புதன், 19 ஆகஸ்ட், 2015

தவறேதும் செய்தாளா??????????????

எங்கோஒருஇடத்தில்நடக்கும்விடயத்திற்காகஅல்லதுசெய்தித்தாள்களில் நாம் காணும் செய்தி, நமக்கு வலியை ஏற்படுத்தியது உண்டு நமக்குத்தெரிந்த 
ஒரு பத்துவயது சிறுமி (ஒரு நாயால் )பாழ்படுத்தப்பட்டசெய்திகேட்டுதுடித்துப் போனேன் நான்வலைப்பக்கம் வராததற்கு இதுவும்ஒருகாரணம் 
 எதுவுமே பிடிக்கவில்லைபெற்றோர் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் மிகச்சரியாக நடந்துகொள்ள வேண்டும் அந்தக்குழந்தை         செய்தபாவம்தான் என்ன ????????????????????????????????????????????அத்துனைகேள்விகள் எனக்குள். 
மனதுமிக ,மிக. வலிக்கிறது எந்தக்குழந்தைக்கும் உத்திரவாதம் இல்லை நான் பணியில் சேர்ந்து இருபது வருடங்களும் ,தலைமை ஆசிரியராகி பத்துவருடங்களும் முடிந்துவிட்டது எவ்ளவோவிடய ங்களைசந்தித்ததுண்டு  
ஆனால் இதுமிகுந்த வலியைத்தந்தது .


                           பச் கைக்கொடியது       படர இருந்தது 
                           பா ழ்படுத்திவிட்டாயே -அது 
                            படரவும் இல்லை 
                            பக்குவப்படவும் இல்லை 
                            பறித்துப் புதைத்தாயே -படுபாவி 
                            ஊட்டப்பட்டது உணவோ 
                            என நினைத்து 
                            விபரீதம் தேடி அலைகிறதே 
                            அந்த விட்டில்ப்பூச்சி 
                            நஞ்சை ஊட்டி 
                            நாசம் செய்தவனே  
                            வய்ப்புக்கிடைத்ததால் 
                            தீர்த்தாய் உன்பசி 
                            வயத்துக்குமீறிய பசியால் 
                            வட்டமிடுகிறதே அந்த 
                            பருவமடையாத 
                            பசும்பேதை 
                            ம்கூம் ,உன்நிழலில் 
                           பல உயிர்கள் 
                            இல்லையேல் நசுக்கியே 
                            கொன்றி ருப்பேன் 
                             உனை நான்.               

7 கருத்துகள்:

  1. ஹ்ம்ம்ம் இதற்கு ஒரு முடிவு எப்போ வருமோ?நமக்கு மனவலி தான்மா, நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் மனதைப் புதைத்து வைத்திருக்கிறார்களே.. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதைசரிசெய்யும்பொறுப்புஒவ்வொருவருக்கும்
      உண்டுய்யா ,இவள் இந்நிலைஅடையக் காரணம்
      இவள்பெற்றோரே.

      நீக்கு
  2. ஐயோ!... நெஞ்சு பொறுக்குதில்லையே!..

    எழுதிடவும் முடியுதில்லை சகோதரி!
    கொடூரம்!..:(

    பதிலளிநீக்கு