புதன், 9 ஏப்ரல், 2014

பசுமைமழை காலங்களில் நாம் பயணம் செய்யும் பொழுது பேருந்தில் அந்த சாளரத்தின் ஓரம் அமர்ந்து சில் என்ற காற்று முகத்தில் மோத மனதெலாம் குளிர்ந்து போகும் வெளியில் வேடிக்கை பார்த்தால் மரத்தில் ஒரு பசுமை
அதன் மேல் படர்ந்திருக்கும் கொடி ஒரு பசுமை என மாறி மாறி காட்சி தரும்,
இந்த மலரில் தோன்றிய..........
               
                        வாசம்

 
         மாரி வந்த மகிழ்ச்சியிலே 
             மறுநாளே உன் அழகு!
       
 மகத்தான வெளிப்பாடு-என்
             மனதில் ஒரே கூப்பாடு,
                                                                                                                                                      அழகுக்கு அழகு செய்ய 
              அணிகலன்கள் வேண்டுமென்பர்!
          அசைந்தாடும் பேரழகு
                அதுவே உனக்கு மிக அழகு!

        கழனியெல்லாம் வெளிர் பச்சை-அதன்   
                 இடையிடையே வெண்மையாக
         நிறைவான நிறப்பொருத்தம்!
                வியந்தே நான் பார்த்திருந்தேன்,

         அருகே நான் சென்றவுடன்-அவை
                 அத்தனையும் பறந்து செல்ல!
          அப்பொழுதுதான் தெரிந்துகொண்டேன்
                 அவையெல்லாமே பறவையென்று.
                                    

15 கருத்துகள்:

 1. வயல் வெளியில் நடந்தது வந்த சுகம்!!
  அருமை டீச்சர்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாப்பா பேருந்தில்செல்லும் பொழுது வேடிக்கைபார்ப்பதே தனிசுகம்தான் நன்றிடீச்சர்

   நீக்கு
 2. ரசனையை மிகவும் ரசித்தேன்... தொடர வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பள்ளியில் பிள்ளைகளுக்கு ஒருகைதட்டல் கொடுத்தால்
   ரெம்ப உற்சாகமாக இருப்பார்கள் அது போல இருக்கிறது
   எனக்கு.

   நீக்கு
 3. வணக்கம் தோழி !
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .இன்று தான் தங்களின் தளத்தினை அறிந்துகொண்டேன் மிக்க மகிழ்ச்சி .சிறப்பான பகிர்வுகள் மென்மேலும் சிறந்து விளங்கிடவும் என் இனிய வாழ்த்துக்கள் .என் தளத்தில் எப்போதும் கவிதைப் பூக்கள் பூத்திருக்கும் முடிந்தால் வந்து இணைந்து கொள்ளுங்கள் என்றும் தமிழ் பேசி மகிழ்ந்திருப்போம் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றிகலந்த வணக்கம் தோழி,
   இனியபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தங்களின்கருத்து,வாழ்த்துக்கள், மேலும் தங்களின் தளம்
   காண அழைத்ததற்கும் மகிழ்ச்சி கலந்த நன்றி தங்களின்தளம்சென்று ரசித்து கருத்திட்ட பிறகு தான் பதிலளிக்கிறேன் மீண்டும் பேசுவோம்தோழி.

   நீக்கு
 4. கவிதை ஓசை கிட்டத்தட்ட நச்நச்சுன்னு வருது... இன்னும் கொஞ்சம் எதுகை மோனைக்காக யோசிக்கக் கூடாதா டீச்சர்? ஓவியர், சிற்பி, கைவினைஞர்களைப் பார்த்திருக்கிறீர்களா? முடிக்கும்வரை சற்றே எட்ட வைத்துப் பார்த்துப்பார்த்து செதுக்குவார்கள்... கவிஞர்கள் மட்டும் எழுதிய மை காய்வதற்குள்... (சரிசரி என்எச்ரைட்டர் ஐகான் தங்கம் வெள்ளியாவதற்குள்) ஏற்றிவிடும் அவசரம் ஏன்? முயலுங்கள் உங்களுக்குக் கவிதை சிறப்பாக வருகிறது... (ஆணோ, பெண்ணோ அழகாவே இருந்தாலும் கொஞ்சமா முகப்பூச்சு போடுறதிலல?அதுமாதிரிநினைச்சுக்கங்களேன்..?)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயா வணக்கம்,
   இந்த அவசரபுத்தியை முதலில் தூக்கிப்போடுகிறேன்
   பசுமை எனும்தலைப்பில் உள்ளவரிகள் போறபோக்கில்
   ஏதோநாமஒருகம்பள்(கம்பன்)ங்கற நெனப்புல எழுதுறதுஏற்க்கனவே ஒருகுட்டு வந்கினதுக்கப்புரம்தான் எழுதியதைதிரும்ப ஒருதரம்
   பார்த்துதிருத்தங்கள் செய்ய வேண்டும் என்று இந்த பசுமை தலைப்பில்தான் ஆரம்பித்துள்ளேன்
   இப்படிகொட்டுவச்சாதான் கொஞ்சமாவது மாற்றம்வரும் எப்பவுமே வரிகள் தோன்றும் பொழுதே எழுதி விடுவேன் அதைமறுபடி எந்த மாற்றமும் செய்வதில்லை இதைமாற்றிக்கொள்ள வேண்டும்மிக்கநன்றி ஐயா.

   நீக்கு
  2. “ற்க்கனவே ஒருகுட்டு வந்கினதுக்கப்புரம்தான் எழுதியதைதிரும்ப ஒருதரம் பார்த்து திருத்தங்கள் செய்ய வேண்டும்“ - நன்றி சகோதரி. இப்படிச் சொல்ல ஒரு பெருந்தன்மை வேண்டும். இந்தப் பெருந்தன்மை உங்களை நிறையக் கற்க வைக்கும். அந்தக் கல்வி உங்களை வளர்க்கும். அதற்காகத்தான் எழுதினேன் . தொடரும் முயற்சியில் படரும் கவிதைக் கொடிகளில் நல்லபழம் பழுக்கட்டும்... வாழ்த்துகள்.

   நீக்கு
 5. ஐயாவணக்கம் தங்களின் வாழ்த்துக்கள்கிடைத்ததில் எனக்கு மிக்கமகிழ்ச்சி இனிய சித்திரை வாழ்த்துக்கள் தங்களின் வருகைக்குநன்றி, சகோ சீராளன் தளத்தில் தங்களின் கருத்துக்களே கவிதையாக இருந்ததுஎன் தளம் வந்து வாழ்த்தியமைக்கு மிக்கநன்றி ஐயா.

  பதிலளிநீக்கு

 6. வணக்கம்!

  பசுமை வயல்குறித்துப் பாடிய பாட்டில்
  பசும்நெய் மணக்குதே பாா்!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  பதிலளிநீக்கு
 7. ஐயாவணக்கம்!
  மிக்கநன்றி,தங்கள்தளம் வந்து,பதிவுகள் அனைத்தும் படிக்க
  வேண்டும்.

  பதிலளிநீக்கு
 8. வணக்கம்சகோ!
  தங்கள் வருகைக்கும் கருத்திட்டமைக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு