புளகிதம்
அனைவருக்கும் வணக்கம் ,
நீண்டநாட்களுக்குப்பிறகு வந்துள்ளேன் வராததற்குக் காரணம் சொன்னால்மிக....மிக...நீளமானதொடர்(மெகாசீரியல்)அதனால்இதற்கானஎனதுவருத்தத்தைமட்டும்தெரிவித்துக்கொண்டுஎன்தளம்வந்துகருத்துத்தெரிவித்தஎன்அன்பிற்க்குரியசகோதசகோதரிகளுக்குஎன்பணிவானநன்றிகளை உரித்தாக்கிகொண்டுஎன்பதிவினைத்தொடர்கிறேன் .
எங்கள்பள்ளியில்பயிலும்மாணவர்களின்பெற்றோர்கள்அனைவருமே கூலிவேளைசெய்பவர்கள்ஆண்களில்85நன்றாகக்குடிப்பவர்கள்குழந்தைகளின்நிலைஎவ்வாறிருக்கும்நமக்குத்தெரியும்அதனால்எங்களாலமுடிந்தஅளவுகுறைஇல்லாமல்பார்த்துக்கொள்வோம்கொடுக்கும்மனம்படைத்தோரின்நட்பு கிடைத்ததால் கண்டிப்பாக பயன்படுத்திக்கொள்வோம் வீதி இலக்கிய கலைக்கூட்டத்தில்.திரு.பஷீர்என்றசகோதன்னைஅறிமுகம்செய்து கொண்டபோது ,சகோவின் உதவியோடு என்மாணவனின்
தந்தைக்கு (ஒருகால் இல்லை )ஏதாவது உதவி கேட்கவேண்டும் என்று
அன்றே அதைச் செய்தேன்அவருக்கு மூன்று சக்கரங்களுடன் ஒருவண்டியும்
கிடைத்தது ,மூன்றாம் கூட்டத்தில் உங்கள்மாணவர்களுக்கு எழுதுபொருட்கள் எதாவது வேண்டுமா? என்று சகோ என்னிடம் கேட்டபொழுது
போதுமானதை அரசாங்கமே கொடுத்துவிடுகிறது அய்யா, மாணவர்கள் விரும்புகின்ற வேறு எதாவது கொடுக்க முடியுமா ? என்று கேட்டவுடன்
கருணை உள்ளத்துடன் தீபஒளி திருநாளன்று மாணவர்கள் அனைவர்க்கும்
அவர்கள் கொடுத்த பரிசால்என்பிள்ளைகள் பெற்றவை .அளவில்லா மகிழ்ச்சி,
கொடையுள்ளம் கொண்டவர்
கொடுத்தார் ஓர் அறிய உடை
அணிந்தவன் நடந்தான்
அங்குமிங்கும் பார்த்தபடி
எனைக்கடந்தான்
இங்கேவா என்றழைத்தேன்
இரு ஞாயிறின் ஒளி சேர
ஓடி வந்து என் முன் நின்றான்
என்ன ராஜா தீபஒளியா ?
என்றுநான் கேட்கும்போதே
'ம்' என்று கூறி சட்டையை
வாயில்வைதான் அட பனியனா ?
என்றதுமே ! ஆமாம் ,என்று
தலையசைத்தான்.என் கண்கள்
குளமானது மனம் இலேசானது
புதிய உடைகளாக அவன் உடுத்தியது
சீருடைகளை மட்டும்தானே !
ஆனால் தீபஒளித்திருநாளைக்குஎன்பிள்ளைகள் இதுவரை அணிந்திடாத
மிகவும்தறமானஉடைகள் ஐக்கியநல கூட்டமைப்பின்முன்னிலையில்
எங்கள் ஊரின் தாரகை ஆயத்தஆடைகடையின கொடைவள்ளல்வழங்கினார்
திருநாள் விடுப்புமுடிந்துபள்ளிக்கு இளவரசர்களும் இளவரசிகளும்வருகை
தந்திருந்தனர் பூரித்துப்போனோம்.அதுமட்டுமல்லாமல் பொங்கள் திருநாளைக்கும் என்மாணவர்களுக்கு இதுபோன்றஆடைகள் உண்டு
விளம்பரத்தில் பார்பதெல்லாம் மட்டுமல்லாமல் கோழிபிரியாணி இப்படிஎத்தனை எத்தனையோஅவர்களின் விருப்பம்போல் வாங்கிக்கொடுப்போம், ஆனால்அப்பொழுது இருந்த மகிழ்சியைவிட இது இரட்டிப்பு மகிழ்சியை தந்தது அவர்களுக்கு மேலும் இருபள்ளிகளுக்கு இதுபோல் வழஙப்பட்டது.
கோடிகள்பலஇருந்தாலும்கொடுப்பதற்குஒருமனம்வேண்டும் அப்படியேகொடுத்தாலும்பெருபவர்களின்அகம் மகிழவேண்டும்,திருஇக்பால்
,அவர்கள் முழுமனதோடுகுடும்பத்தாரின்அகமகிழ்வோடு அந்த ஆடைகளை வழங்கினார் மேலும் பல உதவிகள் செய்துள்ளார் இன்னும் என்ன உதவி மாணவர்களுக்கு வேண்டும் என செய்வதற்கு தயாராய் உள்ளார்.
இந்த நேரத்தில் அவருக்கு என் பள்ளியின்சார்பில் நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கிறேன்.