புதன், 4 பிப்ரவரி, 2015

வரப்பிரசாதம்


ஏழைகளின் உணவாக  இருந்த சிறுதானியங்கள் இன்று
வசதியானவர்களின் உணவாக மாறிவிட்டது.  வறட்சியை
தாங்கி வளமாக வளரக்கூடிய மழைவாழ் மற்றும் கிராம 
மக்களின் வளமான வாழ்வாதாரமாக விளங்கிகொண்டிருந்த
வரப்பிரசாதம் இன்று அயல்நாடுகளுக்கு டன் டன்னாக ஏற்றுமதியாகி
அரிசியைவிட விலையேற்றம் அடைந்துள்ள சிறுதானியங்கள்
மற்றும் கொள்ளு போன்றவை நம்கையில் இருக்கும் அருமருந்துகள்
ஆனால் கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நாம் நெய்யை
தேடுகிறோம்.  உடல்பருமனை குறைப்பதற்கு பலரும் பலமுயற்சிகள் 
பல லட்சங்கள் செலவு செய்வதை நாம் பார்த்துக்கொண்டுதான் 
இருக்கிறோம்.  ஆனால் நம் முன்னோர்கள் நமக்கு பல விடயங்களை
நமக்கு சொல்லிச்சென்று இருக்கின்றனர்.  

               ” இளைத்தவனுக்கு எள்ளு 
                  கொழுத்தவனுக்கு கொள்ளு”
                
என்று பழமொழிக்கேற்ப நாமும் நடந்துகொள்ளவேண்டும் என்றால்
எப்படி சாப்பிடுவது? எள்ளை அதிகமாக நாம் சுவையோடு
 எடுத்துக்கொள்ள பலவழிகள் உண்டு.   ஆனால் கொள்ளு. இதை
அதிகமாக எவ்வாறு எடுத்துக்கொள்வது?   என்பதுதானே உங்கள்
கேள்வி  என் சகோதர சகோதரிகளின் நலன் கருதி இப்பொழுது 
நாம் கொள்ளு தோசை எப்படிச்செய்வது என்பதை பார்ப்போம்


கொள்ளு தோசை










                தேவையான பொருட்கள்

  சிவப்பு நிறக்கொள்ளு            3    கப்
  பச்சரி                                            1    கப்
  தனியா                                         1     டீஸ்பூன்
  பச்சை மிளகாய்                       2    அல்லது   3
  உப்பு                                             தேவையான அளவு
  எண்ணெய்                                சுடுவதற்கு

செய்முறை 
              கொள்ளை    முதல் நாள் இரவே கழுவி ஊறவைக்கவும், பச்சரியை
அரைப்பதற்கு 2 மணி நேரம் முன்பாக ஊறவைக்கவும் கொள்ளு, பச்சரியுடன், தனியா,  பச்சைமிளகாய் சேர்த்து அரைத்து உப்பு போட்டு கரைத்து வைக்கவும்,  பின் 15 முதல்20 நிமிடம் கழித்து தோசை செய்யவும்.

               பூண்டு  வாடை  பிடித்தவர்கள் பூண்டையும் இதனுடன் சேர்த்துக்கொள்ளவும். (சேர்த்தால்தான் சுவையாக இருக்கிறது)
               
               இதுபோன்ற உணவெல்லாம் நானும்என் மகனும் விரும்பி சாப்பிடுவோம்.  ஆனால் அப்பாவுக்கும் மகளுக்கும் கொஞ்சம் கஷ்டம்தான்
ஆனால்   இன்று எனது மகள்  மிகவும் விரும்பி சாப்பிட்டுக்கொண்டே அம்மா நல்லா இருக்குள்ள என்றாள்.   ஆமாம் சினேகா இது குதிரைக்கு மிகவும் பிடிக்கும் என்றேன். அடிப்பதற்காக துரத்திக்கொண்டே உனக்கு ரொம்பதாம்மா கொழுப்பு என்றாள்.  அதனால் தாம்மா இந்த தோசை மிகவும்  உனக்கு பிடித்திருக்கின்றது என்று சொல்லிக்கொண்டே ஒரு மகிழ்ச்சியான மனநிறைவான சிற்றுண்டியோடு அன்றைய இரவு தூங்கச்சென்றோம்.
அனைவரும் செய்து சாப்பிடுவீர்கள் என நம்புகிறேன்.


              கொள்ளை சுண்டலாக எடுத்தால்கூட சிறிதளவுதான் எடுத்துக்கொள்ள இயலும்.  ஆனால் இவ்வாறு சாப்பிடும்போது இரண்டு அல்லது மூன்று தோசை பூண்டு சட்னியோடு சாப்பிட் சுவையாகவும் பயனுள்ளதாகவும்.  இருக்கும் உடல் பருமனைக்குறைக்க இது நல்ல ஒரு தீர்வாகும் ,


             வாரத்திற்கு இருமுறை கொள்ளு உண்டால் கொழுப்பை குறைத்து உடல் நலம் காக்கும்.
                இதுபோல் சிறுதானியங்களை உணவில் நாள்தோறும் சேர்த்து
கொள்வது பல நோய்களுக்கு அருமருந்தாகும்.

                 நாங்கள் ஏதாவது ஒன்றை நாள்தோறும் உணவில் சேர்த்துக
கொள்கிறோம்.  

14 கருத்துகள்:

  1. வணக்கம்
    சகோதரி

    காலையில் பசிதான் என்ன செய்வது எடுத்து சாப்பிட முடியாது... உண்மைதான் சொல்லிய விதம் நன்று பகிர்வுக்கு நன்றி.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன சகோ இப்டிசொல்லீட்டிங்க உண்மையாகவே
      எனக்கு வருத்தமாக இருக்கு இப்டி சாப்பிடமுடியாத
      தோசையை காட்சிக்கு வைத்துவிட்டோமே என்று அடடா பிள்ள சாப்டாம ஏமாந்து போச்சே.

      நீக்கு
  2. இளைத்தவனுக்கு எள்ளு
    கொழுத்தவனுக்கு கொள்ளு”
    அட இதை நான் இது வரை கேட்டதில்லையே தோசையும் சரி பழமொழியும் சரி நன்றாகவே உள்ளது. தங்கள் யோசனைக்கு நன்றி. நான் அரைத்த கொள்ளை சுவீட் யோகேட் ல் போட்டு சாப்பிடுவேன். இனிமேல் தோசையை செய்து சாப்பிடுகிறேன் சகோதரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொள்ளை வேகவைத்து அரைத்து தக்காளி சேர்த்து
      தாளித்து சாதத்தோடு பிசைந்து சாப்பிடசுவையான
      மருந்து சகோதரி.

      நீக்கு
  3. இன்றைக்கே உங்களின் செய்முறைப்படி செய்து பார்த்து விடுகிறோம்... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோ நீங்களெல்லாம் நெய்யில் வாத்துன்னா சாப்புன்னூ...சாப்பிட்டுவிட்டு மீண்டும் கருத்துப்போட
      வருவீங்கன்னு நினைக்கிறேன்.

      நீக்கு
  4. இளைத்தவனுக்கு எள்ளு
    கொழுத்தவனுக்கு கொள்ளு”

    ஆஹா ஸூப்பாகீது பளமொலி....

    பதிலளிநீக்கு
  5. ஆஹா சூப்பர்மா நீங்கள் சிறுதானியங்களில் செய்யும் உணவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும் நாளை செய்து பார்க்கிறேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றிப்பா நா உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியம் சொல்றேன்மைதிலி உட்பட ஒருசிலர் இருக்காங்க
      நான் சமைக்கிறதையும் சாப்பிடுவதற்கு (இது நமக்கெல்லாம் மிகமுக்கியமான உணவு இல்லையா?)

      நீக்கு
  6. ஆகா.. குதிரை தின்னும் கொள்ளுக்கும் வந்ததா வேட்டு? ஆனா நீங்க சொன்ன சமையல் குறிப்பை வைத்து நானும் (என் மனைவி இல்லாத போது.. பாவம் அவுங்கள ஏன் சோதிக்கணும்?) செய்து பார்க்கிறேன். நன்றி தொடருங்கள். சமையலிலேயே முழுகிடாம இலக்கியமும் எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  7. அண்ணா கால்நடைகளெல்லாம் சத்தாதான் சப்பிடுறாங்க
    (நான்காகிதத்தைசொல்லல)அண்ணியை இதோஇப்பகூப்பிட்டு சொல்றேன் நான் உங்களுக்கு செய்து கொடுக்கிறேன் அண்ணன்பக்கம் வாசத்தக்கூட காட்டாதீங்கஅண்ணின்னு.(என்தம்பிங்கதான் இப்படி நீங்களுமாண்ணா?) இன்னிக்கே எழுதுகிறேன்அண்ணா.

    பதிலளிநீக்கு