வியாழன், 17 ஏப்ரல், 2014

கைபேசி

சிலர்கைபேசியில்பேசும்பொழுதுசிலர்வேடிக்கையாககூறுவார்,போன,வச்சுட்டுப்பேசு   அதுவே நல்லா அங்க வரைக்கும் கேட்க்கும் என்று   ஆனால்சிலர்  கைபேசியை காதில்ஒட்டிவிடுகின்றனர்,    பேசுறாங்களா? பேசலையா?                 ஒன்னும் புரியல அது போல குறுஞ்செய்தி அனுப்பும்போதுபாத்தீங்கன்னா கிடுகிடுன்னுஅந்தவிரல்கள் படும் பாடுஇந்தகாட்சியெல்லாம்பேருந்து நிலையத்திலும்பேருந்தில் பயணம் செய்யும் பொழுதும்பார்க்கமுடிகிறது.
 ,ஒரு நாள் எங்கள் பள்ளிக்கு வந்த brtபுதுகை பிளாக்கில் உள்ள குரு வளமையத்தில் வகுப்பு எடுக்கவேண்டும் செல்லிடப்பேசி, இணையதளம் இவைபற்றி (நன்மை,தீமை)எனக்கு கவிதைஎழுதிக்கொடுங்கள் (என்நண்பர்) என்னிடம் கேட்டார்(முதல்நாள்மாலை)இந்த மலரில் தோன்றிய.........

              வாசம் 1

    காதலர்கள்
காதோடு ஒட்டியகைபேசி!
இதழ்கள் அசையாமல்!
 எப்பொழுதும் பேச்சு!


         வாசம்2

     குறுஞ்செய்தி


விரல்களின் நடனம்!
வினாடிக்கு நூறுதரம்!

கை பேசி வருவதற்கு முன்பெல்லாம் தந்தி மூலமாகத்தான் நமக்கு செய்தி வரும் அதுவும் சுருக்கமாக இன்று நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு
தகவல் தொடர்பு சாதனங்களின் அதீத வளர்ச்சி இந்த விஷயத்தை முன்பே
ஒருவர் கூறியுள்ளார் எப்படித்தெரியுமா!இனிவரும் காலங்களில் ஒவ்வொருவர் சட்டைப்பையிலும் ஒரு தந்திக்கருவி இருக்கும்என்று
கூறியவர் யார் தெரியுமா.. ...........? வெளிநாட்டுக்காரங்களாஇருக்குமோன்னு
தப்புக்கணக்கு போட்டுடாதீங்க நம்ம, தந்தை பெரியார்தான்!
                       
                              வாசம்3
                          நன்மைகள்   

நினைத்ததையும் நடந்ததையும்
நிமிடத்தில் சொல்லிடலாம்
கச்சிதமாய் கையேடு -ஒரு
கையடக்கக் குறிப்பேடு

காலத்தைக் கண்டிலாம்
காரியங்கள் பேசிடலாம்
கண்ணிமைக்கும் நிமிடத்தில்
கணக்குகளும் செய்திடலாம்

நிகழ்ச்சிகளை நினைவூட்ட
நிச்சலும் நம் உடனிருக்கும்
நித்திரையில் நாம்ஆழ்ந்துவிட்டால்
நேரத்திற்கு துயிலெழுப்பும்

பிடித்ததை படம் பிடித்து
பிடித்தவர்க்கு அனுப்பிடலாம்
பின் சேகரித்து வைத்திடலாம்
உன் பிரியங்கள்  அறிந்திடலாம்

பாடல்கள் கேட்டிடலாம்
படங்களும் பார்த்திடலாம்
தபால்காரர் இல்லாமலே
தகவலதை அனுப்பிடலாம்

விளையாட ஒருபகுதி
விடமம் செய்ய ஒருபகுதி
வீட்டிற்குள்ளே பொழுது போக்க
விநோதமான ஒரு கருவி!


கைபேசியின்தீமைகள் நாளைக்கு பார்ப்போமா....?

8 கருத்துகள்:

  1. நல்ல சிந்தனைதான்.
    இங்கிலாந்து கூட இப்ப
    .......... எளிதாகத் தொடலாச்சு!
    இங்கிருக்கும் அடுத்த வீடு
    ...........எவருக்கும் தூரமாச்சு!
    மனிதர்கள் தன்னைத்தானே ஒரு சிறைக்குள் அடைக்கும் வித்தையை இந்தக் கருவி கொண்டுவந்துவிட்டது. நான் இதற்கு எதிரியல்ல,பயன்படுத்தும் விதத்தில்! பதிவு நன்று

    பதிலளிநீக்கு
  2. ஐயா வணக்கம்,
    கண்டிப்பாக அடுத்தவீட்டுக் காரங்களோட பெயர்கூடத்தெரியாமல் போய்விட்டது வாசலில்
    உட்கார்ந்து பேசியகாலம் மாறி ஹாய்........... என்கிற காலமாகிவிட்டது.

    பதிலளிநீக்கு
  3. வித்தியாசமான சிந்தனை..

    கைபேசி நன்மையா...? தீமையா...? ஒரு பட்டிமன்றம் வைத்து விடுவோமா...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ!
      ஹ...ஹா...அட!இது நல்லாருக்கே ஆமாம் ,(sign out)கதவ மூடினாலும் காட்சி தரும் சூட்சி எப்படி? \\விடா முயற்சியே
      வீரனுக்கு அழகு// என்று கூறுவார்கள் நல்லமுயற்சி நண்பா............!!!!!!வாழ்க வளமுடன்.நன்றி

      நீக்கு
  4. டீச்சர் கவிதைக்கு இணையாய் போட்டிபோடுகிறது
    கவிதைக்கு இடையே கொடுத்திருக்கும் விளக்கம்
    அருமை! அருமை!!

    பதிலளிநீக்கு
  5. உங்கள்கருத்து எப்பவுமே சூப்பர்தான். நன்றி டீச்சர்.

    பதிலளிநீக்கு
  6. சொல்லில் சிதறும் செய்திகளை
    மெல்லச் சேர்க்கும் மென்பொருளில்
    செல்லச் சண்டை போடுகின்ற
    செல்லாக் காதல் கொண்டோரே
    அல்லும் பகலும் அம்மாக்கள்
    அவதி படுதல் உமக்கன்றோ
    நல்லோர் உங்களை மதித்திடவே
    நன்றே வாழ்ந்து காட்டுவீரே !


    அழகோ அழகு அத்தனையும் அருமை
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

  7. வணக்கம்!

    பேசும் கவிதை பெருகும் இனிமையுடன்
    வீசும் மணத்தை விரித்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு