ஞாயிறு, 14 டிசம்பர், 2014

2030 களில்
மரங்களை வெட்டவெட்ட

மடிகின்றோம் நித்தம் நித்தம்.

வருங்காலம் என்னவாகும்?
வருத்தம்தான் மிஞ்சி நிற்கும்.

நீர்விடாய், உயிரைப்போக்க
நீரின் விலை  இலட்ச ரூபாய்.

காய்ந்துகருகிய முகம்‘
வற்றி வறண்ட தேகம்,

கேசம் உதிர்த்த சிரம்,
நேசம்  கெட்ட மனிதம்,

ஒழுக்கத்தை ஒழித்த மக்கள்,
நெறிகெட்ட வாழ்வு வாழ,

பொய்யாமொழியின் உரை
மெய்யாகும் காலம் நாளை!

மூச்சுக்காற்றை மூட்டையாக
முதுகிலே சுமந்துசெல்ல........

காற்றுத்தீர்ந்தால் என்னவாகும்
கடினம்  தான் பின் என்ன செய்ய.


20 கருத்துகள்:

 1. ஆஹா! அருமையான கவிதை டீச்சர்!! எளிய மொழி! அரிய தகவல், ஆழமான கருத்து!! உங்க ஸ்டைலே தனி தான்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றிப்பா,என் வழிதனி வழியாஇருக்குள்ள கொஞ்ச
   மாத்திப்பாப்போ.(அடுத்தபதிவில்)

   நீக்கு
 2. காற்று தீர்ந்தால்
  நம்
  கதையும் தீரும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதை தீராமல் நாம் பார்த்துக்கொள்வோம் சகோ
   மரங்களை இடங்கள் எங்குள்ளதோ அங்குவளற்
   போம்

   நீக்கு
 3. வணக்கம்
  யாவரும் படிக்க வேண்டிய கவிதை மிக அருமையாக உள்ளது.. பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம்மால் முடிந்தவரை இருக்கும் மரங்களையாவது
   ஒவ்வொருவரும் காப்போம் நன்றிசகோ,

   நீக்கு
 4. 2030 ன் நிலையை விளக்கும் உன்னத கவிதை.
  நல்லதொரு கவிதை படைத்திட்ட நல்லதொரு இதயத்திற்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அனிதா 2030களில் நாம் உண்ணும் உணவிலும்
   கலாச்சாரத்திலும் கூட நாம்கவனமாகத்தானே இருக்க
   வேண்டி உள்ளது.

   நீக்கு
 5. பதில்கள்
  1. நன்றி சார், நீங்க கருத்துப்போட்டா ஏதோ பரவால்லன்னு அர்த்தம் சரிதானே சார்.

   நீக்கு
 6. ஆஹா என்ன ஒரு சமூக சிந்தனை இதே எண்ணங்கள் எல்லோர் உள்ளத்திலும் விளைந்தால் மரங்களும் விளையும் மனிதகுலம் தழைக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் சகோ ,மரங்களும் மனித குலமும் தழைக்கட்டும்

   நீக்கு
 7. காற்றுத்தீர்ந்தால் என்னவாகும்
  கடினம் தான் பின் என்ன செய்ய....!

  உண்மையான வரிகள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 8. 2030களில் அல்ல. இப்போதே அதற்கான சூழல் ஆரம்பித்துவிட்டது. சமூகப் பிரக்ஞை உள்ள கவிதை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் ஐயா, நிலமாசுபாடு மரங்கள் வளர்வதற்கான்
   சூழலையே மற்றிவிட்டது நன்றி.

   நீக்கு
 9. வாழ்த்தவந்த தமையனே நன்றி.

  பதிலளிநீக்கு
 10. நண்பியே தங்களை வலைச்சரத்தில் இணைத்திருக்கிறேன் வருகை தரவும்

  பதிலளிநீக்கு
 11. நன்றிசகோ சென்று பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 12. சுற்றுச்சூழல் குறித்த கவலையை நன்கு பதிவு செய்திருக்கிறீர்கள் கவிதை `2030-களில்`.
  புதுக்கோட்டை சந்திப்பு வலைப்பக்கங்களைத் தேடுகையில் நீங்கள் கிடைத்தீர்கள்!
  -ஏகாந்தன் டெல்லி.
  http://aekaanthan.wordpress.com

  பதிலளிநீக்கு