குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
என்பது எவ்வளவு உண்மை, இக்கால சந்ததியினர்‘
பெருமபாலும் தாத்தா,பாட்டி, சித்தப்பா அத்தை
போன்ற உறவுகளை மறந்து கொண்டிருக்கின்றனர்.‘
இன்னும் சில காலங்களில் ஏதோ ஓர் இடத்தில்
பார்க்க நேரிடும்போது இவர்தான் உன் சித்தப்பா
அல்லது அவர்தான் உன் சித்தப்பா என்று
கூறும் நிலை தொலைவில் இல்லை.
உறவுகளோடு வளரும் குழந்தையின் மனநலம்
மற்றும் உடல்நலத்தின் பலம் நமக்கு தெரிந்ததுதான்
இவற்றை மேம்படுத்த நாம் செய்யவேண்டியது
ஒருசில காரணங்களே உறவுகளை சொல்லிவளர்ப்பது
மேலும் முக்கியமான நாட்களில் அவர்களிடம்
ஆசி பெறச் செய்வது விழா நாட்களில் அன்பினை
பரிமாரிக்கொள்வது போன்ற செயல்களோடு விரிசல்கள்
இல்லாமல் பார்த்துக்கொள்வது (இது சாதாரணமல்ல )
விரிசல்கள் விரிவடையாமல் இருக்கவும் முதலில்
பெண்கள் நினைக்கவேண்டும்.
எல்லாவற்றிற்கும் பெரியவன் இறைவன்
பணிவு உயர்வுக்கு வழி என்கிறது வேதங்கள்
தொலைக்காட்சி முன் அமர்ந்து தேவையற்ற தொடர்களை
பார்ப்பது அர்த்தமில்லாமல் பேசிக்கொண்டிருப்பது இவற்றை நாம்
தவிர்த்து நல்ல நல்ல செய்திகளை சொல்வதற்கும்,
உறவுகளை நேசிப்பதற்கும் கூட தொடர்கள் நம் தொலைக்காட்சியில்
ஒளிபரப்பப்படுகிறது. ( உறவுகள் தொடர்கதை, என் கணவன்
என் தோழன் )
விட்டுக்கொடுப்பது எல்லா நேரங்களிலும் நமக்கு
வருவதில்லை, ஆனாலும் சில காரணங்களுக்காகவாவது
நாம் விட்டுக்கொடுத்து செல்லத்தான்வேண்டியுள்ளது.
இது மகத்தான விளைவுகளை நமக்கு தர மறப்பதில்லை.
நம் உறவுகளை நேசிப்பதை விட்டுவிட்டு, எங்கேயோ
யாருக்கோ நாம் செய்யும் உதவி பெயருக்காகவும், ‘
புகழுக்காகவும் இல்லாமல் நம் உறவுக்காக இருப்பது
மட்டுமின்றி நம் உறவுகளையும் பலப்படுத்தும்.
உறவுகள் நமக்கு என்ன செய்தது என்ற கேள்வியே நமக்குள்
வழக்கமாகி வருகிறது. உறவுகளுக்காக நாம் என்ன
செய்தோம். என்பதுதான் மேல், என்பது எனது கண்ணோட்டம்.
என்பதை பகிர்ந்துகொள்வதோடு
நடந்த நல்லவற்றை கூட்டிக்கொண்டு
கசப்பான அனுபவங்களை கழித்துகொண்டு
எதிர்காலத்தினை வகுத்துக்கொண்டு
2015ல் நமது சாதனைகளை பெருக்கிகொண்டு
அனைவருக்கும்இனிய புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்