செவ்வாய், 17 நவம்பர், 2015

ஏக்கங்கள்

கடவுளே  சகோ  கில்லர்ஜீக்கு  எந்த நோயும் வராம  நீதாம்பா  காப்பாத்தணும்
மொத்த மருத்துவர்களும்  செவிலியர்களும்  இவர மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தால் மத்தவங்களை யார்? பாப்பாங்க இதுதான் எனது முதல் ஆசை .
அன்புத்தோழி கீதா  குறிப்பிட்ட 10பேரில் நானும் ஒருவர்  (இப்படியெல்லாம் இழுத்துக்கொண்டுவர வேண்டியுள்ளது )
நான் எதற்கும் ஆசைப்படுபவள் அல்ல தேவைகள் நிறைவேற முயற்சிக்க  வேண்டும் தேவைகளுக்கான விருப்பப்த்தை ஆசைஎன்று சொல்ல இயலுமா?  
 பின்வரும் 10பற்றியும் ஒவ்வொரு நாளும் நான் நினைப்பது உண்டு .
1.   சோம்பேறித் தந்தையர்களின் குழந்தையாய்ப்பிறந்து பசியோடு பள்ளிக்கு 
வந்து மதிய உணவுக்காக கடிகாரத்தைப்பார்க்கும் குழந்ததைகள் பிறக்காமலே இருக்க வேண்டும் .

2.அன்பிற்காக மட்டும் குழந்ததைகளை பெற்றெடுக்கும் பெற்றோர் வேண்டும் 

 3.குழந்தைகளின்  தாயோ அல்லது தந்தையோ மாறாத நிலை வேண்டும் .

4.மாணவர்களின் திறமைக்கு ஏற்ற (1முதல் 8வரை )தேர்ச்சி கொடுக்க 
   அரசு ஆணை இடவேண்டும் .
5.சில அரசு ஊ ழியர்கள் தான் பெறும் ஊதியத்திற்காகவாவது உழைக்க      வேண்டும்.தன்னையும் தன் புகழையும் உயர்த்திக் கொள்ளமட்டும் 
எண்ணாமல் உழைக்கும் மனம் பெறவேண்டும் .

6ஆண்களை ஆட்டிப்படைக்கும் சில பெண்களிடமிருந்து ஆண்களுக்கு 
விடுதலை வேண்டும் .
7.மழையால் மக்கள் படும் கஷ்டங்கள் மாற முறையான மற்றும் நிலையான 
 தீர்வுகாண அரசுக்கு புத்தி கூறவேண்டும் .

8.உலகில்மாசு குறையவும் மழைபெறவும்  வெற்றிடங்களிளெல்லாம் மரங்கள் வேண்டும் .

9.சுய நலமில்லாத ஆட்சி வேண்டும்.

10.ஒவ்வொரு நாளும் நான் வலைப்பக்கம் வந்து நண்பர்களின் பதிவுகள் படித்து கருத்திட வேண்டும் ,நான்  எழுத நினைப்பதை நான் சொல்லும் 
பொழுதே என்வலைப்பூவில் பதிவாக வேண்டும் .
மிகப்பெரிய வேலையே இனிமேதான் 10பேர் யாரு ..........?
1சகோ வைகரை    
  kavi-vaikarai.blogspot.in
2.ஐயாபொன்.கருப்பையா
pudugaimanimandram.blogspot.in.
3.சகோ மகா.சுந்தர்
mahaasundar.blogspot.in
4.சகோ.அ.பாண்டியன்.
pandiyanpandi.blogspot.com
5.சகோ.மணவைஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.com
6.சகோ.அனிதா
anithashiva.blogspot.in
7.சகோ.ஆ.பூபாலகிருஷ்ணன்.
karurboobageethan.blogspot.in
8.சகோதரி.த.ரேவதி
tamizhal.blogspot.com
9.சகோ.குருநாதசுந்தரம்
kurunathans.blogspot.in
10சகோதரி.மகேஸ்வரிபாலச்சந்திரன்.
balaamagiblogspot.com
தொடரட்டும் நண்பர்கள்.

   

32 கருத்துகள்:

 1. வாழ்த்துக்கள்....

  ஒவ்வொரு நாளும் நான் வலைப்பக்கம் வந்து நண்பர்களின் பதிவுகள் படித்து கருத்திட வேண்டும் ,நான் எழுத நினைப்பதை நான் சொல்லும்
  பொழுதே என்வலைப்பூவில் பதிவாக வேண்டும் .
  இது தான் நல்ல ஆசை...அருமையான ஆசை...எல்லாவலை பதிவர்களுக்குமே உள்ள ஆசை...

  பதிலளிநீக்கு
 2. .///ஒவ்வொரு நாளும் நான் வலைப்பக்கம் வந்து நண்பர்களின் பதிவுகள் படித்து கருத்திட வேண்டும் ,////
  நிறைவேற்றி விடுங்கள் சகோதரியாரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோ முடியாமதானே அதைஏக்கமாகக் கூறியுள்ளேன்.அப்படியே
   அந்தப்பக்கமாஅண்ணிகிட்ட கேளுங்க முடியுமான்னு இந்தமாதிரி நேரத்தில்தான் ஏன் பெண்ணாபிறந்தோன்னு இருக்கு என் கணவர் மணவை
   நகராட்சியில் மேலாளராக உள்ளார் அலுவலகமேஉலகம் அப்பலேர்ந்து
   பள்ளிவேலைகள் வீட்டுவேலைகள் அருகில் அம்மா தம்பிகள்கொழுந்தனார் வீடுகள். (எல்லாபதிவுகளும் படிக்கவேண்டும்)

   நீக்கு
 3. ஆண்களை ஆட்டிப்படைக்கும் சில பெண்களிடமிருந்து ஆண்களுக்கு விடுதலை வேண்டும்//

  ஆண்டவன் கிட்ட எது முடியுமோ அத அதத்தான் கேட்கணும். முடியாததைக் கேட்டுபிட்டு, கடவுளை ஒரு எம்பாரசிங் சிச்சுவேஷன் லே கொண்டு போய்விட்டா நல்லது இல்ல. ஆமாம் சொல்லிபுட்டேன்.

  இது போல தான் நானும் ஒரு நாள் கனவுலே கடவுளைக் கண்டேன்.

  லே சுப்பு, இன்னாடா வேணும் கேளு அப்படின்னு அவரு கேட்டுபிட்டாரு.

  இப்படி திடுதிடுப்புலே வருவாருன்னு எதிர்பார்க்கலையா, கையும் உடல்ல, காலும் உடல்ல. பக்கத்துலே வூட்டுக்காரியும் இல்ல,

  இன்னாடா செய்யறது அப்படின்னு தெரியாமா, சரி ஒண்ணு கேட்டுபிடுவோம் அப்படின்னு,

  இன்னா உன்னால முடியும்னா, நான் இருக்கற இடத்துலேந்து சந்திரனுக்கு ஒரு தார் ரோடு போட்டுக்கொடு அப்படின்னு சொன்னேன்.

  அவரு, "
  ஏம்பா, இதெல்லாம் முடியுமா, நடக்கற காரியமா சொல்லுப்பா." அப்படின்னு சொல்ல,

  நான் பக்கம் பார்த்துட்டு, இவ பக்கத்திலே யில்லை அப்படின்னு தெரிஞ்சப்பறம்,

  இங்கே பாருங்க...என் பொஞ்சாதி காலைலேந்து நைட் வரைக்கும் பேசிக்கினே இருக்கா...கொஞ்ச நேரத்துக்கு அவ வாய்க்கு ஒரு காட்ரேஜ் லாக் போட்டு வைக்க முடியுமா..." என்றேன்.

  கொஞ்சம் யோசிச்சு பாத்த அவரு,

  "நீ என்ன முதல்லே கேட்ட ? சந்திரனுக்கு ரோடு தானே, சிங்கிள் ரோடா, டபிள் ரோடா, எத்தனை அகலம். சீக்கிரம் சொல்லு. " என்றார்.

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா.ஹா.ஹா வீட்டுகார்ட்டபேசுரதுக்கே பூட்டுப்போடச்சொன்னீங்கன்னா
   நீங்கதான் புத்திசாலிசகோ.தங்களின்வருகைக்குநன்றி.

   நீக்கு
 4. அடடா...உங்களின் ஆசைகள் அனைத்தும் நிறைவேறட்டும் மா..

  பதிலளிநீக்கு
 5. // எண்ணாமல் உழைக்கும் மனம் பெறவேண்டும்... //

  இது தான் சிறப்பான ஆசை...!

  பாராட்டுகள்... வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்சகோ ஊதியக்கணக்கு பார்க்கும் அளவுக்கு உழைப்பும் இருக்கவேண்டுமே.

   நீக்கு
 6. வணக்கம்

  வித்தியாசமான ஆசைகள்... எல்லாம்நிறைவேற எனது வாழ்த்துக்கள். இப்படியான தொடர் பதிவினால் வலையுலகம் ஒரு கலகலப்பு...
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 7. ஒரு ஆசிரியை என்ற பார்வையில், கடவுளிடம் நீங்கள் வைத்த கோரிக்கைகள் யாவும் நியாயமானவைதாம். எல்லாம் நிறைவேற இறைவன் அருள் புரியட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதில் முதல் 3ம் மனதைதினமும் வதைக்கும்விடயம்.

   நீக்கு
 8. வணக்கம் சகோ அனைத்துமே சிறிதும் சுயநலமின்றி மனதை தொட்டு விட்ட ஆசைகள் இதை ‘’ஏக்கங்கள்’’ என்று தலைப்பிட்டது மிகவும் பொருத்தமே.....

  தங்களது பதிவைப் படித்தவுடன் எனது நகச்சுத்தி இப்பொழுது குணமாகி விடும் என்ற நம்பிக்கை பிறந்து விட்டது

  கடைசியில் பத்தாவது ஆசையை முன் வைத்தீர்கள் பாருங்கள் மொத்தமாக
  // நான் எழுத நினைப்பதை நான் சொல்லும் பொழுதே என் வலைப்பூவில் பதிவாக வேண்டும் //

  அடடே அடடே இதெல்லாம் கொஞ்சம் இல்லை ரொம்ப ஓவராத் தெரியலை ஆனாலும் ஒன்று இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் இன்றில்லா விட்டாலும் நாளைய நமது சந்ததிகளுக்கு கண்டிப்பாக கிடைக்கும் இதை வலையுலகத்தில் தாங்கள் குறிப்பிட்டதை நாளைய சரித்திரம் கண்டிப்பாக பேசும்.

  மற்றொன்று தங்களது இந்தக் குறிப்பு எனக்கு விஞ்ஞான வளர்ச்சியை வைத்து ஒரு தொடர் பதிவு ஆரம்பிக்கும் ‘’கரு’’ தந்து இருக்கிறது என்பது உண்மை நன்றி சகோ அதில் முதல் கொக்கியாக உள்களைத்தான் இணைப்பேன்

  இந்தப்பதிவு வெளியிட்டவுடன் முதல் நபராக படித்து விட்டேன் கருத்துரை இடத்தான் முடியாத சூழல் பதிவுக்கு மிக்க நன்றி

  அன்புடன்
  கில்லர்ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்பாநகச்சுத்திசரியாயிருச்சா?நம்ம சகோநீச்சல்காரன்போன்றோர் இருக்கும்
   பொழுது நாமே பயன்படுத்தும் நிலை வரும் இப்பவே ஒருவார்த்தை பதிவாகுமே,கூகுல் தேடு தளத்தில், என்னது..... தொடர்பதிவா? மருபடியுமா? ஏ.......ஏ.............ஏ....சகோ நான் உங்களை தப்பா எதுவுஞ்சொல்லலையே. நன்றிசகோ.

   நீக்கு
 9. முதல் மூன்று :((
  ஐந்தாவது ஆசை!?!

  பத்தாவது ஆசை:)))


  சூப்பர் டீச்சர்!! இந்த சினேகா பெண்ணை நான் தொடர்ச்சொல்கிறேன். மாட்டேங்குதே:(( நீங்க எடுத்துச்சொல்லுங்க. உங்கள் ஆசை நிறைவேறட்டும் டீச்சர்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மேடம்குசெம்போயிட்டு இருக்கு நாளைக்குத்தான் முடியும்.

   நீக்கு
 10. ஆண்களை ஆட்டிப்படைக்கும் சில பெண்களிடமிருந்து ஆண்களுக்கு
  “விடுதலை வேண்டும்“ - இதுக்குத்தான் தொலைக்காட்சித் தொடர்கள் அனைத்தையும் உட்கார்ந்து பாக்கக் கூடாதுங்கறது...அப்பறம் நா என்னத்தச் சொல்றது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அண்ணா,நானென்னத்தச் சொல்றது எங்க அண்ணா இவ்வளவு வெள்ளந்தியா
   இருப்பீங்கன்னுதெரியலையே.........?நீங்கஒரேஒரு மேடையில் அதிலும் ஆண்கள்அதிகமாக இருக்கனும் இந்தக்கருத்தைச்சொல்லிப்பாருங்க
   அங்கே கைகள்மட்டுமல்லாமல் கண்களும் சிவந்திருக்கும்.

   நீக்கு
 11. ///ஆண்களை ஆட்டிப்படைக்கும் சில பெண்களிடமிருந்து ஆண்களுக்கு விடுதலை வேண்டும் ///

  தமிழக முதல்வரே இந்த பாயிண்டை நோட் பண்ணிக்குங்க

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட இப்படியும் ஒன்று உள்ளதோ, இருக்கட்டும் நான்பணியில் சேர்ந்தது1996/9/26
   நன்றி சொன்னமாதிரியும் ஆச்சு சகோ;))

   நீக்கு
 12. அன்புள்ள சகோதரி,

  ஆசையே அலை போலே
  நாமெல்லாம் அதன் மேலே
  ஓடம் போலே ஆடிடுவொமே.....வாழ்நாளிலே...
  வாழ்வில் துன்பம் வரவு...சுகம் செலவு....இருப்பது கனவு
  காலம் வகுத்த கணக்கை இங்கே........யார் காணுவார்?

  கண்ட கனவு நனவாகட்டும்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முயன்றால் முடியாதது ஏதும் இல்லை நேரம் ,சூழ்நிலைநமக்குசாதகமாக
   அமையுமெனில்நன்றிசகோ.

   நீக்கு
 13. 6ஆண்களை ஆட்டிப்படைக்கும் சில பெண்களிடமிருந்து ஆண்களுக்கு
  விடுதலை வேண்டும் .// அருமை...கை கொடுங்க சகோ! நாங்க ரெண்டுபேருமே இதற்கு ஆதரவு...

  சரி எல்லாபாயின்டையும் நம்ம பிரதமர் கில்லர்ஜி கிட்ட சொல்லிட்டீங்கல்ல பார்த்துக்குவார்...கவலையே படாதீங்க சகோ. அவரு இன்னேரம் பார்த்துருப்பாருனு நினைக்கிறோம்....

  /ஒவ்வொரு நாளும் நான் வலைப்பக்கம் வந்து நண்பர்களின் பதிவுகள் படித்து கருத்திட வேண்டும் ,// ஆஹா இது நீங்கல்லா நிறைவேத்தணும்...ஹஹஹஹ்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்சகோ,கைகொடுத்ததற்கு நன்றிபாதிப்புகளை வெளியில் காட்டிக்காமைருக்காங்க இதற்கு ஒரு தொடர்பதிவே போடலாம்
   அவ்ளோவிடயங்கள் உள்ளன அனைத்துபதிவுகளும்படிக்கவேண்டுமென்பது
   எனதுஆசைசகோ கரந்தையும் இதையேதான் கூறியுள்ளார் பதில்தந்துள்ளேன்.நன்றிசகோ.

   நீக்கு
 14. வணக்கம் சகோ,
  எல்லா ஆசையும் நல்லா இருக்கு,
  நிறைவேறட்டும்,,,,,,
  எல்லோரும் பொதுநலம் பற்றி சொல்லிட்டீங்க,,,,, நான் என்ன புதுசா சொல்லப் போகிறேன். வேனா சுயநலமா சொல்லட்டுமா?
  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்கசகோதரி, சுய நலமோ பொதுநலமோ நமது ஆசையைச்சொல்ல இப்படிஒரு வாய்ப்பு சொல்லுங்க சகோ,சொல்லுங்கோ.

   நீக்கு
  2. உங்களுக்காக எழுதியிருக்கேன்மா, வாருங்களேன் பாருங்கள்.

   நீக்கு
 15. வணக்கம்,

  1,8 மற்றும் 9 வது ஆசை நெத்தியடி.

  அட நானுமா? முயற்சி செய்கிறேன்.

  பதிலளிநீக்கு
 16. ஆசைகளை எழுத முயற்சிக்க வேண்டுமா?ஆசைகளைக்காண ஆவலாக உள்ளேன்.

  பதிலளிநீக்கு
 17. அருமையான ஆசைகள் அம்மா... கண்டிப்பாக நிறைவேறும்

  பதிலளிநீக்கு