புதன், 28 ஜனவரி, 2015

கொடுப்பதற்கு ஒர் மனம் வேண்டும்.

"ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு '"

என்பதற்கேற்ப கொடையுள்ளம் கொண்ட ஆயத்த ஆடையகம்
நிறுவனத்தின் உரிமையாளர் திரு முகமது இக்பால் அவர்கள்
எங்கள்பள்ளிமாணவர்களுக்கு  இரண்டாவதுமுறையாக
(1தீபாவளி ,2பொங்கல் )என்மாணவர்களை மகிழ்சிக்கடலில்
மூழ்கவைத்தார்கள்.
     இந்த நிகழ்வு ஏற்படக்காரணமாக இருந்த அன்புச்சகோதரர்

1.எஸ் .டி .பசீர் அவர்களும்வலதுபுறம் முதலாவதாக ,
(யு,என்,டிபுள்யூ)


2.எங்கள் பள்ளியின் பசுமைக்கரங்கள் அன்புஅண்ணன் (புரவலர் ,கிராமக்கல்விக்குழு தொண்டுநிறுவன உறுப்பினர்)

3,பள்ளிப்புரவலர் ஓய்வுபெற்ற வட்டாட்சியர் எல்லா நிகழ்சிகளுக்கும்
முன்னதாகவே வந்து என்மாண வர்களோடு கலந்துரையாடுபவர்.

4ஹாஜியார் திருக்குறளை நேசிப்பவர் மனிதநேய பண்பாளர்  சாந்தசொரூபி

5.திரு.எம்.ராஜாதாஜ்முகமது, செயலளர், பெரியபள்ளிவாசல்
மாணவர்களிடம் கேள்விகள் தொடுப்பவர்.

6,திரு கே.எஸ்.முகமது இக்பால், தாரகை ஆயத்த ஆடையகம், உரிமையாளர்
கொடைவள்ளல்  பணவுள்ளம் கொண்ட பண்பாளர்

7.திரு.இராம, செல்வராஜ், பள்ளி கல்விக்குழுத்தலைவர்,  நகர்மன்ற உறுப்பினர்
பொதுப்பணிகளில் ஆர்வமுள்ளவர், தலைசிறந்த பேச்சாளர்

8,  திரு.பழனிவேலு , பள்ளிக்கல்விக்குழு துணைத்தலைவர்,
எங்கள் பள்ளியின் அனைத்து முன்னேற்றத்திற்கும் உறுதுணைபுரிபவர்


நான்காம் வகுப்பு மாணவன்     ஹரிகரன் குடிநீரின் தேவை பற்றி
பேசியது .


இதுஒரு வாலு மு.சந்தோஸ்குமார் இரண்டாம் வகுப்பு  100லிருந்து 1வரை
 தலை கீழாக சொல்லுதல்.

நான்காம் வகுப்பு மாணவி   தேவப்பிரியா 65திருக்குறளும் ஒப்புவித்தல்

இதன் தொடர்ச்சி அடுத்தபதிவுபோல் தொடர்கிறது.  அதை இணைப்பதற்கான தொழில்நுட்பம் தெரியாததால் தலைப்பில்லாமல் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டுள்ளது.  தயவுகூர்ந்து அதையும் பார்த்து கருத்துக்கள் இடவும்.

                                                  நன்றி...........

7 கருத்துகள்:

  1. வணக்கம்
    சகோதரி
    மாணவர்களின் ஆற்றல் பிரமிக்கவைக்கிறது... எங்கு நல்ல சிப்பி இருப்பின் அங்கு நல்ல சிலை உருவாகும் அது போலதான்.. படங்கள் எல்லாம் அழகு பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன“-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கு நன்றி சகோ,நம் கடமைகளைமட்டும் நாம் செய்துகொண்டு இருப்போம்
      மற்றவைஎல்லாம் தானாகவே உருவாகும்.

      நீக்கு
  2. திரு முகமது இக்பால் அவர்களுக்கு வாழ்த்துக்கள் பல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லோரெல்லாம் நலமுடன் வாழ வழ்த்திடுவோம்.

      நீக்கு
  3. ஐக்கிய நல கூட்டமைப்பின் தொண்டுகள் தொடரட்டும். வாழ்த்துக்கள். நிகழ்வைப் பகிர்ந்து கொண்ட ஆசிரியை அவர்களுக்கு நன்றி.

    // இதன் தொடர்ச்சி அடுத்தபதிவுபோல் தொடர்கிறது. அதை இணைப்பதற்கான தொழில்நுட்பம் தெரியாததால் தலைப்பில்லாமல் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டுள்ளது. //

    இதன் தொடர்ச்சிக்கு “கொடுப்பதற்கு ஒர் மனம் வேண்டும்.-
    பகுதி.2 “ என்று தலைப்பு கொடுத்தால் போதும்.

    பதிலளிநீக்கு
  4. ஐயா வாங்க அனைத்து நிகழ்சிகளையும் புகைப்படம் எடுக்கும்
    வல்லவர் நீங்கள்,ஆமாம் ஐயா தங்கள் சொல்வதுபோல் செய்திருக்கலாம் ஆலோசனைக்கு மிக்கநன்றி.

    பதிலளிநீக்கு
  5. ஐயா மாற்றிவிட்டேன் (கொடுப்பதற்கு ஓர் மனம் வேண்டும்-2)
    நன்றி.

    பதிலளிநீக்கு