ஞாயிறு, 9 மார்ச், 2014

ஓயவில்லை.....!

  பெண்அடிமைஓய்ந்ததென்று,   நாம்மேடையில்மட்டும் பேசிக்கொண்டு இருக்கிறோம், ஆனால் பெண்ணிற்கு நடக்கும் அநியாயங்களை ஆங்காங்கே பகிரங்கமாகநடதிக்கொண்டுதானே இருக்கின்றனர்.பயணத்தின்போது நடந்த   நிகழ்வு,

மூன்றுபேர் இருக்கை  அதில் என்னோடு இன்னும் இரண்டு பெண்கள்    விளையாட்டாய் பேசிக்கொண்டு வந்தனர்  பின்இருக்கையில் இருந்த இருவர் அந்தப்பிள்ளைகள் பேசிய வார்த்தைகளை இரட்டை அர்த்தம் வைத்து பேசிக்கொண்டு இருந்தனர் பொறுக்கமுடியல  என்னால,  எழுந்துநின்று               திரும்பிப்பார்த்து  என்னையா ....? என்னவேணும்....? என்றேன், ஒன்றும் வேண்டாம் என்பதுபோல்தலை அசைத்தனர். அதன் பிறகு இறங்கும்வரை         அமைதியாகஇருந்தனர்.  இந்தமலரில்வீசிய வாசம் ,  

                                                                                                                                                                                             
                                                                                                                                                                    இதோ............                                                                                                                                                
பினம்தின்னிக்    கழுகாய்

பிதற்றித்திரியும் பிசாசுக்கூட்டம்

தன்னையறியாத தரிசுப்பொட்டல்

தாய்மை பொருந்திய
 
தன்னிகரில்லா  பெண்மையைக்கூட

தரிகெட்டதனமாய்

தண்டோராப் போடும்

தசையோடு இருக்கும் தரித்திர ஆவிகள்!

விதைத்த விஷம் வீரியமிக்க

விளைச்சலைத் தரும், என்பது

தற்குறிகள் அறியாததுதானே !







                                                                                                           
                      

8 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரி. தங்களின் தைரியத்திற்கு முதலில் பாராட்டுகள். இன்று இளம்பெண்கள் அத்துமீறும் பாலியல் வன்முறையை வெளியில் சொல்லவே தயங்குவதினால் சபல புத்தி உள்ளவர்கள் தைரியமாக நடமாடுகிறார்கள். அவ்வப்போது பதிலடி தந்தால் இது போன்ற சம்பவங்கள் வெகுவாக குறையும் என்று கருதுகிறேன். கொடுமை கண்டு கொதித்து வந்த கவிதை அருமை சகோதரி.
    -------------
    பதிவு எழுதும் போது தலைப்பை post title எனும் கட்டத்தில் இடுங்கள். தங்கள் பதிவு மற்றவர்களுக்கு செல்லும் போது தலைப்பு காண்பிக்கும். இந்த பதிவு untitled என்று தான் வந்தது. ஒரு செய்தியைத் தங்களோடு பகிர்ந்தேன். அவ்வளவே. தவறாக எண்ண வேண்டாம். நன்றி சகோதரி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோ தவறொன்றும்இல்லை இப்போசரியா?(blog)பாதையே தெரியாதஊர் என்பதால்கொஞ்சம் தடுமாற்றம்.

      நீக்கு
  2. அக்கினி சாரலாய் ஒரு கவிதை !
    அருமை டீச்சர்! பாருங்க நான் என்னனவோ சொல்லி உங்களை குழப்பினேன். பாண்டியன் சகோ நச்சுன்னு புரிய வச்சுட்டார்!

    பதிலளிநீக்கு
  3. நீங்க இதைஇப்படிச்செய்யனுன்னு சொல்ல தயக்கம்....தம்பி(சொல்லலாமா...?)சொல்லிவிட்டார் அவ்வளவுதான், நன்றி டீச்சர்.

    பதிலளிநீக்கு
  4. இப்படி பெண்கள் கேட்க ஆரம்பித்தால்.....தான் இழிவாய் பேசுபவருக்கு அச்சம் வரும் .வாழ்த்துக்கள் தோழி

    பதிலளிநீக்கு
  5. உங்கள் வலைப்பக்கம் நல்லா இருக்கு. இன்னும் நிறைய நிறைய நீங்கள் எழுதலாம். எழுத வேண்டுகிறேன். உங்கள் வலைப்பக்க பின்பற்றாளராகச் சேரப் பலமுறை முயன்றும் “வருந்துகிறோம் பின்னர் முயற்சி செய்யவும்“ என்றே வருகிறதே? என்பக்கம் தவறா? புரியவில்லையே?

    பதிலளிநீக்கு
  6. ஐயா, மன்னிக்கணும், தாங்கள் பின்பற்றாளராகச் சேர்வது எனதுபாக்யம் ஆனால்ஒரு விஷயம் ,நான்இப்பதான் கிணற்றில் குதித்துள்ளேன் கொஞ்சமாவது நான் தெரிந்து கொள்ள சில நாட்கள் வேண்டும்.....தங்களைப்போன்றோரின் ஊக்குவிப்புதான்எனைப் போன்றோருக்கு தூண்டுதல்நன்றி.

    பதிலளிநீக்கு
  7. வ்ணக்கம் சகோதரி. இன்று தான் தங்களைத் தொடந்துள்ளேன். இனி தொடர்வேன்...என் பிளாக்கும் பாருங்க. என்றும் உங்கள் அன்பில் சுவாதிhttp://swthiumkavithaium.blogspot.com/

    பதிலளிநீக்கு