திங்கள், 12 ஜனவரி, 2015

நள்ளிரவில் கேட்ட குரல்

ஆனந்தஜோதி இதழில் நடந்த கவிதை போட்டிக்காக எழுதியது தேர்வாகவில்லை உன் தாய் கண்ணில் பட்டிருந்தால்?
உனை தங்கம்போல் தாங்கிய
தமையன்மார் பார்த்திருந்தால்?
நாசக்காரர்களை நையப்புடைத்திருப்பார்.
நசுக்கியே போட்டிருப்பார்.

பொன்னே, பொன்னின் நிகரே.
பொற்கிளியே!
பூத்திருந்த புதுப்பூவே!
சித்திரமே சீர்குலைந்தாய்,
சித்தபிரமை ஆனதற்கு,
சீமாட்டியே நீ என் செய்தாய்,

அழகெல்லாம் அழுக்கேறி
கருங்கூந்தல் பிரியாகி‘
அவிழ்ந்த உடை அலங்கோலம்
ஆனாலும் உன் எழில் கண்டு
அற்ப உடல் அரக்கர்களால்
அழிக்கப்பட்டாய் அப்பொழுதே,
பெண்மை அலறுகிறது....

ஆனால் நீ மட்டும் மௌனமாக
உன் மௌனம்  கண்டு
அழுதது நள்ளிரவுமட்டுமல்ல
நாங்களும் தான் சோதரியே!
16 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. நாம நினைக்கிறோம்......... முடியலியே??ஆம் சகோ, இந்தக்கொடுமையும் கூடாது பதிவு போடும்
   போதே கருத்து போட்டுடுறீங்கபாருங்க.!!!!!!!!!!!!

   நீக்கு
 2. பதில்கள்
  1. நேரமில்லை என்றாலும் நேரத்துக்கு வருகைப்பதிவு...........எப்டிசகோ??

   நீக்கு
 3. அருமை சகோ...
  ஆழமான கருத்துடன்..
  இதமாகவும்...
  ஈர்த்தது என்பது
  உண்மையென்றே...
  ஊர்ஜிதமாகிறது
  எழுத்தென்பேன்..
  ஏனென்றால்
  ஐயமின்றி
  ஒலித்ததே
  ஓங்கிய குரலாய்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஔடதமின்றி
   கலங்கியது கண்கள்
   கிசிலியம் துவண்டது
   கீலாபலன் கொடுமையாலே
   குக்கர்போல் ஆகிவிட்டால்
   கூறிலாள் அதனால்தான்..........!
   கெந்தகம் கொடுத்து
   கேரகண்ட பாசாணம் தோய்த்து
   கையிழைத்தல் செய்ய வேண்டும்
   கொக்கரித்திருக்கலாமே?
   கோக்கள் வந்திருப்பர்
   கௌரியத்தில் கட்டிவைத்து
   ’’ங’’போல் வலைத்திருப்பர்.
   அருமைசகோ,நாந்களூ.............
   எழுதுவம்ல்ல)))))

   நீக்கு
 4. மனம் கனக்கிறது சகோதரியாரே
  இது போன்ற கொடுமைகள் நீங்கும் நாள் எந்நாளோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆக்குவதும்பெண்ணே, அழிப்பதும்பெண்ணே
   ஒவ்வொரு பெண்ணும் நினைத்தால் முடியும் சகோ.

   நீக்கு
 5. எத்தனை முறை படித்தாலும் கண்ணீர் வரவழைக்கிற பாடல்:(( இதைநீங்கள் படித்துகாட்டிய கணீர் குரல் காதுக்குள்ளேயே இருக்க டீச்சர்:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாராட்டுவதற்கு உங்களுக்கு சொல்லியா தரனும்.
   அந்தநாள்ஞாபகம் நெஞ்சிலேவந்ததே
   அன்றுபோல் என்றுமே இல்லையே?
   அது ஏன்?ஏன்? நன்பியே.

   நீக்கு
 6. சோகச் சித்திரம்
  கவிதை வடிவில்..!
  அருமை கவிஞரே!

  பதிலளிநீக்கு
 7. வாங்க சகோ உங்கபக்கமெல்லாம் வந்துட்டு
  ஓடி வந்திருக்கேன்,பின்னூட்டமே செம்யாச்சே
  சகோ தங்கள்தளத்தில்.

  பதிலளிநீக்கு
 8. வலி நிறைந்த கவிதை வலியைச் சொல்கிறது.அருமை...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அமாம் இதுபோன்றபென்களைப் பார்க்கும் போதெல்லாம் காரணம் தேடத்தோன்றும்
   அனிதா.

   நீக்கு
 9. வணக்கம்

  படித்த போது மனதில் சோகம் புரையோடியது... நன்றாக உள்ளது
  கவலை வேண்டாம்.. முதல் தோல்வி என்றால் அடுத்த கட்டம் வெற்றிதான் என்பதை மனதில் நினைத்துக்கொள்ளுங்கள் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் இதைத் தவிற வேரு எந்த ஒரு போட்டிக்கும் எழுதியதே இல்லை சகோ,அதனால் என்ன .உங்கஎல்லோரின்கருத்துக்களே எனக்குப்போதும்

   நீக்கு