மலர்
என் மகள் இருசக்கர வாகனத்தை இயக்க நான் பின்னால் அமர்திருந்தேன். நான் வாயை வச்சுக்கிட்டு சும்மா இல்லாமல் அவளுக்கு வேடிக்கை காட்ட, வண்டி விளக்குக்கம்பத்தில் மோத, நான் விழப்போறேங்கறது உறுதியான பின் ஐயோ விழுந்தால் முகம் அடிபட்டுவிடுமே என்றுகாலைஊன்ற காலில் நல்ல அடி. பிச்சிக்கிட்டு போயிருச்சு. 25தையல். வீட்டிற்க்கு வர ஒரு வாரம் ஆனது. என்அம்மாஎன்னைப் பார்த்துக்கொண்டார்...,. விழி மறைக்கிறது எழுத முடியவில்லை, என் அம்மா என்னைப் பார்த்துக்கொண்டதை(மலர்) நான் பார்த்ததுஇப்படித்தான் (வசம்,என்வயது45.)
வாசம்
ஐயிரண்டு திங்கள் உனை -நான்
ஆட்டிவைத்தது போதாதா?நான் பாடாய் படுத்தினாலும்
பாசத்தோடு அதை மறந்து
என்காலில் அடிபட்டு
ரத்தம் போனது நினைத்து-நீ
சுத்தமாய் தூங்கவில்லை
நானிழந்த ரத்தம்
ஈடேற நீஇமைப்பொழுதும்
மறக்கவில்லை
தாயே நானுனக்கு தவழும்
பிள்ளையா........?
தயங்காமல் பணிசெய்ய
தளர்ந்து விட்டாயே........
உன் ஆசையும் ஆர்வமும்
பணிவிடையும் நடக்கும்
தெய்வத்தை -நான்
பார்க்கச்செய்தது.
( இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்வு மார்ச் 2012)
அம்மாவிற்கு இணை யாரும் இல்லை தோழி.
பதிலளிநீக்குநன்றி. அந்த இடத்தைவேறு யாரும் பூர்த்தி செய்ய இயலாதுதோழி.
பதிலளிநீக்குசகோதரிக்கு வணக்கம்
பதிலளிநீக்குதாய் பாசத்திற்கு மற்றொரு மைல்கல் உங்கள் பதிவு. தொடருங்கள் சகோதரி..
நன்றி, பிரமிக்கவைக்கும் ஓர்உறவல்லவா? சகோ.
நீக்கு