நேர்மறை வேண்டும் வேண்டும்
வா என்று அழைத்திடவோ!
வாய் ஒன்றும் சும்மா இல்லை
சைகையால் தலையையாட்டும்
செல்பேசியோடு ஒன்றியாச்சு!
மதிப்பூட்டிய உணவுகள் செய்து
உண்டுகொண்டே ஓடுவதால்
நார்ச்சத்து நசுங்கிப்போச்சு
நவதாணிய உணவுகள் கூட
நவீனமயம் ஆகிப்போச்சு
கூட்டுக்குடும்பம் கேள்வியாச்சு
முதியோர் இல்லம் பெருகிபோச்சு
சித்தப்பா அத்தையெல்லாம்
சிலதூரம் தள்ளிப்போச்சு
எங்கேயோ யாரோபோல
அறிமுகம் செய்யும் காலம் வந்தாச்சு
நடை உடை மாறிப்போச்சு
நாம் முகம் சுழிக்க வழிஉண்டாச்சு
ராமாயண காலமெல்லாம்
ரதம்போல ஓடிப்போச்சு
விரும்பினால் வாழ்ந்திடுவோம்
இல்லையேல் நண்பர்களாவோம்
நெடுந்தொடர்கள் பார்த்துக்கொண்டு
அச்சச்சோ! அம்மம்மா! என்றே
கணவன் உண்ணும் உணவுக்கு பதில்
மோரை ஊற்றிடும்
நிலையும்
உண்டாச்சு!
வகை(4)முன்னேறிய உலகில்பண்பாட்டின் தேவை(புதுக்கவிதை)
வலைப்பதிவர்திருவிழா2015மற்றும்தமிழ் இணையக்கல்விக்கழகம்
நடத்தும்மின்தமிழ்இலக்கியப்போட்டிகள்2015க்காகவே எழுதப்பட்டது
வேறெங்கும் வெளியிடப்படவில்லைமேலும்போட்டிமுடியும்வரை
வேறெங்கும்வெளியிடமாட்டேன்என்று உறுதிகூறுகிறேன்.
வகை(4)முன்னேறிய உலகில்பண்பாட்டின் தேவை(புதுக்கவிதை)
வலைப்பதிவர்திருவிழா2015மற்றும்தமிழ் இணையக்கல்விக்கழகம்
நடத்தும்மின்தமிழ்இலக்கியப்போட்டிகள்2015க்காகவே எழுதப்பட்டது
வேறெங்கும் வெளியிடப்படவில்லைமேலும்போட்டிமுடியும்வரை
வேறெங்கும்வெளியிடமாட்டேன்என்று உறுதிகூறுகிறேன்.
ஸூப்ர் கவிதை சகோ நதைச்சுவையோடும் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்
பதிலளிநீக்குசகோ பதிவுபோட்டவுடன்பதிவர்களை ஊக்குவிக்கவரும் முதல் ஜி யே
நீக்குநன்றி.
suporo super mam
பதிலளிநீக்குரேவதி குட்டியின்முதல்வருகை மிக்கமகிழ்ச்சிடாஉன்கவிதை கட்டுரைஎன்ன
நீக்குஆச்சு?நம் பணிகளினிடைஇடையேஇதுவும்வேண்டும்.
அன்புள்ள சகோதரி,
பதிலளிநீக்கு‘நேர்மறை வேண்டும் வேண்டும்’ இன்றைய நிலையை யதார்த்தமாக படம் பிடித்துக் காட்டும் அருமையான கவிதை. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.
ஐயாவாங்க நேர்மறையாக எழுத இயலவில்லை அதனால்தலைப்பு இப்படிக்கொடுத்தேன் நன்றி.
நீக்கு"நெடுந்தொடர்கள் பார்த்துக்கொண்டு
பதிலளிநீக்குஅச்சச்சோ! அம்மம்மா! என்றே" என்றே
நம்மாளுங்க எத்தனையைப் பண்ணுறாங்க...
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்!
உண்மைதான்ஐயாஇந்த சீரியலால ஆண்கள்படும்பாடு...............?
நீக்குராமாயண காலமெல்லாம்
பதிலளிநீக்குரதம்போல ஓடிப்போச்சு....
nice
வணக்கம் சகோ! வெகு அழகாக நேர்மறை வேண்டும் என்று சிறப்பாக சொல்லியவிதம் நன்று! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநேரமிருப்பின் என் கவிதையும் காண வாருங்கள் நன்றி!