புதன், 12 மார்ச், 2014

தவித்துப் போனாள்..!!!

                        மேடுபள்ளங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் உண்டு,ஆனால் சிலர் மிகவும்பாதிக்கப்படுகின்றனர் எனக்குத்தெரிந்த ஒருபெண் ஒருவரை விரும்பித் திருமணம் செய்து கொண்டாள் அதுவும்குடும்பத்தை எதிர்த்து கலப்புத்திருமணம், சந்தோஷமாக வழ்ந்து கொண்டிருந்தனர் மேலும் சந்தோஷமாய்!  அவள் தாய்மை அடைந்தாள், அளவுகடந்த மகிழ்ச்சி! குழந்தை பிறந்தது, சிலமாதங்கள் கழிந்தன வேலையும் கிடைத்தது, மட்டற்றமகிழ்சி! திடீர் என்று,  ஒருநாள் அவள் கணவனுக்கு சுகமில்லாமல் போனது  தவித்துப்போனாள் ,ஆனாலும் போராடினாள், குழந்தை, கணவன், பணி போராட்டம்தான், போராடினாள் செயித்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் போராடினாள்,  நம்பிக்கை காணமல் போனது, காணமல்போனது நம்பிக்கை மட்டுமல்ல! அவளின் உயிரும்தான்(கணவன்)   தன்குழந்தை மட்டுமே தனக்கு உறவாகநின்றது! தவித்துப்போனாள்..........?

                  இந்த மலரில் தோன்றிய வாசம்.....                                                                                                      


                           இதோ...........


ஏச்சிலும்    பேச்சிலும்
ஏகவசனதிலும்
ஏற்றமாய்  வழ்திருந்தோம்!
என் கனவுநனவானது!
இரு காந்தத்திடை இரும்பாய்!
எனைஇருத்திச் சென்று விட்டாய்!
காணாமல்போனது என் உறவு!
காய்ந்து உதிர்ந்தது என்கனவு!
நம் உறவெனும் உயரின் !
ஊக்கமும் தாக்கமும்!
எனை உடைத்தெறிகிறது!
என்உடை நனைகிறது!
என்தோள்கள் சுமப்பாய்!
என்றிருந்தேன்..............
என்தோள்களைச் சுமக்க!
செய்துவிட்டாய்............
ஜாதிஎனும் ஜாதகங்கள்!
பார்க்கவில்லை நாமும்!
வாழ்க்கை எனும்
வசந்தத்தேரை !
நாம்இழுக்கும்முன்னே...!
வடம் அருந்துவிட்டதுதானே!
பால் கொடுக்கத் தாயாக்கினாய்.
ஏன்...........? பால் தெளிக்க ஆளாக்கினாய்!
என் ஆவி போனபின்பு,-இங்கு,
அழுது தவிக்குது உன் அன்பு!

                                 

6 கருத்துகள்:

  1. கடந்த எட்டாம் வகுப்பில்
    ஹோம் தே ப்ராட் ஹேர் வாரியர் டேட் என்கிற ஒரு கவிதை இருந்தது,
    அதன் தமிழ் நீட்சி மாதிரி இருக்கிறது கவிதை

    இனி ப்ளாகரில் கம்போஸ் செய்வதை தவிர்க்கவும்
    அடுத்த வரி வருவதற்கு என்டர் தட்டவும்
    நன்றி

    பதிலளிநீக்கு

  2. ரத்தக்கண்ணீர் வரவைக்கிறது கவிதை!!
    அருமை டீச்சர்!

    பதிலளிநீக்கு
  3. மனம் கனக்கச்செய்யும் கவிதை தோழி

    பதிலளிநீக்கு