழ்ச்சியோடு காத்திருக்க‘
மனசார ஒருவர் வந்து
மகிழ்விக்க உடை கொடுத்தார்
வண்ண வண்ண உடைகள்
அல்ல அல்ல வகை வகையாய்
ஆடைகளை கண்டு, கண்டு 
வாய்மூட மறந்துநின்ற 
என் மாணவச் செல்வங்களை
காணவோ கண் கோடி வேண்டும்
ஏழையின் சிரிப்பிலே தான்‘
இறைவனைக்காண வேண்டும்‘
என்பது நாம்அறிந்த ஒன்றே
உண்மையில் அதை நாங்கள் கண்டோம்
உவகையால் அகம் மகிழ்ந்தோம்.
வம்சம் தலைத்தோங்க மனதார
நன்றி கூறி வாழ்த்துகின்றோம்.

                                     நன்றி வணக்கம்.

12 கருத்துகள்:

  1. வணக்கம்
    இப்படியான நிறைஞ்ச உள்ளங்கள் வாழட்டும்... மிக அருமையான கவியோடும் அழகிய புகைப்படத்துடன் பதிவாக பதிவிட்டமைக்கு மிக்க நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன“-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோ அவர்கள் கொடுத்த ஒவ்வொரு உடையும்
      என்பிள்ளைகளிதுவரை பார்த்துமட்டுமேஇருப்பர்
      ஆனால்சகோதரர் இக்பால் அவர்கள்கரங்கள்,அவரின்
      நல்லமனது என்மாணவர்களைஅனுபவிக்கச்செய்தது

      நீக்கு
  2. படங்களை பார்க்கையில் உள்ளம் துள்ளுது. மலரும் நினைவுகள். நம் பள்ளி மென்மேலும் வளரவேண்டும். உங்கள் சிறப்பான பணியால் அது வளர்ந்தே தீரும். உங்கள் பாடல்கள், இலங்கியத்தின் பாடல் எல்லாமே அருமை. நெகிழ்வான அனுபவம் டீச்சர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டீச்சர் நீங்க நம் பள்ளியில் இல்லை என்பதில் எனக்கு
      எப்பவுமே வருத்தம் தான் நம்ம பள்ளியில் எப்பவுமே
      உங்களுக்கு ஒருபங்கு இருக்கு ,இந்ததமிழ்மணத்தில்
      இணைவது எப்ப்டின்னுதெரியலடீச்சர்.

      நீக்கு
  3. அனைத்தும் சிறப்பு...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம்தங்களைப்போன்றோரின் ஆசிர்வாதம்தான்
      சகோ.

      நீக்கு
  4. மாணவி இளஞ்சியம் கவி மனதை கணக்கச்செய்து விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிமட்டுமல்லசகோ அவள் கதையும் மனம் கனக்கச்
      செய்யும் அதை ஒரு பதிவாக போடுகிறேன்.

      நீக்கு
  5. ஐக்கிய நல கூட்டமைப்பிற்கு மீண்டும் நன்றி.

    பதிலளிநீக்கு
  6. மனதை நெருட வைக்கிறது.இப்புவியில் இப்படியும் மனிதர்கள் உள்ளார்கள் என்று மகிழ்ச்சியாக இருந்தாலும் நாம் வெட்கி தலை குனியவும் செய்கிறது. அச் சிறுமியின் நிலையும் கவிதையும் கண் கலங்க செய்தது. கவிதை அருமை!

    பதிலளிநீக்கு
  7. வாங்க சகோதரிமுதல் வருகையில் முத்தான கருத்துக்கள் தங்களின் கருத்துக்களை மைதிலியின்
    தளத்தில் பார்த்திருக்கிறேன் இடது கைக்குத் தெரியாமல்
    வலதுகையால் வழங்கும் வள்ளல்களும் இருக்கத்தான்
    செய்கிறார்கள் அந்தநல்ல மனங்கள் வாழட்டும் பல
    ஆண்டு நன்றி சகோதரி.

    பதிலளிநீக்கு