சனி, 22 மார்ச், 2014

தமிழ்

தமிழின் சிறப்பை சுருக்கமாகச்சொல்லவேண்டும் அது  எல்லாதரப்பினருகும்  புரியும்படிஇருக்கவேண்டுமே, என்றுயோசித்தேன்,அதன் விளைவாக        தோன்றிய கவிதை சென்ற சுதந்திரதின ( 2013) விழா நிகழ்ச்சியில் எங்கள் பள்ளியில்   ஐந்தாம்   வகுப்புபயிலும்  மாணவி  பார்க்காமல் கூறி பாராட்டுப்பெற்றாள்.




ஆறாயிரத்திற்கும் மேற்ப்பட்ட
     மொழிகளில் ஆறில்
ஒன்றாய் அவதரித்தவள்-நீ

      மூத்தவள் நீதானே
முதுமை உன்னுள் எங்கே உள்ளது?
       எட்ட முடியாத ஏகாந்தமே!
கட்ட முடியாத கார்மேகமே!
        தொன்மை, தாய்மை
வலிமை, இளமை இவை
         எல்லாமே நீதானே!
உனை நேசிக்கத்தெரிந்தவன்
         தமிழன் மட்டுமல்ல,
அமெரிக்க அறிஞர் ஆன
        நோம்சாம்சுகியும் தான்,
அதனால் தானோ! உனை
       உலக மொழிகளுக்கெல்லாம்,
நீயே ! தாயாக வேண்டுமென்றார்,
        உன் தோற்றத்தின் காலம்
காணாமல் தேடித்தேடி
          கலைத்தே போனார்கள்!
உன் சிறப்புப்பெற்ற மொழி
          வேறு எந்த  மொழி?
ஒன்றும் இல்லை,
            ஒன்றுமே இல்லை,
வல்லினமே...........(த)
           மெல்லினமே............(மி)
இடையினமே..........(ழ்)
             இம்மூன்றும் இணைந்த
உயிரினமே !
            ஈடில்லா காவியமே!
எல்லோரா ஓவியமே !
           தமிழ், தமிழ், தமிழ்
எனக் கூறிப்பார்த்தேன் 
           என் நாவில்...........
அமிழ்து அமிழ்து அது
        ஊரக்கண்டேன்!
முத்தமிழ் படைத்த முத்தாரமே!
          உனக்கு பெயர்  சூட்ட
எத்தனை நாள் ஆனது?
           மண்டபம்  பிடித்தனரோ!
மறுநாளும் இருந்தனரோ!
          மெய்சிலிர்த்துப் போனார்களோ!
மீண்டும் நினைவிற்கு வந்தார்களோ!
            அருந்தமிழ், செந்தமிழ்
பைந்தமிழ் , தீந்தமிழ்
            தென்தமிழ், வண்டமிழ்
தண்டமிழ், நற்றமிழ் 
               நெடுந்தமிழ், அன்னைத்தமிழ்
கன்னித்தமிழ், சங்கத்தமிழ்............
              எனக்கு மூச்சிறைக்கிறதே!
இன்னும் நூற்றுப் பதினெட்டா?
                தமிழ் எனும் மூன்றெழுத்து
 எனை தடுமாற வைக்கிறது!
               ஈடு இனைஅற்றவளே!
  இயல்பான சொற்பொழிவே!  
              ஓரெழுத்து சொற்க்களை!
உன்னுள்ளே கொண்டவளே!
             நாற்பத்திரண்டு சொற்கள்,
ஒவ்வொன்றும் ஓரெழுத்தே!
             ஒய்யாரமனவளே! 
ஒளி பெற்ற தேவதையே!
             என்கருத்தை தெரிவிக்க
எதற்கம்மா? இத்தனைசொல்!
             ஒரே ஒரு சொல் போதாதா?
கூறுகின்றேன், செப்புகின்றேன்!
              உரைக்கின்றேன், விளம்புகின்றேன்!
நாற்பது சொற்களையும் 
             தனக்குள்ளே கொண்டவளே! 
நல்ல தமிழ் தேவதையே!
              எட்டே, பத்தே 
பதினெண்கீழ்க்கணக்கே!
             ஐம்பெருஞ் சிருங்காப்பியமே!
சிற்சில இலக்கியமே!
             உலகப்பொதுமரையும்
உனக்கு ஓர் அணிகலனே!
             உன்கண்நிரண்டை விட்டுவிட்டு
காதுவரை அணிகளனா?
           களைதுப் போனேனடி!
உந்தன் கதை படிக்க இயலாமல்!
           தமிழ்,தமிழ்,தமிழ்!
கேட்டுப்பார்த்தேன் கிறங்கிப்போனேன்!
           வாசிதுப்பார்த்தேன் வசியமாணேன்!
பிறர்கூறக்கேட்டேன் பிரமித்தேபோநேனடி!!!!!!!!!!!!! 

  

9 கருத்துகள்:

  1. தமிழுக்கு அணிசெயசெய்யும் அழகிய கவிதை, அதுவும் ரக்சனா ஏற்றயிரக்கத்தொடு சொல்லும் அழகே தனி தான்!
    அருமை டீச்சர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா டீச்சர் ஒரு நாளில் படித்து ஒப்புவித்தாள்.

      நீக்கு
  2. அட அட... தமிழைப்பற்றிப் பாடும்போது தமிழ் பொங்குதே! வல்லினமே...........(த)
    மெல்லினமே............(மி)
    இடையினமே..........(ழ்)
    இம்மூன்றும் இணைந்த
    உயிரினமே ! - என்பது கருத்தழகு!
    எட்ட முடியாத ஏகாந்தமே!
    கட்ட முடியாத கார்மேகமே! -
    ஈடில்லா காவியமே!
    எல்லோரா ஓவியமே !- என்பன சொல்லழகு!
    (சில எழுத்துப் பிழைகளைத் திருத்திவிடலாமே?)
    அருமை! தொடருங்கள் சகோதரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா. தங்களின் கருத்து எனை மேலும் எழுதத் தூண்டுகிறது' பிழைகளை திருத்திக்கொள்கிறேன்.

      நீக்கு
  3. ஆகா...!

    நீங்கள் மட்டும் எனது தளத்தில் கருத்துரை இடாமல் இருந்திருந்தால், ஒரு அருமையான தளத்தை தவற விட்டுவிட்டு இருப்பேன்... (இருந்தாலும் கண்டு பிடித்து விடுவேன் என்பது வேறு விசயம்... ஹிஹி)

    நன்றி... Followers ஆகி விட்டேன்... தொடர்கிறேன்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு

  4. வலைசித்தருக்கு எனது அன்பான வணக்கங்கள் எனது தளத்திற்குவந்து கருத்திட்டமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. இன்ப மொழியின் இணையில்லா சொல்லேந்தி
    வன்கவியில் வார்க்கின்றீர் வாழ்த்துகிறேன் - நல்லுலகில்
    எண்ணரிய பொக்கிசங்கள் ஏராளம் போலிதுவும்
    திண்ணிறைந்த தேவாமிர் தம்.

    அழகு .அருமை .
    படித்தேன் சுவைத்தேன் மகிழ்ந்தேன்

    வாழட்டும் தலைமுறை
    இனிய வாழ்த்து வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  6. வருக தோழரே !வணக்கம் ,கவிதையாலே கருத்தும் தந்தீர் நன்றி.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம்
    தமிழே, தமிழைப் பாடுகிறதே!

    வாழ்த்துக்கள்
    தமிழ்தாசன்
    சிங்கப்பூர்

    பதிலளிநீக்கு