புதன், 31 டிசம்பர், 2014

உறவுகள் வேண்டும்.


            குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
என்பது எவ்வளவு உண்மை, இக்கால சந்ததியினர்‘
பெருமபாலும் தாத்தா,பாட்டி, சித்தப்பா அத்தை 
போன்ற உறவுகளை மறந்து கொண்டிருக்கின்றனர்.‘
இன்னும் சில காலங்களில் ஏதோ ஓர் இடத்தில்
பார்க்க நேரிடும்போது இவர்தான் உன் சித்தப்பா
அல்லது அவர்தான் உன் சித்தப்பா என்று
கூறும் நிலை தொலைவில் இல்லை.

            உறவுகளோடு வளரும் குழந்தையின் மனநலம்
மற்றும் உடல்நலத்தின் பலம் நமக்கு தெரிந்ததுதான்
இவற்றை மேம்படுத்த நாம் செய்யவேண்டியது 
ஒருசில காரணங்களே  உறவுகளை சொல்லிவளர்ப்பது
மேலும் முக்கியமான நாட்களில் அவர்களிடம் 
ஆசி பெறச் செய்வது விழா நாட்களில் அன்பினை
 பரிமாரிக்கொள்வது போன்ற செயல்களோடு விரிசல்கள் 
இல்லாமல் பார்த்துக்கொள்வது (இது சாதாரணமல்ல ) 
விரிசல்கள் விரிவடையாமல் இருக்கவும் முதலில்
பெண்கள் நினைக்கவேண்டும்.

 எல்லாவற்றிற்கும் பெரியவன் இறைவன்
பணிவு உயர்வுக்கு வழி என்கிறது வேதங்கள் 

 தொலைக்காட்சி முன் அமர்ந்து தேவையற்ற தொடர்களை
 பார்ப்பது அர்த்தமில்லாமல் பேசிக்கொண்டிருப்பது இவற்றை நாம்
தவிர்த்து நல்ல நல்ல செய்திகளை சொல்வதற்கும், 
உறவுகளை நேசிப்பதற்கும் கூட தொடர்கள் நம் தொலைக்காட்சியில்
ஒளிபரப்பப்படுகிறது. ( உறவுகள் தொடர்கதை, என் கணவன் 
என் தோழன் )

 விட்டுக்கொடுப்பது எல்லா நேரங்களிலும் நமக்கு 
வருவதில்லை, ஆனாலும் சில காரணங்களுக்காகவாவது
நாம்  விட்டுக்கொடுத்து செல்லத்தான்வேண்டியுள்ளது.
இது மகத்தான விளைவுகளை நமக்கு தர மறப்பதில்லை.   
நம் உறவுகளை நேசிப்பதை விட்டுவிட்டு,  எங்கேயோ 
யாருக்கோ நாம் செய்யும் உதவி பெயருக்காகவும், ‘
புகழுக்காகவும் இல்லாமல் நம் உறவுக்காக இருப்பது 
மட்டுமின்றி நம் உறவுகளையும் பலப்படுத்தும். 
உறவுகள் நமக்கு என்ன செய்தது என்ற கேள்வியே நமக்குள்
வழக்கமாகி வருகிறது.  உறவுகளுக்காக நாம் என்ன
செய்தோம்.  என்பதுதான் மேல்,   என்பது எனது கண்ணோட்டம்.
என்பதை பகிர்ந்துகொள்வதோடு 

 நடந்த நல்லவற்றை கூட்டிக்கொண்டு 
கசப்பான அனுபவங்களை கழித்துகொண்டு
எதிர்காலத்தினை வகுத்துக்கொண்டு 
2015ல் நமது சாதனைகளை பெருக்கிகொண்டு 
அனைவருக்கும்இனிய புத்தாண்டு 
நல்வாழ்த்துக்கள் 

ஞாயிறு, 21 டிசம்பர், 2014

விஜய் தொலைக்காட்சியில்
இன்று  நீயா நானா நிகழ்ச்சியில் புடவைமோகம் கொண்டவர்கள், புடவைமோகம் தவறானது என்ற தலைப்பில் கோபிநாத், விறுவிறுப்பாக நிகழ்ச்சியினை நடத்திக்கொண்டிருந்தார்.  அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவரும் தெரிவித்த கருத்துக்க்ளில் சிலர் சொன்ன கருத்துக்கள் எதார்த்தமானதாகவும், வியப்பானதாகவும் இருந்தது.  ஒரு புடவை எடுப்பதில் அதனை உடுத்துவதில், ரசனை இருக்கவேண்டும்தான் ஆனால் மோகம் என்பது தவறான ஒன்றாக எனக்குப்படுகிறது.  

               புடவை என்பது நமது  பாரம்பரிய உடை பெண்களுக்கு அழகை தரும் மிக அழகான உடை,  இதையே தற்பொழுது கவர்ச்சி உடையாக அணியும் கலாச்சாரம் மாறிக்கொண்டு வருகிறது.   தொலைக்காட்சிகளிலும் சென்னை போன்ற மாநகரங்களிலும் இவர்கள் உடுத்தியிருப்பது புடவைதானா என்று யோசிக்கும் அளவிற்கு உடுத்தும் விதம் மாறிக்கொண்டிருக்கிறது.  

               புடவையை அலமாரியில் அடுக்கிவைப்பது அதை கலையாமல் கையாளுவது ஒரு கலைதான், ஆனால் வி.தொ.காயில் புடவையில் மோகம் கொண்டவர்கள் கூறிய கருத்துக்கள், 

 •  புது புடவை எடுத்தால் அததைப்பார்த்தவுடனே ஒரு கிளு கிளுப்பு ஏற்படும்.

 •  அலமாரியில் அடுக்கிவைத்த புடவைகள் சரியும்பொழுது சாக்லேட் சவரில் நனைவதுபோல் இருக்கும்-

 •  புதுப்புடவை அல்லது கட்டாத புடவையை பார்த்தவுடனேயே ஏதாவது ஒரு காரணத்தை கொண்டு கடைக்குச்சென்று வருவது.

•    டென்சன் வரும்பொழுது புடவைகளை  கலைத்து பின் மடித்துவைக்கும்பொழுது டென்சன் குறையும்.

•    பட்டுப்புடவையின் வாசனையே ஒரு கிளு கிளுப்பை உருவாக்கும்.

•    சேலை பார்த்துப்பார்த்தே பழசாயிரும்.  

•    அடுக்கிய சேலைகள் சரியும்பொழுது நம்மை ஆசிர்வதிப்பதுபோல் இருக்கும்.

•    அடுக்கிவைத்து கலைக்காமல் எடுப்பது பிடிக்கும் இதற்கு என் கணவர் உனக்கு சான்றிதழ் தரப்போகிறார்கள் என்று கூறுவார்.  

             கோபிநாத் கூறியது.

          ( நான் உங்களுக்கு சர்டிபிகேட் தரம்மா )

         இப்பதான் சார் எனக்கு மனது நிறைவாயிருக்கு

•      நான் கட்டுற புடவை மாதிரி மற்றவங்க கட்டக்கூடாது.  

•      என் புடவை பார்த்து நாலு பேர் கருத்துச்சொல்லனும்.

•      அடுத்தவங்க எடுத்துக்கொடுக்கும் புடவையை வேறு ஒருவரிடம் கொடுத்துவிடுவேன்.  

•    நாத்தனார் மாமியாருக்காக எடுக்கும்போது ஏனோதானோ என எடுப்பேன். 

•    என் புடவையை என் மகளுக்கு கூட கொடுக்கமாட்டேன். 

•    நம்மைப்போல் நம்மைவிட உயர்பதவியில் இருப்பவர்கள் கட்டினால் சந்தோசம்.  ஆனால்  நமக்கு கீழே வேலைசெய்யும் துப்புரவு தொழிலாளி போன்றவர்கள் கட்டினால் மனது தாங்காது.  அடுத்தநாளே அந்தப்புடவையை ஒதுக்கிவிடுவேன்.


ஆள் பாதி ஆடை பாதி என்னும் பழமொழிக்கு ஏற்ப நாம் நாசுக்காக உடுத்திக்கொள்வது உண்டு  ஆனால் இப்படி பெண்கள் மோகம் கொண்டுடிருப்பது எவ்வளவு நேரத்தையும் மற்றவர்களின் மனதையும் புண்படுத்துவதாக உள்ளது.  

            நான் கட்டும் புடவையை நமக்கு கீழ் உள்ளவர்கள் கட்டக்கூடாது என்று கூறுவது எவ்வளவு அநாகரிகமான வார்த்தையோடு அல்லாமல் மனிதநேயமற்ற பேச்சு.  அதற்கு மிக அழகாக கூறினார் கோபிநாத்.  காந்திஜி படிக்கும்போது கோட் சூட் அணிந்து தான் வாழ்ந்தார் ஆனால் அவர் மாறவில்லையா, தனது கடைசி காலம் வரை அணிந்த ஆடை நாம் அறிந்தஒன்று-  இதில் புடவை எடுப்பதை புடவையை அடுக்குவதை தனது பொழுதுபோக்கு என்று கூறியதும் மிகவும் வியப்பாகவும், வருத்தமாகவும் உள்ளது.  

         நாம் நமக்கு பிடித்த சினேகமான நபர்களுக்கு பரிசாகக் கொடுப்பது  புடவைதான். திருமணத்தின்போதும் மற்ற சடங்குகளின்போதும் பயன்படுத்துவதும் மற்ற உடைகளைவிட நமக்கு சபையில் மரியாதையும்,பெற்றுத்தரும்உடை புடவையே.  ஆனால் இதுவே வேலையாக இருப்பது ஆச்சர்யம்தான்.

        
            அதில் ஒரு அம்மா கூறிய விடயம் பொருள்களை விற்றாவது நான்புடவை எடுத்துவிடுவேன் என்பதுபோல் கூறினார்கள்.  அவர்களிடம் இருக்கும் மொத்த புடவைகளின் எண்ணிக்கை 700க்கு மேல் வைத்திருப்பதோடு புடவை எடுப்பதில் இருந்து என்னால் மீண்டு வர இயலவில்லை இது  எனக்கு ஒரு நோய்போல் உள்ளது. இச்செய்தி ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கியது. 

           எந்தவொரு பெண்னும் மற்றவரைப்போல் நாமும்  அதேபொருளை வாங்கவேண்டும் என்று எண்ணினாளோ அது அவள் முன்னேற்றத்திற்கு தடைக்கல்லாகும். நமக்கு தேவையானதை மட்டும் நாம் தேர்ந்தெடுத்து வாங்குவது புத்திசாலித்தனம் என்பது எனது கருத்தாகும்.  தங்களின் கருத்துக்களை பதியுங்கள்-

   
         சனி, 6 டிசம்பர், 2014


கலையுணர்வு கொண்ட பறவைகளுக்காக ஒரு படைப்பு

            ஞானி

                                                                                                             

தன்னனன்னே  நானனன்னே.....
தனனானே  தானனன்னே...........

ஞாயிறு, 30 நவம்பர், 2014


புளகிதம்

அனைவருக்கும் வணக்கம் ,
              நீண்டநாட்களுக்குப்பிறகு வந்துள்ளேன் வராததற்குக் காரணம் சொன்னால்மிக....மிக...நீளமானதொடர்(மெகாசீரியல்)அதனால்இதற்கானஎனதுவருத்தத்தைமட்டும்தெரிவித்துக்கொண்டுஎன்தளம்வந்துகருத்துத்தெரிவித்தஎன்அன்பிற்க்குரியசகோதசகோதரிகளுக்குஎன்பணிவானநன்றிகளை உரித்தாக்கிகொண்டுஎன்பதிவினைத்தொடர்கிறேன் .
                       
 எங்கள்பள்ளியில்பயிலும்மாணவர்களின்பெற்றோர்கள்அனைவருமே கூலிவேளைசெய்பவர்கள்ஆண்களில்85நன்றாகக்குடிப்பவர்கள்குழந்தைகளின்நிலைஎவ்வாறிருக்கும்நமக்குத்தெரியும்அதனால்எங்களாலமுடிந்தஅளவுகுறைஇல்லாமல்பார்த்துக்கொள்வோம்கொடுக்கும்மனம்படைத்தோரின்நட்பு கிடைத்ததால் கண்டிப்பாக பயன்படுத்திக்கொள்வோம் வீதி இலக்கிய கலைக்கூட்டத்தில்.திரு.பஷீர்என்றசகோதன்னைஅறிமுகம்செய்து கொண்டபோது ,சகோவின் உதவியோடு  என்மாணவனின்
தந்தைக்கு (ஒருகால் இல்லை )ஏதாவது உதவி கேட்கவேண்டும்  என்று
அன்றே அதைச் செய்தேன்அவருக்கு மூன்று சக்கரங்களுடன் ஒருவண்டியும்
கிடைத்தது ,மூன்றாம் கூட்டத்தில் உங்கள்மாணவர்களுக்கு  எழுதுபொருட்கள் எதாவது வேண்டுமா?  என்று  சகோ  என்னிடம்  கேட்டபொழுது
போதுமானதை  அரசாங்கமே  கொடுத்துவிடுகிறது  அய்யா, மாணவர்கள்   விரும்புகின்ற  வேறு எதாவது  கொடுக்க  முடியுமா ? என்று  கேட்டவுடன்
 கருணை  உள்ளத்துடன்   தீபஒளி  திருநாளன்று  மாணவர்கள்  அனைவர்க்கும்
அவர்கள்  கொடுத்த பரிசால்என்பிள்ளைகள் பெற்றவை .அளவில்லா மகிழ்ச்சி,
                                                   


          கொடையுள்ளம்  கொண்டவர்
     
             கொடுத்தார்  ஓர்  அறிய உடை

            அணிந்தவன்  நடந்தான்

            அங்குமிங்கும்  பார்த்தபடி

            எனைக்கடந்தான்

             இங்கேவா என்றழைத்தேன்

             இரு ஞாயிறின்  ஒளி  சேர

             ஓடி வந்து  என் முன் நின்றான்

             என்ன ராஜா  தீபஒளியா ?

             என்றுநான்  கேட்கும்போதே

              'ம்'  என்று  கூறி  சட்டையை

              வாயில்வைதான்  அட பனியனா ?

               என்றதுமே !  ஆமாம் ,என்று

               தலையசைத்தான்.என் கண்கள்

               குளமானது  மனம் இலேசானது

                புதிய  உடைகளாக  அவன் உடுத்தியது

               சீருடைகளை  மட்டும்தானே !


ஆனால் தீபஒளித்திருநாளைக்குஎன்பிள்ளைகள் இதுவரை அணிந்திடாத
மிகவும்தறமானஉடைகள் ஐக்கியநல கூட்டமைப்பின்முன்னிலையில்
எங்கள் ஊரின் தாரகை ஆயத்தஆடைகடையின கொடைவள்ளல்வழங்கினார்
திருநாள் விடுப்புமுடிந்துபள்ளிக்கு இளவரசர்களும் இளவரசிகளும்வருகை
தந்திருந்தனர் பூரித்துப்போனோம்.அதுமட்டுமல்லாமல் பொங்கள் திருநாளைக்கும் என்மாணவர்களுக்கு இதுபோன்றஆடைகள் உண்டு
 விளம்பரத்தில் பார்பதெல்லாம் மட்டுமல்லாமல் கோழிபிரியாணி இப்படிஎத்தனை எத்தனையோஅவர்களின் விருப்பம்போல் வாங்கிக்கொடுப்போம், ஆனால்அப்பொழுது இருந்த மகிழ்சியைவிட இது இரட்டிப்பு மகிழ்சியை தந்தது அவர்களுக்கு மேலும் இருபள்ளிகளுக்கு இதுபோல் வழஙப்பட்டது.
          
                    கோடிகள்பலஇருந்தாலும்கொடுப்பதற்குஒருமனம்வேண்டும் அப்படியேகொடுத்தாலும்பெருபவர்களின்அகம் மகிழவேண்டும்,திருஇக்பால்
,அவர்கள் முழுமனதோடுகுடும்பத்தாரின்அகமகிழ்வோடு அந்த ஆடைகளை வழங்கினார் மேலும் பல உதவிகள்  செய்துள்ளார் இன்னும் என்ன உதவி மாணவர்களுக்கு வேண்டும் என செய்வதற்கு தயாராய் உள்ளார்.
 இந்த நேரத்தில் அவருக்கு என் பள்ளியின்சார்பில் நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கிறேன்.


    


                   
                               

செவ்வாய், 20 மே, 2014

உயிரின் ”“ஓர்”“ எழுத்து

  தமிழின் சிறப்புகளில் ஓரெழுத்து ஒருமொழியும் ஒன்று இதில்'அ'முதல்'ஔ  'வரை  உள்ள
பனிரெண்டும் உயிர், தமிழுக்கு' உயிர்' இதில்'எ', 'ஒ' என்பதைத்தவிற   மீதம்  உள்ள  பத்து  எழுத்துக்களும் பலபொருள்களை உடைய ஓரெழுத்துக்கள் .   இதில் 'அ' எனும் போது மகிழ்ச்சி அதிகமாகும் ஏன்....? ஏன்தெரியுமா? நம்உறவுகளில் பல


வியாழன், 15 மே, 2014

மலைகள் சமதளமானது

மதுரை செல்லும் வழியில் திருப்பத்தூர்தாண்டிமலைகள்
அணிவகுத்து நிற்கும் அழகே அலாதிதான் ஆனால் அந்த மலைகளெல்லாம் தற்பொழுது
தரை மட்டம் ஆகிவிட்டது

செவ்வாய், 29 ஏப்ரல், 2014

                  கண்ணில் ஈரம்
விஜய்தொகாயில் சூப்பர்சிங்கர் நிகழ்ச்சியில்(29/4/14) ஒருபையன்
\\கோழிஒருகூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே// என்றபாடலை மிக அழகாக மிகவும்அழகாக பாடினான்.ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

கைபேசியின் தீமைகள்

தீமைகள் கைபேசியால்விளையும் ஆபத்துகள் அதிகம், நம் உயிருக்கே ஆபத்துவிளைவிக்கும் என்றால் நம்புவது கடினம்தான் ஆனால் இதுதான் உண்மை, 7வயத்திற்கு உட்பட்டோர் மேலும்கர்ப்பிணிப்பெண்கள் கைபேசியில் பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நாம டவர்


வியாழன், 17 ஏப்ரல், 2014

கைபேசி

சிலர்கைபேசியில்பேசும்பொழுதுசிலர்வேடிக்கையாககூறுவார்,போன,வச்சுட்டுப்பேசு   அதுவே நல்லா அங்க வரைக்கும் கேட்க்கும் என்று   ஆனால்சிலர்  கைபேசியை காதில்ஒட்டிவிடுகின்றனர்,    பேசுறாங்களா? பேசலையா?                 ஒன்னும் புரியல அது போல குறுஞ்செய்தி அனுப்பும்போதுபாத்தீங்கன்னா கிடுகிடுன்னுஅந்தவிரல்கள் படும் பாடுஇந்தகாட்சியெல்லாம்பேருந்து நிலையத்திலும்பேருந்தில் பயணம் செய்யும் பொழுதும்பார்க்கமுடிகிறது.
 ,ஒரு நாள் எங்கள் பள்ளிக்கு வந்த brtபுதுகை பிளாக்கில் உள்ள குரு வளமையத்தில் வகுப்பு எடுக்கவேண்டும் செல்லிடப்பேசி, இணையதளம் இவைபற்றி (நன்மை,தீமை)எனக்கு கவிதைஎழுதிக்கொடுங்கள் (என்நண்பர்) என்னிடம் கேட்டார்(முதல்நாள்மாலை)இந்த மலரில் தோன்றிய.........

              வாசம் 1

    காதலர்கள்
காதோடு ஒட்டியகைபேசி!
இதழ்கள் அசையாமல்!
 எப்பொழுதும் பேச்சு!


         வாசம்2

     குறுஞ்செய்தி

புதன், 9 ஏப்ரல், 2014

பசுமைமழை காலங்களில் நாம் பயணம் செய்யும் பொழுது பேருந்தில் அந்த சாளரத்தின் ஓரம் அமர்ந்து சில் என்ற காற்று முகத்தில் மோத மனதெலாம் குளிர்ந்து போகும் வெளியில் வேடிக்கை பார்த்தால் மரத்தில் ஒரு பசுமை
அதன் மேல் படர்ந்திருக்கும் கொடி ஒரு பசுமை என மாறி மாறி காட்சி தரும்,
இந்த மலரில் தோன்றிய..........
               
                        வாசம்

 
         மாரி வந்த மகிழ்ச்சியிலே 
             மறுநாளே உன் அழகு!
       

சனி, 22 மார்ச், 2014

தமிழ்

தமிழின் சிறப்பை சுருக்கமாகச்சொல்லவேண்டும் அது  எல்லாதரப்பினருகும்  புரியும்படிஇருக்கவேண்டுமே, என்றுயோசித்தேன்,அதன் விளைவாக        தோன்றிய கவிதை சென்ற சுதந்திரதின ( 2013) விழா நிகழ்ச்சியில் எங்கள் பள்ளியில்   ஐந்தாம்   வகுப்புபயிலும்  மாணவி  பார்க்காமல் கூறி பாராட்டுப்பெற்றாள்.
ஆறாயிரத்திற்கும் மேற்ப்பட்ட
     மொழிகளில் ஆறில்
ஒன்றாய் அவதரித்தவள்-நீ

செவ்வாய், 18 மார்ச், 2014

திங்கள், 17 மார்ச், 2014

ஞாயிறு, 16 மார்ச், 2014

காதலர்கள்

சிலர்பேசும்பொழுதுநான்கூறுவதுஉண்டுஏம்பா கைபேசியைகீழவை....ஏன்?
என்று அவர்கள் கேட்பார்கள்நீகைபேசிஇல்லாமபேசினாலே எனக்குக்கேக்குதுஎன்று விளையாட்டாக கூறுவேன் சிலர்காதுல
கைபேசிஇருக்கும், பேசுறமாதிரியே தெரியாது.ஆனா பேசுறாங்க.........பேசுறாங்க.........பேசிக்கிட்டேஇருக்காங்க.
காதோடுஒட்டியகைபேசி

சனி, 15 மார்ச், 2014

காணவில்லை

சாஸ்திரங்கள்!

பயணம்

பயணம் என்றால் அதிகாலை நேரத்தில்தான் இருக்க வேண்டும். அந்தப்பயணம்,
எப்படி இருக்கவேண்டும் ..?

இதோஇப்படித்தான்.......

பௌர்ணமி

இன்று உனக்கு

பொறாமை

நீ யாருக்கு உறவு?


புதன், 12 மார்ச், 2014

தவித்துப் போனாள்..!!!

                        மேடுபள்ளங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் உண்டு,ஆனால் சிலர் மிகவும்பாதிக்கப்படுகின்றனர் எனக்குத்தெரிந்த ஒருபெண் ஒருவரை விரும்பித் திருமணம் செய்து கொண்டாள் அதுவும்குடும்பத்தை எதிர்த்து கலப்புத்திருமணம், சந்தோஷமாக வழ்ந்து கொண்டிருந்தனர் மேலும் சந்தோஷமாய்!  அவள் தாய்மை அடைந்தாள், அளவுகடந்த மகிழ்ச்சி! குழந்தை பிறந்தது, சிலமாதங்கள் கழிந்தன வேலையும் கிடைத்தது, மட்டற்றமகிழ்சி! திடீர் என்று,  ஒருநாள் அவள் கணவனுக்கு சுகமில்லாமல் போனது  தவித்துப்போனாள் ,ஆனாலும் போராடினாள், குழந்தை, கணவன், பணி போராட்டம்தான், போராடினாள் செயித்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் போராடினாள்,  நம்பிக்கை காணமல் போனது, காணமல்போனது நம்பிக்கை மட்டுமல்ல! அவளின் உயிரும்தான்(கணவன்)   தன்குழந்தை மட்டுமே தனக்கு உறவாகநின்றது! தவித்துப்போனாள்..........?

                  இந்த மலரில் தோன்றிய வாசம்.....                                                                                                      


                           இதோ...........


ஞாயிறு, 9 மார்ச், 2014

ஓயவில்லை.....!

  பெண்அடிமைஓய்ந்ததென்று,   நாம்மேடையில்மட்டும் பேசிக்கொண்டு இருக்கிறோம், ஆனால் பெண்ணிற்கு நடக்கும் அநியாயங்களை ஆங்காங்கே பகிரங்கமாகநடதிக்கொண்டுதானே இருக்கின்றனர்.பயணத்தின்போது நடந்த   நிகழ்வு,

சனி, 8 மார்ச், 2014

விடுதலை எப்போ..?

       
 மகளிர் தினவாழ்த்துக்கள்.. முழுமனதோடு ஏற்றுக்கொள்ள இயலவில்லை.   ஏனென்றால்              மகளிர் என்றால் காட்சிப்பொருள்..etc  மழலை மாறாதமலர்கள்கூட கசக்கப்படும்நிலை மனது வலிக்கிறது,   

சனி, 1 மார்ச், 2014

உரு மாறிய சாலை

   மூன்றுஆண்டுகளுக்கு முன்   நடந்த நிகழ்வு அதுநல்லமழை காலம்  ஆதலால் மேகங்கள் கருத்துக் காணப்பட்டது மழை வருவதற்குள் நாம்      
வீட்டிற்க்குச் சென்று விடலாம் என்று சற்று வேகமாக வருவோம்  என்று
முயற்சித்தேன்  முடியவில்லையே , சாலையெல்லாம் (குழிகள் எல்லாம்)
நீர் நிரம்பியிருக்க நான் பட்டபாடு இருக்கே , சொல்லித்தீரா..........த  சோகம் இதன் வாசம் இதோ.

வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

பரிசு

 காலில் அடிபட்டபோது மைதிலி எனக்குக்கொடுத்த.
                   

  பரிசு

சனி, 22 பிப்ரவரி, 2014

மலரின் வாசம்

        

  மலர்

என் மகள் இருசக்கர வாகனத்தை இயக்க நான் பின்னால் அமர்திருந்தேன்.  நான் வாயை வச்சுக்கிட்டு சும்மா இல்லாமல்  அவளுக்கு வேடிக்கை காட்ட, வண்டி விளக்குக்கம்பத்தில் மோத, நான் விழப்போறேங்கறது உறுதியான பின் ஐயோ விழுந்தால் முகம் அடிபட்டுவிடுமே என்றுகாலைஊன்ற காலில் நல்ல அடி. பிச்சிக்கிட்டு போயிருச்சு. 25தையல். வீட்டிற்க்கு வர ஒரு வாரம் ஆனது. என்அம்மாஎன்னைப் பார்த்துக்கொண்டார்...,. விழி மறைக்கிறது எழுத முடியவில்லை,  என் அம்மா என்னைப் பார்த்துக்கொண்டதை(மலர்)  நான் பார்த்ததுஇப்படித்தான் (வசம்,என்வயது45.)