செவ்வாய், 17 நவம்பர், 2015

ஏக்கங்கள்

கடவுளே  சகோ  கில்லர்ஜீக்கு  எந்த நோயும் வராம  நீதாம்பா  காப்பாத்தணும்
மொத்த மருத்துவர்களும்  செவிலியர்களும்  இவர மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தால் மத்தவங்களை யார்? பாப்பாங்க இதுதான் எனது முதல் ஆசை .
அன்புத்தோழி கீதா  குறிப்பிட்ட 10பேரில் நானும் ஒருவர்  (இப்படியெல்லாம் இழுத்துக்கொண்டுவர வேண்டியுள்ளது )
நான் எதற்கும் ஆசைப்படுபவள் அல்ல தேவைகள் நிறைவேற முயற்சிக்க  வேண்டும் தேவைகளுக்கான விருப்பப்த்தை ஆசைஎன்று சொல்ல இயலுமா?  
 பின்வரும் 10பற்றியும் ஒவ்வொரு நாளும் நான் நினைப்பது உண்டு .
1.   சோம்பேறித் தந்தையர்களின் குழந்தையாய்ப்பிறந்து பசியோடு பள்ளிக்கு 
வந்து மதிய உணவுக்காக கடிகாரத்தைப்பார்க்கும் குழந்ததைகள் பிறக்காமலே இருக்க வேண்டும் .

2.அன்பிற்காக மட்டும் குழந்ததைகளை பெற்றெடுக்கும் பெற்றோர் வேண்டும் 

 3.குழந்தைகளின்  தாயோ அல்லது தந்தையோ மாறாத நிலை வேண்டும் .

4.மாணவர்களின் திறமைக்கு ஏற்ற (1முதல் 8வரை )தேர்ச்சி கொடுக்க 
   அரசு ஆணை இடவேண்டும் .
5.சில அரசு ஊ ழியர்கள் தான் பெறும் ஊதியத்திற்காகவாவது உழைக்க      வேண்டும்.தன்னையும் தன் புகழையும் உயர்த்திக் கொள்ளமட்டும் 
எண்ணாமல் உழைக்கும் மனம் பெறவேண்டும் .

6ஆண்களை ஆட்டிப்படைக்கும் சில பெண்களிடமிருந்து ஆண்களுக்கு 
விடுதலை வேண்டும் .
7.மழையால் மக்கள் படும் கஷ்டங்கள் மாற முறையான மற்றும் நிலையான 
 தீர்வுகாண அரசுக்கு புத்தி கூறவேண்டும் .

8.உலகில்மாசு குறையவும் மழைபெறவும்  வெற்றிடங்களிளெல்லாம் மரங்கள் வேண்டும் .

9.சுய நலமில்லாத ஆட்சி வேண்டும்.

10.ஒவ்வொரு நாளும் நான் வலைப்பக்கம் வந்து நண்பர்களின் பதிவுகள் படித்து கருத்திட வேண்டும் ,நான்  எழுத நினைப்பதை நான் சொல்லும் 
பொழுதே என்வலைப்பூவில் பதிவாக வேண்டும் .
மிகப்பெரிய வேலையே இனிமேதான் 10பேர் யாரு ..........?
1சகோ வைகரை    
  kavi-vaikarai.blogspot.in
2.ஐயாபொன்.கருப்பையா
pudugaimanimandram.blogspot.in.
3.சகோ மகா.சுந்தர்
mahaasundar.blogspot.in
4.சகோ.அ.பாண்டியன்.
pandiyanpandi.blogspot.com
5.சகோ.மணவைஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.com
6.சகோ.அனிதா
anithashiva.blogspot.in
7.சகோ.ஆ.பூபாலகிருஷ்ணன்.
karurboobageethan.blogspot.in
8.சகோதரி.த.ரேவதி
tamizhal.blogspot.com
9.சகோ.குருநாதசுந்தரம்
kurunathans.blogspot.in
10சகோதரி.மகேஸ்வரிபாலச்சந்திரன்.
balaamagiblogspot.com
தொடரட்டும் நண்பர்கள்.

   

புதன், 30 செப்டம்பர், 2015

நேர்மறைவேண்டும்வேண்டும்.

நேர்மறை வேண்டும் வேண்டும்

வா என்று அழைத்திடவோ!
வாய் ஒன்றும் சும்மா இல்லை
சைகையால் தலையையாட்டும்
செல்பேசியோடு ஒன்றியாச்சு!
மதிப்பூட்டிய உணவுகள் செய்து
உண்டுகொண்டே ஓடுவதால்
நார்ச்சத்து நசுங்கிப்போச்சு
நவதாணிய உணவுகள் கூட
நவீனமயம் ஆகிப்போச்சு
கூட்டுக்குடும்பம் கேள்வியாச்சு
முதியோர் இல்லம் பெருகிபோச்சு
சித்தப்பா அத்தையெல்லாம்
சிலதூரம் தள்ளிப்போச்சு
எங்கேயோ யாரோபோல
அறிமுகம் செய்யும் காலம் வந்தாச்சு
நடை உடை மாறிப்போச்சு
நாம் முகம் சுழிக்க வழிஉண்டாச்சு
ராமாயண காலமெல்லாம்
ரதம்போல ஓடிப்போச்சு
விரும்பினால் வாழ்ந்திடுவோம்
இல்லையேல் நண்பர்களாவோம்
நெடுந்தொடர்கள் பார்த்துக்கொண்டு
அச்சச்சோ! அம்மம்மா! என்றே
கணவன் உண்ணும் உணவுக்கு பதில்
மோரை  ஊற்றிடும்
நிலையும் உண்டாச்சு!

வகை(4)முன்னேறிய உலகில்பண்பாட்டின் தேவை(புதுக்கவிதை)

வலைப்பதிவர்திருவிழா2015மற்றும்தமிழ் இணையக்கல்விக்கழகம்
நடத்தும்மின்தமிழ்இலக்கியப்போட்டிகள்2015க்காகவே எழுதப்பட்டது
வேறெங்கும் வெளியிடப்படவில்லைமேலும்போட்டிமுடியும்வரை
வேறெங்கும்வெளியிடமாட்டேன்என்று உறுதிகூறுகிறேன்.

செவ்வாய், 22 செப்டம்பர், 2015

புதுகையில்இருப்பதுதான் என்ன??????????தொடர்ச்சி(2)பழையஅரண்மனைஎன்பதுநகரின்மையப்பகுதியில்அமைந்துள்ளது அதுதற்பொழுதுவணிகவளாகங்களாகமாற்றப்பட்டுஒருகோவில் (தட்சிணாமூர்த்திகோவில்)மட்டும்தான்நினைவுச்சின்னமாகஉள்ளது வீடுகளும்கடைகளும் உள்ளன.
             
                                 மாவட்ட ஆட்சியரகம் 

                               மாவட்ட ஆட்சியரக வளாகம் 
புதியஅரண்மனைதற்போதுமாவட்டஆட்சியரகமாக செயல்பட்டுவருகிறது.இதில்மாவட்டத்தில்உள்ளமுக்கிய
அலுவலகங்களும் இயங்கி வருகிறதுஇதுசுமார்100ஏக்கர்பரப்பளவு
கொண்டதாகும்.இதுதமிழகத்தில்எங்குமில்லாதஒருசோலைவனமாக காட்சியளிக்கிறது.                  புதுக்கோட்டை சமஸ்தானத்தை திரு.ராஜாரகுநாத தொண்டைமான் அவர்கள் 1769 முதல் 1789 வரைஆட்சிசெய்தார்.
   புதுக்கோட்டைசமஸ்தானத்தை திரு.ராஜாவிஜயரகுநாத தொண்டைமான்அவர்கள் 1789 முதல் 1807 வரை ஆட்சிசெய்தார்.


                           புதுக்கோட்டைசமஸ்தானத்தை திரு.ராஜாவிஜயரகுநாதராய தொண்டைமான் அவர்கள் 1807 முதல் 1825 வரை ஆட்சி செய்தார்.


                          புதுக்கோட்டை சமதஸ்தானத்தை திரு.ராஜாரகுநாத தொண்டைமான் அவர்கள் 1825 முதல் 1839 வரைஆட்சி செய்தார்.                               புதுக்கோட்டை சமதஸ்தானத்தை திரு.ராஜாராமச்சந்திர தொண்டைமான்அவர்கள் 1839 முதல் 1886 வரை ஆட்சி செய்தார்.                        புதுக்கோட்டை சமதஸ்தானத்தை திரு.மார்த்தாண்ட பைரவ தொண்டைமான்அவர்கள்1886முதல்1928வரைஆட்சிசெய்தார்..                    புதுக்கோட்டை சமதஸ்தானத்தை திரு.ராஜகோபால தொண்டைமான் அவர்கள்  1928 முதல் 3.3.1948 வரைஆட்சி செய்தார்


                குதிரை வீரர்கள்


             


       

       

           

             


           

நகரின்முக்கிய நினைவுச்சின்னங்கள்

     1)  நீதிமன்றம்


    2) த.சு.லு.ச.மேல்நிலைப்பள்ளி(டிஇஎல்சி)


 புவனேஸ்வரி அம்மன் ஆலயம்
சாந்தநாத சுவாமி ஆலயம்
அறியநாச்சியம்மன் ஆலயம்


அரசு மருத்துவமனை

     விருந்தினர்மாளிகை
    முதல் பேரூந்து

     பல்லவன்குளம்

      புதுக்குளம்

     மாட்சிமைதங்கிய மன்னர்கல்லூரி
    நகர்மண்டபம் (டவுன்ஹால் )
  நகராட்சி அலுவலகம்.

காலம் கருதி மேலும் படங்களும் விபரங்களும் பதிய இயலாக் காரணத்தால்
நட்பு உள்ளங்களே நீங்கள் நேரில் கண்டு மகிழ அழைக்கும் பதிவர் குழு
                                     

ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

புதுகையில்இருப்பதுதான் என்ன?????????

உலகத்தமிழர்களுக்கானபிரம்மாண்டபதிவர்திருவிழாவிற்கு
கட்டுரைகள்  கவிதைகள் எழுதிய  எழுதிக்கொண்டிருக்கின்ற நட்புள்ளங்களே !அனைவரையும் வாழ்த்தி வரவேற்றுத் துவங்குகிறேன் ,

           மயிலுக்கு தோகை அழகு!
           குயிலுக்கு குரல் அழகு !
           பதிவர்களுக்கு பதிவுதான் அழகு!
           உடலுக்கு உயிர் அழகு!
            புதுகைக்கு எது அழகு !

நண்பர்களே புதுகையின் அழகு சொல்லி மாளாத ஒன்று கண்டுகளிக்க வேண்டிய ஒன்று ,நான் சுருக்கமாகச் சொல்கிறேன் ,விரிவாகச்
சொன்னால்விழாவே முடிந்துவிடும் ,புதுகை மற்றும் புதுகையைச்
 சுற்றியுள்ள முக்கியமான செய்திகள் ஏராளம் !ஏராளம்!

                                       புதுக்கோட்டை மாவட்ட வரைபடம் 

                    புதுக்கோட்டை எல்லை ஆரம்பம்                           
                             பிரகதாம்பாள் ஆலயம் திருச்சியில் இருந்து வரும்பொழுது புதுகையின் தொடக்கத்திலேயே 
இடதுபுறமாகஇந்தசிவாலயம்உள்ளதுஇதுமன்னர்கள்காலத்தில்
கட்டப்பட்டஆலயமாகும்சுவாமியின்பெயர்கோகர்ணேஸ்வரர்
அம்பாள்பெயர்பிரகதாம்பாள் (அரைக்காசுஅம்மன்)என்றும்கூறுவர்
 .இந்தக்காசுஅம்பாள் சன்னதியில்ஒருசிறுதொகைக்குவிற்கப்படுகிறது
இந்தஆலயத்தின் பின்புறம்உள்ளபிரகதாம்பாள்நகரில்தான்ஞானாலயா 
நூலகம்உள்ளதுஇங்குகன்னிமராநூலகத்தில்இல்லாதபுத்தகங்களும்
உள்ளன. ஆலயத்தின்அருகிலேயேதிருவப்பூர்முத்துமாரிஅம்மன்
ஆலயமும் அருங்காட்சியகமும்  உள்ளது .

அரைக்காசு 

                                               ஞானாலயாநூலகம்      

                 திருவப்பூர் முத்துமாரியம்மன் ஆலயம்                                 அருங்காட்சியகம் இங்குநாம்,இதுவரைபார்க்காததும்பார்க்கவேண்டியதும்...... வந்துபாருங்கள் 
முதுமக்கள்தாழிமுதல்டைனோசர்வரைஉள்ளது  நண்பர்களேதொடரும்..........  எனக்கு அழைப்பு வந்துவிட்டதுநாம்  நாளை பார்ப்போம் நான் வரட்டுமா?.
படங்கள் கூகுளில் இருந்து நன்றி . 

ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

வலைப்பதிவர்திருவிழா

புதுகையில்நடக்கவிருக்கும்வலைப்ப்பதிவர்திருவிழாவிற்குஅன்பும் ஆதரவும்தொடர்ந்துதந்துகொண்டிருக்கும் எங்களின் நட்பு உள்ளங்களே1
உதவிசெய்து எங்களை உற்சாகப்படுத்தும் உடன்பிறப்புக்களே!
அருகில் இருந்து எங்களைஆர்வப்படுத்தும்அன்பு நெஞ்சங்களே!
அனைவருக்கும் விழாக்குழுவின் சார்பில்நன்றிகளும்வாழ்த்துக்களும்!
ஒவ்வொருகூட்டத்திலும் புதுத்தகவலும் தொடர்புகளும் தரும்வகையில்
கலந்தாய்வுகள்,எங்கள் அண்ணா  நா.முத்துநிலவன்அவர்களின்
தலைமையில்  சிறப்பாக நடந்துகொண்டிருக்கிறது கடவுளின் ஆசியுடன் அணுவின் அசைவையும் அவன் ஆற்றல் செயல்படுத்தும்
என்றநம்பிக்கையோடும்நண்பர்களின் அன்போடும் விழாவை மிக
 சிறப்பாகநடத்துவோம் வாருங்கள் .
                       ஆம் நண்பர்களே நீங்கள் கேட்பது எனக்குக் கேட்கிறது

  அப்புடி  என்னதாய்யா செய்யப்போறீங்க .............??????????ன்னுதானே .
உங்களுக்கு பயணம்செய்றது ரெம்பபிடிக்குமா?அப்ப புறப்படுங்க
 புதுகைக்கு .படிக்கிறது பிடிக்குமா?அதுக்கும் வழி செய்றோம் ,
கவிதை யில் புதுக்கவிதை எழுதுவீர்களா ?அப்புறம் மரபுக்கவிதயுமா ?
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் இல்லங்க ஐந்துமாங்காய் அட ஆமாங்க
உங்களின் திறமைக்கு விருந்து(போட்டிகள் )                      
1கணினியில் தமிழ் வளர்சி .

2.சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

3பெண்கள் முன்னேற்றம்

4புதுக்கவிதை

5மரபுக்கவிதை

பரிசுத்தொகை  எவ்வளவு அதுதானே உங்களின் கேள்வி சொல்றே,
மொத்தம் 50,000ஆயிரம் .
வெற்றியாளருக்கு" தமிழ்களஞ்சியம்   இணையம்" வழங்கும்  ஒருஅழகான
வெற்றிக்கே டயம் எப்டி நல்லாருக்கில்ல. ஆங் என்னங்கய்யா...?  உங்கள் நண்பர் நல்லா எழுதுவார் ஆனா ப்ளாக்லஇல்லையா? அட ஒருப்ளாக் ஆரம்பிக்க வேண்டியதுதான்  படைப்பாளர்களே பள்ளிக் குழந்தைகள்போல்
நீங்கள் துள்ளுவது தெரிகிறதுஉங்களின் படைப்பாற்றலுக்கு ஓர் விருந்து
உங்களின் வெற்றிக்குக் கேடயம் பரிசுகளும் பாசங்களும் உங்களுக்காக
வாருங்கள் புதுகைக்கு. அப்புறம் நாம எங்கவிட்டோ .பேசிக்கிட்டு இருக்கப்பிடிக்குமா ?கிட்டத்தட்ட 400முதல் 450பேர்களிடம் பேசலாம் வாங்க ,
சிறப்புரை பிடிக்குமா அட அதுவுஉண்டுள்ள நீங்கசாப்பிட்டுக்கிட்டே
பேசலாம் இல்லபேசிக்கிட்டேசாப்பிடலாம்சாப்பாடுன்னா சத்தான, ஆரோக்யமான , சுவையானசாப்பாடு புரதச்சத்து மாவுச்சத்து ,இரும்புச்சத்து
நல்ல கொழுப்புசத்து ,நார்சத்து,தாதுஉப்புக்கள்சேர்ந்தசெட்டிநாட்டுசாப்பாடு'
இதுமட்டுமா?நூல் வெளியீடு இருக்கு ,குறும்படம் வெளியீடு இருக்குஇன்னும் ஏராளம் இருக்கு புதுகையில் என்ன இருக்கு அடுத்தபதிவில்பார்ப்போம் .
தாங்கள் மேலும் விபரங்கள் அறிய அனுகவே ண்டிய முகவரி.
  blogersmeet2015.blogspot.com
valarumkavithai.blogspot.com.
                   

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

மாணவர்கள்

கவலை இல்லாதகற்சிலைகள் !
கபடமில்லாத கார்முகில்கள் !
சுற்றித்திரியும் பட்டாம்பூச்சிகள்!
சூட்சுமமில்லா சுவாசக்காற்று !
அசையும் அஜந்தா ஓவியங்கள்!
அழகான அர்த்தங்கள்!
விகற்பமில்லா விட்டில்கள்!
விருட்சமாக இருக்கும் விதைகள்!
சந்தோசத்தின் சாளரங்கள்!
புகழ்பெறாத போர் வீரர்கள்!
கூவித்திரியும் குயில்கள் !
ஆடித்திரியும் மயில்கள் !
அட்டகாசமான அபூர்வங்கள் !
சினங்கொள்ளச்செய்யும் சேட்டைகள்!
நமை சீண்டிப்பார்க்கும்சிற்றுளிகள்!    

சனி, 22 ஆகஸ்ட், 2015

நமதுநாயகன்சுதந்திரதினவிழா நிகழ்சிக்காக எழுதினேன் 14/8/2015அன்றுதான் எழுதிக்கொடுத்தேன் பார்த்துப்படி என்று கூறி. அவன்பார்க்காமலே
ஒப்புவித்தான் ஹரிகரன் எனும் மாணவன் படங்கள் உள்ளன ஆனால்
 ஏனோ  copyஆகுதுpasteஆகமாட்டுது


எழுச்சிநாயகனே !
இளைஞர்களின்காவலனே 1
ஆயிரம் தலைவர்கள்வந்தாலும்
என்னுள் ஆழப்பதிந்தவர் நீதானே !
இந்த்கிரகம் விட்டு வேறு
எந்தகிரகம்சென்றீர் ஐயா?
மாற்று கிரகத்தில் இருந்து
மாணவர்களின் அழைப்பேதும்
வந்ததுவோ !
நீபிறந்த தீவில் உருவானதே !
ஒரு மக்கள் தீவு !!
நாற்புரமும்மக்கள் கூட்டம்!
நடுவிலே நின் புனித உடல்!
மெய்கள் திரண்டனவே ஐயா !
உந்தன் பொய்யான மெய்கண்டு !
முப்படையும் உனைச் சுமக்க
மூச்சுவிடாமல் இருந்தாயே !
மூச்சிருந்தால் விடு வீரா ?
தன்தமையனுக்கும்
தகைமை செய்ய நினைத்தீரோ.......... ?
அதனால்தான் அவசரமாய்ச்சென்றீரோ ?
இன்னுயிர்   பிரியும் வரை
இனிமையாய் உரையாற்றிய
உத்தமரே !
ஊழல் உலவும் இந்த
அரசியல் உலகத்தில்
நீமட்டும் விதிவிலக்காய்,
சிரம்மேல் பணி உமக்கு
பதவிகளும் பல உண்டு,
ஆனால் சிறுவனின்
சிறுமடல்கண்டால் கூட
சடுதியில் விடைதருவீர்
பலமொழிகள் அறிந்தவர் -நீர்
குழந்தை மொழி விஞ்ஞானமொழி
பாமரர்மொழி பகுத்தறிவுமொழி
அன்புமொழி அறிவியல் மொழி
அறிவுமொழி அந்நியமொழி
இத்தனைமொழிகளையும்
இனிப்பேச யார்  உளரோ
"நான் என்ன தரமுடியும் "
என்று ஓர் இயக்கத்திற்கு
பெயரிட்ட பெருமானே !-நீர்
இன்னும் என்ன செய்யவேண்டும் ,
இந்தியாவின் இனியமகனே !
இயல்பே !எளிமையே !
உண்மையே !நேர்மையே !
மாசற்ற மனித நேயமே !
நின் அறிவுரை கேட்க நாங்கள்
செவிமடுத்து நிற்கின்றோம் !
சீக்கிரம் வருவீரா ........?
எண்ணற்ற தலைவர்களின்
சாதனைகள் கேட்டதுண்டு
படித்ததுண்டு ஆனால் -நின்
சாதனைகள் கண்டு கண்டு
வியந்ததுண்டு நீ வாழ்ந்த
காலத்தில் நாங்களும்
வழ்ந்ததுவே !!!!
இப்பிறவிப் பயனாகும் .

  

புதன், 19 ஆகஸ்ட், 2015

தவறேதும் செய்தாளா??????????????

எங்கோஒருஇடத்தில்நடக்கும்விடயத்திற்காகஅல்லதுசெய்தித்தாள்களில் நாம் காணும் செய்தி, நமக்கு வலியை ஏற்படுத்தியது உண்டு நமக்குத்தெரிந்த 
ஒரு பத்துவயது சிறுமி (ஒரு நாயால் )பாழ்படுத்தப்பட்டசெய்திகேட்டுதுடித்துப் போனேன் நான்வலைப்பக்கம் வராததற்கு இதுவும்ஒருகாரணம் 
 எதுவுமே பிடிக்கவில்லைபெற்றோர் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் மிகச்சரியாக நடந்துகொள்ள வேண்டும் அந்தக்குழந்தை         செய்தபாவம்தான் என்ன ????????????????????????????????????????????அத்துனைகேள்விகள் எனக்குள். 
மனதுமிக ,மிக. வலிக்கிறது எந்தக்குழந்தைக்கும் உத்திரவாதம் இல்லை நான் பணியில் சேர்ந்து இருபது வருடங்களும் ,தலைமை ஆசிரியராகி பத்துவருடங்களும் முடிந்துவிட்டது எவ்ளவோவிடய ங்களைசந்தித்ததுண்டு  
ஆனால் இதுமிகுந்த வலியைத்தந்தது .


                           பச் கைக்கொடியது       படர இருந்தது 
                           பா ழ்படுத்திவிட்டாயே -அது 
                            படரவும் இல்லை 
                            பக்குவப்படவும் இல்லை 
                            பறித்துப் புதைத்தாயே -படுபாவி 
                            ஊட்டப்பட்டது உணவோ 
                            என நினைத்து 
                            விபரீதம் தேடி அலைகிறதே 
                            அந்த விட்டில்ப்பூச்சி 
                            நஞ்சை ஊட்டி 
                            நாசம் செய்தவனே  
                            வய்ப்புக்கிடைத்ததால் 
                            தீர்த்தாய் உன்பசி 
                            வயத்துக்குமீறிய பசியால் 
                            வட்டமிடுகிறதே அந்த 
                            பருவமடையாத 
                            பசும்பேதை 
                            ம்கூம் ,உன்நிழலில் 
                           பல உயிர்கள் 
                            இல்லையேல் நசுக்கியே 
                            கொன்றி ருப்பேன் 
                             உனை நான்.               

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

தாமதமும், வரவேற்பும்

வலைத்தள நண்பர்களுக்கு எனது அன்பான வணக்கங்கள் !
அனைவரும் நலமா ? பல பணிகள் காரணமாக வலைப்பக்கம்
வர இவ்வளவு தாமதம்.........!! வருத்தம் தான் .(எங்களுக்கு ஒன்னு
வருத்தமில்லையே )மைண்ட் வாய்ஸ் கேட்குது இனியும்
வராம இருந்தா பதிவர்திருவிழாவில் சுத்தமா அடையாளம்
தெரியாம போயிடுவேன் .

                நாமெல்லாம் கொண்டாட எங்க ஊரில் திருவிழா
இதைப்பெருவிழாவாக்க தங்களின் வருகையும் ஆதரவும்
மிக மிக அவசியம் இது பதிவர்களுக்கான  விழாமட்டுமல்லாமல்
பதிவர்களின் குடும்பத்திற்கான திருவிழாவும்கூட  அனைவரும்
குடும்பத்தோடுவருக .(கீதாவின் வலைப்பக்கம் நம்மசீனா
ஐயாசொன்னதுபோல் )


புதன், 11 மார்ச், 2015

அம்மா


அய்யா கவிஞர் பாரதிதாசன்அவர்களின் வாழ்த்துக்களுடன்
இந்தக்  கவிதையை தொடர்கிறேன்.அகவை கூடி அசந்த போதும்!

செவ்வாய், 3 மார்ச், 2015

செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

முளைப்பாரி
வயலெல்லாம் வீடாக்கி

வறட்சியாக்கும்காலத்தில்
ஆரம்பமும்முடிவுமில்லாமல்
ஆளுயர நாற்றுகள்
அசைவதுபோல் காட்சி தந்து
மக்களுக்கும் மருட்சிதந்து 
அவசர அலுவல் கூட 
அப்படியே நிறுத்திவைத்து
ஆங்காங்கே மக்கள் கூட்டம்,
தங்கள் பணிகளின் நினைவோடு
பேரூந்து செல்லும் வழி எது?-
என்று தேடித்தேடி
ஏமார்ந்து நின்ற 
மக்கள் கூட்டம்
மாற்றுப் பாதையில்......இன்று.


வியாழன், 5 பிப்ரவரி, 2015

மாத்தியோசி
கண்ணகியின் காற்சிலம்பு இடம்மாறி
கைச்சிலம்பானதுவே
காப்பியத்தின் மணி மகுடம்
சிலம்பில் அனைத்தையும்
 சீர்தூக்கும் அணிகலனே
நீ மட்டும் காப்பிய நாயகியின்
கணவனோடு சென்றிருந்தால்
காப்பியத்தில் கருத்தே 
இல்லாமல் போயிருக்கும்
சிலம்பினுள் மணிகள்‘
மாறாமல் இருந்திருந்தால்‘
கண்ணகியின் நிலை என்ன?
வீரமங்கை வீழ்ந்திருப்பாள்
விடயம் இன்றிப் போயிருக்கும்.

புதன், 4 பிப்ரவரி, 2015

வரப்பிரசாதம்


ஏழைகளின் உணவாக  இருந்த சிறுதானியங்கள் இன்று
வசதியானவர்களின் உணவாக மாறிவிட்டது.  வறட்சியை
தாங்கி வளமாக வளரக்கூடிய மழைவாழ் மற்றும் கிராம 
மக்களின் வளமான வாழ்வாதாரமாக விளங்கிகொண்டிருந்த
வரப்பிரசாதம் இன்று அயல்நாடுகளுக்கு டன் டன்னாக ஏற்றுமதியாகி
அரிசியைவிட விலையேற்றம் அடைந்துள்ள சிறுதானியங்கள்
மற்றும் கொள்ளு போன்றவை நம்கையில் இருக்கும் அருமருந்துகள்
ஆனால் கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நாம் நெய்யை
தேடுகிறோம்.  உடல்பருமனை குறைப்பதற்கு பலரும் பலமுயற்சிகள் 
பல லட்சங்கள் செலவு செய்வதை நாம் பார்த்துக்கொண்டுதான் 
இருக்கிறோம்.  ஆனால் நம் முன்னோர்கள் நமக்கு பல விடயங்களை
நமக்கு சொல்லிச்சென்று இருக்கின்றனர்.  

               ” இளைத்தவனுக்கு எள்ளு 
                  கொழுத்தவனுக்கு கொள்ளு”
                
என்று பழமொழிக்கேற்ப நாமும் நடந்துகொள்ளவேண்டும் என்றால்
எப்படி சாப்பிடுவது? எள்ளை அதிகமாக நாம் சுவையோடு
 எடுத்துக்கொள்ள பலவழிகள் உண்டு.   ஆனால் கொள்ளு. இதை
அதிகமாக எவ்வாறு எடுத்துக்கொள்வது?   என்பதுதானே உங்கள்
கேள்வி  என் சகோதர சகோதரிகளின் நலன் கருதி இப்பொழுது 
நாம் கொள்ளு தோசை எப்படிச்செய்வது என்பதை பார்ப்போம்


கொள்ளு தோசை


                தேவையான பொருட்கள்

  சிவப்பு நிறக்கொள்ளு            3    கப்
  பச்சரி                                            1    கப்
  தனியா                                         1     டீஸ்பூன்
  பச்சை மிளகாய்                       2    அல்லது   3
  உப்பு                                             தேவையான அளவு
  எண்ணெய்                                சுடுவதற்கு

செய்முறை 
              கொள்ளை    முதல் நாள் இரவே கழுவி ஊறவைக்கவும், பச்சரியை
அரைப்பதற்கு 2 மணி நேரம் முன்பாக ஊறவைக்கவும் கொள்ளு, பச்சரியுடன், தனியா,  பச்சைமிளகாய் சேர்த்து அரைத்து உப்பு போட்டு கரைத்து வைக்கவும்,  பின் 15 முதல்20 நிமிடம் கழித்து தோசை செய்யவும்.

               பூண்டு  வாடை  பிடித்தவர்கள் பூண்டையும் இதனுடன் சேர்த்துக்கொள்ளவும். (சேர்த்தால்தான் சுவையாக இருக்கிறது)
               
               இதுபோன்ற உணவெல்லாம் நானும்என் மகனும் விரும்பி சாப்பிடுவோம்.  ஆனால் அப்பாவுக்கும் மகளுக்கும் கொஞ்சம் கஷ்டம்தான்
ஆனால்   இன்று எனது மகள்  மிகவும் விரும்பி சாப்பிட்டுக்கொண்டே அம்மா நல்லா இருக்குள்ள என்றாள்.   ஆமாம் சினேகா இது குதிரைக்கு மிகவும் பிடிக்கும் என்றேன். அடிப்பதற்காக துரத்திக்கொண்டே உனக்கு ரொம்பதாம்மா கொழுப்பு என்றாள்.  அதனால் தாம்மா இந்த தோசை மிகவும்  உனக்கு பிடித்திருக்கின்றது என்று சொல்லிக்கொண்டே ஒரு மகிழ்ச்சியான மனநிறைவான சிற்றுண்டியோடு அன்றைய இரவு தூங்கச்சென்றோம்.
அனைவரும் செய்து சாப்பிடுவீர்கள் என நம்புகிறேன்.


              கொள்ளை சுண்டலாக எடுத்தால்கூட சிறிதளவுதான் எடுத்துக்கொள்ள இயலும்.  ஆனால் இவ்வாறு சாப்பிடும்போது இரண்டு அல்லது மூன்று தோசை பூண்டு சட்னியோடு சாப்பிட் சுவையாகவும் பயனுள்ளதாகவும்.  இருக்கும் உடல் பருமனைக்குறைக்க இது நல்ல ஒரு தீர்வாகும் ,


             வாரத்திற்கு இருமுறை கொள்ளு உண்டால் கொழுப்பை குறைத்து உடல் நலம் காக்கும்.
                இதுபோல் சிறுதானியங்களை உணவில் நாள்தோறும் சேர்த்து
கொள்வது பல நோய்களுக்கு அருமருந்தாகும்.

                 நாங்கள் ஏதாவது ஒன்றை நாள்தோறும் உணவில் சேர்த்துக
கொள்கிறோம்.  

புதன், 28 ஜனவரி, 2015

கொடுப்பதற்கு ஓர் மனம் வேண்டும்-2


          எங்கள் பள்ளி 4ம் வகுப்பு மாணவி இளஞ்சியம்  தாயைபற்றிய மனதை உருக்கும் பாடல்

தாய்மை எனும் தன்னிகரில்லா உறவைப்பற்றிய வலியைக்கொடுக்கும் பாடல்   இட்டுக்கட்டி பாடுவதில் இளஞ்சியம் கெட்டிக்காரி
மாணவியாக இருப்பதைவிட ஆசிரியராக இருக்க ஆசை அவளுக்கு அதிகம்
நான்கு மாணவர்களை மட்டுமே நிகழ்ச்சிக்கு தயார்செய்திருந்தோம்.  ஆனால் மதிய உணவு இடைவேளையில் நானும் ஒரு பாட்டுப்பாடுகிறேன் என்று என்னிடம் கேட்டாள்.  நான் எப்போதும போல் எங்கே பாடு என்றேன்.   பாடிக்கொண்டு இருக்கும்பொழுது இயக்கப்பொறுப்பாளர்கள் புதுக்கோட்டையில் ஈஸ்வரன் மாளிகை திறப்பு விழா அழைப்பிதழோடு  மூவர் வந்தனர்.  அவர்களும் அந்தப்பாடலை கேட்டுவிட்டு வட்டார செயலாளர் தமிழ்நாடுதொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணிதிரு .முருகேசன்  தன் சட்டைப்பையில் இருந்து ரூ. 100./ ஐ எடுத்து இளஞ்சியத்திடம் கொடுத்து வாழ்த்தினார்.  திரு.வீரசர்வேஸ்வரன் வட்டாரத்தலைவர்  தனது பையில் இருந்து சாக்லேட்டைஎடுத்துக்கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.  நானும் உதவி ஆசிரியரும் கண் கலங்க அமர்ந்திருந்தோம்.  ஐக்கிய நல கூட்டமைப்பின் சார்பில் பணமுடிப்பு வழங்கப்பட்டது.    அதில் வரும் வரிகளில் ஒருசில வற்றை நான் இங்கேகுறிப்பிடுகிறேன்.

 உன் உடலு சதையை பிச்சுக்கொடுத்தவளே,
 உலகத்திலே...........எனக்கு ஆறுதலா
உன்னைப்போல வேறயாருமில்ல
தன்னிலே சூரியன,,,நானும் பார்க்கிறேன்
தரையில் நடக்கும் தெய்வத்தோடநானும் வாழுறேன்
முக்குனியே மூச்சு முட்ட  கத்துனியே காதுகிலிய
பெத்தெடுத்த தாயே உன்னை எப்பிடித்தான் நா மறப்பேன்
கல்லுமண்ண தின்னுடுவேன்னு கவனமா பார்த்துக்கிட்ட
கஞ்சியதா நீ குடிச்சி  சோத்தையெல்லா எனக்குதந்த
கோழிகூட தங்குஞ்சிய வளர்ந்ததும் கொத்தி விரட்டும்.
தோளுக்கு மேல் வளந்தாலும் தாய்ப்பாட்டு தாலாட்டும்‘
 அம்மா........................என்ன நீ மடியில சுமந்தவ
உன்ன நா மனசில் சுமப்பவ .

வாழ்த்துரை வழங்குதல் 
                                            

நினைவுப்பரிசு வழங்குதல் 


ஆடைகள் வழங்குதல் 

                      வாழ்த்துரை வழங்கி நன்றி கூருதல் தங்களின் பொன்னான நேரத்தை எம்பள்ளிக்காக தந்து நல்ல பல பயனுள்ள கருத்துக்களைத் தந்து எம்மாணவர்களுக்கு  வாழத்துக்களை வழங்கிய
அத்துனை நல்லஉள்ளங்களையும்  வணங்கி மகிழ்கிறோம்
 நன்றி.......நன்றி.....நன்றி.


நினைவுப்பரிசு கொடுக்கும் பொழுது நுரிலின் உள்ளே நன்றியோடு
 எழுதிய வரிகள்

சகோதரர் திருஇக்பால் அவர்களுக்காக 

தேனியின் மறு உருவே 
தேர்ந்தெடுத்த நன்முத்தே
ஈகை குணமே
இறைவனின் வரமே
கோடையில் வீசிய 
குளிர்ந்த காற்றே
வறண்ட நிலங்களின்
வற்றாத நதியே
பிஞ்சு உள்ளங்களை 
பிடித்த கரமே‘
கொடைஉள்ளமே
நின் தலைமுறைகள் 
தலைக்கட்டும்  தடையின்றி
நிறைவேறட்டும் தங்களின்
 குறிக்கோள் குறையின்றி
பல்லாண்டு பல்லாண்டு
பல கோடி நுறாண்டு
நோயின்றி நீர் வாழ
வாழ்த்துகின்றோம்
 நாங்களெல்லாம்

நான் மேலே குறிக்கோள்என்று கூறியதற்கு காரணம்  நான் சகோதரர் திரு.இக்பால் அவர்களிடம் பேசும்போது, இதுபோன்று மாணவர்களுக்கும் ஈகை குணம்வளரவேண்டும் என்பதுதான் அவரது குறிக்கோள் என்பதை நான் அறிந்துகொண்டேன்.

சென்ற தீப ஒளி திருநாளுக்கு  ஆடைகள் வழங்கியதற்காக நான் எழுதிய வாழ்த்து மடல்

கோடிகள் உள்ளவர்கள்
கோடான கோடி உண்டு.
கொடையுள்ளம் கொண்டவர்கள் 
குறிப்பிடும் ஒரு சிலரே
மாணவச்செல்வங்களோ
மகிழ்ச்சியோடு காத்திருக்க‘
மனசார ஒருவர் வந்து
மகிழ்விக்க உடை கொடுத்தார்
வண்ண வண்ண உடைகள்
அல்ல அல்ல வகை வகையாய்
ஆடைகளை கண்டு, கண்டு 
வாய்மூட மறந்துநின்ற 
என் மாணவச் செல்வங்களை
காணவோ கண் கோடி வேண்டும்
ஏழையின் சிரிப்பிலே தான்‘
இறைவனைக்காண வேண்டும்‘
என்பது நாம்அறிந்த ஒன்றே
உண்மையில் அதை நாங்கள் கண்டோம்
உவகையால் அகம் மகிழ்ந்தோம்.
வம்சம் தலைத்தோங்க மனதார
நன்றி கூறி வாழ்த்துகின்றோம்.

                                     நன்றி வணக்கம்.

கொடுப்பதற்கு ஒர் மனம் வேண்டும்.

"ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு '"

என்பதற்கேற்ப கொடையுள்ளம் கொண்ட ஆயத்த ஆடையகம்
நிறுவனத்தின் உரிமையாளர் திரு முகமது இக்பால் அவர்கள்
எங்கள்பள்ளிமாணவர்களுக்கு  இரண்டாவதுமுறையாக
(1தீபாவளி ,2பொங்கல் )என்மாணவர்களை மகிழ்சிக்கடலில்
மூழ்கவைத்தார்கள்.
     இந்த நிகழ்வு ஏற்படக்காரணமாக இருந்த அன்புச்சகோதரர்

1.எஸ் .டி .பசீர் அவர்களும்வலதுபுறம் முதலாவதாக ,
(யு,என்,டிபுள்யூ)


2.எங்கள் பள்ளியின் பசுமைக்கரங்கள் அன்புஅண்ணன் (புரவலர் ,கிராமக்கல்விக்குழு தொண்டுநிறுவன உறுப்பினர்)

3,பள்ளிப்புரவலர் ஓய்வுபெற்ற வட்டாட்சியர் எல்லா நிகழ்சிகளுக்கும்
முன்னதாகவே வந்து என்மாண வர்களோடு கலந்துரையாடுபவர்.

4ஹாஜியார் திருக்குறளை நேசிப்பவர் மனிதநேய பண்பாளர்  சாந்தசொரூபி

5.திரு.எம்.ராஜாதாஜ்முகமது, செயலளர், பெரியபள்ளிவாசல்
மாணவர்களிடம் கேள்விகள் தொடுப்பவர்.

6,திரு கே.எஸ்.முகமது இக்பால், தாரகை ஆயத்த ஆடையகம், உரிமையாளர்
கொடைவள்ளல்  பணவுள்ளம் கொண்ட பண்பாளர்

7.திரு.இராம, செல்வராஜ், பள்ளி கல்விக்குழுத்தலைவர்,  நகர்மன்ற உறுப்பினர்
பொதுப்பணிகளில் ஆர்வமுள்ளவர், தலைசிறந்த பேச்சாளர்

8,  திரு.பழனிவேலு , பள்ளிக்கல்விக்குழு துணைத்தலைவர்,
எங்கள் பள்ளியின் அனைத்து முன்னேற்றத்திற்கும் உறுதுணைபுரிபவர்


நான்காம் வகுப்பு மாணவன்     ஹரிகரன் குடிநீரின் தேவை பற்றி
பேசியது .


இதுஒரு வாலு மு.சந்தோஸ்குமார் இரண்டாம் வகுப்பு  100லிருந்து 1வரை
 தலை கீழாக சொல்லுதல்.

நான்காம் வகுப்பு மாணவி   தேவப்பிரியா 65திருக்குறளும் ஒப்புவித்தல்

இதன் தொடர்ச்சி அடுத்தபதிவுபோல் தொடர்கிறது.  அதை இணைப்பதற்கான தொழில்நுட்பம் தெரியாததால் தலைப்பில்லாமல் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டுள்ளது.  தயவுகூர்ந்து அதையும் பார்த்து கருத்துக்கள் இடவும்.

                                                  நன்றி...........