ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

வலைப்பதிவர்திருவிழா

புதுகையில்நடக்கவிருக்கும்வலைப்ப்பதிவர்திருவிழாவிற்குஅன்பும் ஆதரவும்தொடர்ந்துதந்துகொண்டிருக்கும் எங்களின் நட்பு உள்ளங்களே1
உதவிசெய்து எங்களை உற்சாகப்படுத்தும் உடன்பிறப்புக்களே!
அருகில் இருந்து எங்களைஆர்வப்படுத்தும்அன்பு நெஞ்சங்களே!
அனைவருக்கும் விழாக்குழுவின் சார்பில்நன்றிகளும்வாழ்த்துக்களும்!
ஒவ்வொருகூட்டத்திலும் புதுத்தகவலும் தொடர்புகளும் தரும்வகையில்
கலந்தாய்வுகள்,எங்கள் அண்ணா  நா.முத்துநிலவன்அவர்களின்
தலைமையில்  சிறப்பாக நடந்துகொண்டிருக்கிறது கடவுளின் ஆசியுடன் அணுவின் அசைவையும் அவன் ஆற்றல் செயல்படுத்தும்
என்றநம்பிக்கையோடும்நண்பர்களின் அன்போடும் விழாவை மிக
 சிறப்பாகநடத்துவோம் வாருங்கள் .
                       ஆம் நண்பர்களே நீங்கள் கேட்பது எனக்குக் கேட்கிறது

  அப்புடி  என்னதாய்யா செய்யப்போறீங்க .............??????????ன்னுதானே .
உங்களுக்கு பயணம்செய்றது ரெம்பபிடிக்குமா?அப்ப புறப்படுங்க
 புதுகைக்கு .படிக்கிறது பிடிக்குமா?அதுக்கும் வழி செய்றோம் ,
கவிதை யில் புதுக்கவிதை எழுதுவீர்களா ?அப்புறம் மரபுக்கவிதயுமா ?
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் இல்லங்க ஐந்துமாங்காய் அட ஆமாங்க
உங்களின் திறமைக்கு விருந்து(போட்டிகள் )                      
1கணினியில் தமிழ் வளர்சி .

2.சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

3பெண்கள் முன்னேற்றம்

4புதுக்கவிதை

5மரபுக்கவிதை

பரிசுத்தொகை  எவ்வளவு அதுதானே உங்களின் கேள்வி சொல்றே,
மொத்தம் 50,000ஆயிரம் .
வெற்றியாளருக்கு" தமிழ்களஞ்சியம்   இணையம்" வழங்கும்  ஒருஅழகான
வெற்றிக்கே டயம் எப்டி நல்லாருக்கில்ல. ஆங் என்னங்கய்யா...?  உங்கள் நண்பர் நல்லா எழுதுவார் ஆனா ப்ளாக்லஇல்லையா? அட ஒருப்ளாக் ஆரம்பிக்க வேண்டியதுதான்  படைப்பாளர்களே பள்ளிக் குழந்தைகள்போல்
நீங்கள் துள்ளுவது தெரிகிறதுஉங்களின் படைப்பாற்றலுக்கு ஓர் விருந்து
உங்களின் வெற்றிக்குக் கேடயம் பரிசுகளும் பாசங்களும் உங்களுக்காக
வாருங்கள் புதுகைக்கு. அப்புறம் நாம எங்கவிட்டோ .பேசிக்கிட்டு இருக்கப்பிடிக்குமா ?கிட்டத்தட்ட 400முதல் 450பேர்களிடம் பேசலாம் வாங்க ,
சிறப்புரை பிடிக்குமா அட அதுவுஉண்டுள்ள நீங்கசாப்பிட்டுக்கிட்டே
பேசலாம் இல்லபேசிக்கிட்டேசாப்பிடலாம்சாப்பாடுன்னா சத்தான, ஆரோக்யமான , சுவையானசாப்பாடு புரதச்சத்து மாவுச்சத்து ,இரும்புச்சத்து
நல்ல கொழுப்புசத்து ,நார்சத்து,தாதுஉப்புக்கள்சேர்ந்தசெட்டிநாட்டுசாப்பாடு'
இதுமட்டுமா?நூல் வெளியீடு இருக்கு ,குறும்படம் வெளியீடு இருக்குஇன்னும் ஏராளம் இருக்கு புதுகையில் என்ன இருக்கு அடுத்தபதிவில்பார்ப்போம் .
தாங்கள் மேலும் விபரங்கள் அறிய அனுகவே ண்டிய முகவரி.
  blogersmeet2015.blogspot.com
valarumkavithai.blogspot.com.
                   

24 கருத்துகள்:

 1. அருமைப்பா..ஒரே கல்லில் இரண்டு மாங்காய் இல்லங்க ஐந்துமாங்காய் என்றே தலைப்பு வைத்திருக்கலாம். அருமை ரொம்ப நாளைக்குப் பிறகு வந்த வேகத்தில் போட்டிகளோடு விழா அறிமுகம்..அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட ஆமாண்ணாநீங்க நீங்கதான் நான்..........எண்ணித்துணிகஎன்றுவள்ளுவர்சொன்னதும்ஏட்டுச்சுரக்காயாய்..........!!!!!!!!!!

   நீக்கு
 2. பதில்கள்
  1. சகோதங்களின்படைபுகள்மட்டுமல்லதாங்களும்வர
   வேண்டும்.

   நீக்கு
 3. //நல்ல கொழுப்புசத்து ,நார்சத்து,தாதுஉப்புக்கள்சேர்ந்தசெட்டிநாட்டுசாப்பாடு'//

  அட, இத இத இதத்தான் நான் எதிர்பார்த்தேன்.

  கல்யாண சமையல் சாதம்
  காய் கறிகளும் பிரமாதம்
  அந்த பதிவர் மாநாடு பிரசாதம்
  அதுவே எனக்குப் போதும்.

  சுப்பு தாத்தா.
  www.subbuthatha72.blogspot.com
  www.vazhvuneri.blogspot.com
  www.subbuthathacomments.blogspot.com

  பதிலளிநீக்கு
 4. அன்பான உபசரிப்பு
  அருசுவையும் இருக்கு
  உங்கபாட்டை கேட்க
  ஓடிவருவோம்நாங்க.
  ஐயா வாங்கவலைப்பதிவர்குழுதங்களை
  அன்போடுவரவேற்கிறது.

  பதிலளிநீக்கு
 5. அட வாங்க ! கோர்த்தாச்சு! போகாமலா இருக்கும்...எல்லாரும் கொட்டு அடிச்சாச்சு....பரவிடும்ல...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வாங்க கோத்துட்டமுல்லதிறமைக்காரங்களையெல்லா நாங்கபக்கத்துலவச்ச்சிருந்தாலும்(நீங்கதான்)கொட்டடிச்சாதானெகூட்டங்கூடும் என்னநாஞ்சொல்றது.

   நீக்கு
 6. அசத்துறீங்கப்பா..:)

  வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்களனைவரும் எங்களோடு இருப்பதுதான்நாங்கள்
   அசத்தக்காரணமேசகோதரி.

   நீக்கு
 7. டீச்சர்!!!! வந்த வேகத்தில் சிக்ஸ்சர் அடிக்கிறீங்கே!!!! சூப்பர் டீச்சர்!! அப்புறம் போட்டிக்கட்டுரை!! கவிதைகள் எங்கே!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திமிங்கிலங்களுக்கு இடையேசிறு மீனாய் நீந்தலாமா?
   வேண்டாமா?என்றயோசனைதான்.அதோடு(நாமலே
   எல்லாபரிசுகளையும்வாங்கிக்கிட்டுவிட்டுக்கொடுப்போமே)

   நீக்கு
  2. இந்த சமாளிப்பெல்லாம் வேண்டாம் பா.
   எல்லாரும் கலந்துக்கலாம். தகுதியான படைப்பு வெல்லட்டும். அவசியம் கலந்து கலக்குக!

   நீக்கு
 8. ஆகா
  நாள் நெருங்க நெருங்க
  புதுப் புது அறிவிப்புகள், புதுப் புது நிகழ்ச்சிகள்
  மெருகேறிக் கொண்டே இருக்கின்றது விழா
  அக்டோபர் 11ஆம் நாளுக்காகக் காத்திருக்கிறேன் சகோதரியாரே
  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாங்களும்தங்களைவரவேற்க காத்திருக்கிறோம்
   சகோதரரே.

   நீக்கு
 9. நன்றிகள் பல...

  உங்கள் பாணியில் பதிவு அருமை...

  பதிலளிநீக்கு
 10. updated...

  நன்கொடை விவரங்களை அறிய இணைப்பு : http://bloggersmeet2015.blogspot.com/p/blog-page_29.html

  புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக
  அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

  பதிலளிநீக்கு
 11. அருமை சகோதரி...
  தொடர்கிறேன்
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 12. வலைப்பதிவர் திருவிழா. மின் தமிழ் இலக்கியப் போட்டிகள். பதிவு ,விருந்து, நூல் வெளியீடு என எல்லாச் செய்திகளையும் கலவையாப் படைச்சு அசத்திட்டீங்க.

  பதிலளிநீக்கு