வியாழன், 5 பிப்ரவரி, 2015

மாத்தியோசி
























கண்ணகியின் காற்சிலம்பு இடம்மாறி
கைச்சிலம்பானதுவே
காப்பியத்தின் மணி மகுடம்
சிலம்பில் அனைத்தையும்
 சீர்தூக்கும் அணிகலனே
நீ மட்டும் காப்பிய நாயகியின்
கணவனோடு சென்றிருந்தால்
காப்பியத்தில் கருத்தே 
இல்லாமல் போயிருக்கும்
சிலம்பினுள் மணிகள்‘
மாறாமல் இருந்திருந்தால்‘
கண்ணகியின் நிலை என்ன?
வீரமங்கை வீழ்ந்திருப்பாள்
விடயம் இன்றிப் போயிருக்கும்.

16 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. மாற்றியோசிப்பதிலும் ஒரு சில விடயங்கள் மகிழ்ச்சியைத்தருகிறது சகோ.

      நீக்கு
  2. உண்மை தான் ஆனால் விதி வழி தானே மதி போகும் என்ன செய்வது.விடயம் இன்றி போகாமல் இருக்கவே வழி வகுத்தது.
    நல்ல சிந்தனை சகோ தொடர வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்சகோ,விதிவழி மதிபோனதால்தானே ஒருபெண்ணின் வீரம் எவ்வளாவு வீரியம்
      மிக்கது என்று நாம் தெறிந்து கொள்ளமுடிந்தது.

      நீக்கு
  3. உண்மைதான்
    ஒரு காப்பியத்தை இழந்திருப்போம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காப்பியத்தை இழந்திருப்போம் என்பது உண்மைதான்
      அந்தக்காலத்திலேயே பெண்கள் எவ்வளவு வீரம்மிக்கவர்களாக இருந்திருக்கிண்றனர்
      இன்றுஏமற்ந்து நிற்கும் பெண்களுக்கெல்லம் இக்காப்பியம் ஒரு நல்ல வழிகட்டிதானே சகோ.

      நீக்கு
  4. அது!! சூப்பர் டீச்சர்:) நச்சுனு சொன்னீங்க. மகாசுந்தர் அண்ணாவின் உடைந்த சிலம்பும், உடையாத சிலம்பும் பதிவை நேரம் கிடைக்கும்போது படித்து பாருங்களேன். இதே போல அதுவும் ஒரு மாற்று சிந்தனை என்பதால் சொல்கிறேன்:) வாழ்த்துகள் டீச்சர்!

    பதிலளிநீக்கு
  5. பதில்கள்
    1. ஆம் சகோ ஆனால் மாற்றமுடியும் என்று சிலர்
      இருக்கிறர்கள்.

      நீக்கு
  6. ஆம் பாண்டியனின் ஆராயத நீதி சரியாயனது என்று ஆயிருக்கும்.
    அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாகும்
    உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்
    ஊழ்வினை உருத்து வந்தூட்டும் எனும்
    நீதிகளை மொழியாமல் பரல்களற்ற சிலம்பாய் அது அமைந்திருக்கும்.

    கதையின் இன்னுமோர் கோணம் கவிதையாய்.....!
    அருமையாய்.......!
    தொடருங்கள் சகோ!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏஏ...........நானுமொரு கவிஞன், கவிஞன் கவிஞன்.....
      எல்லோறும் கேட்டுக்கோங்க நானெழுதுவதை
      கவிதைகளென்று சொன்னவர் யார்தெரியுமா?
      அதனால நானும் ஒருகவிஞன்.

      நீக்கு
  7. ம்ம் ஒரு சிலப்பதிகாரம் உருவாகக்காரணமே சிலம்பு தானே தோழி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா நம்மளு...........கொஞ்சம் யோசிக்களான்னா
      விடமாட்டீங்களே.

      நீக்கு
  8. கீதா சொன்னதை நானும் வழிமொழிகிறேன்.
    சிலப்பதிகாரம் பெயரே மாறியிருக்கும். இதையும் அடுத்த மாத்தியோசியில் சொல்லிவிடுங்க கவிஞரே? (ஆமா கவிஞன் என்பது ஆண்பாலில்லையா கவிஞரே?)

    பதிலளிநீக்கு
  9. அண்ணா அதனால்தான் கடைசி வரி(ஒன்றுமில்லாமல் போயிருக்கும்) ஒரே ஒரு எழுத்து இத இத இத நீங்களே.........
    பொருத்துக்களேன்னா வேற யாரால பொறுத்துக்க..முடியும்
    பெண்ணியம் பேசும் நீங்களா......?அடுத்தபிறப்பென்று
    ஒன்று இருந்தால் நான் ஆணாகத்தான் பிறப்பேன்..:))

    பதிலளிநீக்கு