புதன், 31 டிசம்பர், 2014

உறவுகள் வேண்டும்.


            குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
என்பது எவ்வளவு உண்மை, இக்கால சந்ததியினர்‘
பெருமபாலும் தாத்தா,பாட்டி, சித்தப்பா அத்தை 
போன்ற உறவுகளை மறந்து கொண்டிருக்கின்றனர்.‘
இன்னும் சில காலங்களில் ஏதோ ஓர் இடத்தில்
பார்க்க நேரிடும்போது இவர்தான் உன் சித்தப்பா
அல்லது அவர்தான் உன் சித்தப்பா என்று
கூறும் நிலை தொலைவில் இல்லை.

            உறவுகளோடு வளரும் குழந்தையின் மனநலம்
மற்றும் உடல்நலத்தின் பலம் நமக்கு தெரிந்ததுதான்
இவற்றை மேம்படுத்த நாம் செய்யவேண்டியது 
ஒருசில காரணங்களே  உறவுகளை சொல்லிவளர்ப்பது
மேலும் முக்கியமான நாட்களில் அவர்களிடம் 
ஆசி பெறச் செய்வது விழா நாட்களில் அன்பினை
 பரிமாரிக்கொள்வது போன்ற செயல்களோடு விரிசல்கள் 
இல்லாமல் பார்த்துக்கொள்வது (இது சாதாரணமல்ல ) 
விரிசல்கள் விரிவடையாமல் இருக்கவும் முதலில்
பெண்கள் நினைக்கவேண்டும்.

 எல்லாவற்றிற்கும் பெரியவன் இறைவன்
பணிவு உயர்வுக்கு வழி என்கிறது வேதங்கள் 

 தொலைக்காட்சி முன் அமர்ந்து தேவையற்ற தொடர்களை
 பார்ப்பது அர்த்தமில்லாமல் பேசிக்கொண்டிருப்பது இவற்றை நாம்
தவிர்த்து நல்ல நல்ல செய்திகளை சொல்வதற்கும், 
உறவுகளை நேசிப்பதற்கும் கூட தொடர்கள் நம் தொலைக்காட்சியில்
ஒளிபரப்பப்படுகிறது. ( உறவுகள் தொடர்கதை, என் கணவன் 
என் தோழன் )

 விட்டுக்கொடுப்பது எல்லா நேரங்களிலும் நமக்கு 
வருவதில்லை, ஆனாலும் சில காரணங்களுக்காகவாவது
நாம்  விட்டுக்கொடுத்து செல்லத்தான்வேண்டியுள்ளது.
இது மகத்தான விளைவுகளை நமக்கு தர மறப்பதில்லை.   
நம் உறவுகளை நேசிப்பதை விட்டுவிட்டு,  எங்கேயோ 
யாருக்கோ நாம் செய்யும் உதவி பெயருக்காகவும், ‘
புகழுக்காகவும் இல்லாமல் நம் உறவுக்காக இருப்பது 
மட்டுமின்றி நம் உறவுகளையும் பலப்படுத்தும். 
உறவுகள் நமக்கு என்ன செய்தது என்ற கேள்வியே நமக்குள்
வழக்கமாகி வருகிறது.  உறவுகளுக்காக நாம் என்ன
செய்தோம்.  என்பதுதான் மேல்,   என்பது எனது கண்ணோட்டம்.
என்பதை பகிர்ந்துகொள்வதோடு 

 நடந்த நல்லவற்றை கூட்டிக்கொண்டு 
கசப்பான அனுபவங்களை கழித்துகொண்டு
எதிர்காலத்தினை வகுத்துக்கொண்டு 
2015ல் நமது சாதனைகளை பெருக்கிகொண்டு 
அனைவருக்கும்இனிய புத்தாண்டு 
நல்வாழ்த்துக்கள் 

13 கருத்துகள்:

 1. சமூக சிந்தனையுடன் கூடிய நல்ல பதிவு வாழ்த்துகள் சகோ
  வாழ்க வளமுடன்
  இனிய 2015 புத்தாண்டு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 2. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. நல்ல சிந்தனை.. கசப்பான பழைய நினைவுகளை மறக்கவேண்டும். இனிய நினைவுகளை மனத்தில் நிறுத்தி உறவுகளோடு பழகும் எண்ணம் வேண்டும். மனம்நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 4. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 5. வணக்கம்

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 6. "அன்பும் பண்பும் அழகுற இணைந்து
  துன்பம் நீங்கி சுகத்தினை பெறுக!"

  வலைப் பூ நண்பரே!

  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் (2015)

  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.fr

  பதிலளிநீக்கு
 7. புத்தாண்டு சிறப்பு சிந்தனை அருமை டீச்சர்:) இதை நீங்க சொல்வது தான் பொருத்தமானதும் கூட:) உங்களுக்கும்,சாருக்கும், பிரபு, சிநேகாவிற்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு

 8. பொலிக.. பொலிக.. புத்தாண்டு!

  புத்தம் புதுமலராய்ப் புத்தாண்டு பூக்கட்டும்!
  சித்தம் செழித்துச் சிறக்கட்டும்! - நித்தமும்
  தேனுாறும் வண்ணம் திளைக்கட்டும்! செந்தமிழில்
  நானுாறும் வண்ணம் நடந்து!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  பதிலளிநீக்கு


 9. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
  நன்றி !

  பதிலளிநீக்கு
 10. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோதரி!

  உறவுகள் வேண்டும் உலவும் மகிழ்வு!
  பிறவுண்டோ வேறு பெரிது!

  அருமையான பகிர்வு!
  வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 11. இக்காலத்திற்குத் தேவையான பதிவு. தனித் தனித் தீவுக் கூட்டங்களாக சமுதாயம் சிதறிப் போய்க்கொண்டிருக்கும் நிலையில் இவ்வாறான பதிவு மனதிற்கு நிம்மதியைத் தருகிறது.

  பதிலளிநீக்கு
 12. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை---இதுதான் நிலவிக் கொண்டு இருக்கிறது...

  பதிலளிநீக்கு